Lucy : First Mission to Trojan Asteroids | கிரகத்தின் புதைபடிவங்கள் என்றுஅழைக்கப்படும் ஆஸ்டிராய்டுக்கு ஒரு விண்கலம்

Lucy Mission

NASA Lucy Mission to Trojan Asteroid Spacecraft
Lucy mission

இந்த லூசி விண்கலமானது அக்டோபர் 2021ல் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இது தான் முதல் முறையாக நாம் ஒரு டுரோஜன் ஆஸ்டிராய்டினை ஆராய அனுப்பும் விண்கலம்.

டுரோஜன் ஆஸ்டிராய்டு

ட்ரோஜன் ஆஸ்டிராய்டு என்றால் என்ன என்று ஒரு கேள்வி எழும் உங்களுக்கு.

பொதுவாக செவ்வாய் கிரகத்திற்கும் வியாழன் கிரகத்திற்கு இடையில் இருக்கும் ஒரு பகுதிதான் “முக்கிய ஆஸ்டிராய்டு பட்டை” எனப்படும் Main Asteroid Belt , இதை தாண்டி.

வியாழன் கிரகத்தினை முன்னாலும் பின்னாலும் தொடர்ந்து வரும் ஒரு குழுவான குறுங்கோள்கள் தான் இந்த ட்ரோஜன் ஆஸ்டிராய்டு.

இது பிரத்தியேகமாக உள்ள ஒருவகை குறுங்கோள், (Asteroid)

Types of Asteroid

இவை மூன்று வகைப்படும்.

  • Main Asteroid Belt
  • Trojan Asteroid
  • NEA (near earth Asteroid)

Main Asteroid Belt

இதைதான் நாம் முன்பே பார்த்தோம். அதாவது செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் இருக்கும் விண்கல் பட்டையை தான் இப்படி அழைப்பர்

Trojan Asteroid



trojan asteriod placement at Lagrangian point

எந்த ஒரு கிரகத்தினை அதன் சுற்று வட்ட பாதையிலேயே பயனிக்கும் ஆனால் கிரகத்திற்கு எந்த ஒரு இடையூரினையும் செய்யாது. இது போன்ற ஆஸ்டிராய்டினை ட்ரோஜன் ஆஸ்டிராய்டு என்று அழைப்பர்.

(Trojan Asteroid Means Asteroid that shares a Planet’s orbit but not collide with planet , it simply share the orbit)



இதுவரை செவ்வாய், வியாழன்,நெப்டியூன், மற்றும் பூமிக்கு கூட ட்ரோஜன் ஆஸ்டிராய்டு இருக்கிறது என்பதை நாசா 2011 ல் தான் கண்டு பிடித்தது.

அடுத்தது NEA (Near Earth Asteroid)

இவைகள் தான் மிகவும் ஆபத்தானவை. எப்போது வேண்டுமானாலும் இது நம் கிரகத்தோடு மோதலாம். அது மட்டும் இல்லாமல் அடிக்கடி பூமிக்கு அருகில் வந்து போகும் ஆஸ்டிராய்டினையும் நாம் NEA என்று தான் அழைப்போம்.

7 ஆஸ்டிராய்டு

NASA Lucy Mission All 7 Trojan Asteroid Images
Lucy 7 Asteroid 


7 asteroid artistic concept

2021, அக்டோபரில் வின்னில் அனுப்ப இருக்கும் இந்த லூசி விண்கலமானது 7 ட்ரோஜன் ஆஸ்டிராய்டினை ஆராயும் என நாசா தெரிவித்துள்ளது.


Lucy Mission Tamil Video



No comments