"farfarout" most distance solar system body confirmed | சூரிய குடும்பத்திலேயே மிகவும் தொலைவில் இருக்கும் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது


farfarout

நமது சூரிய குடும்பத்திலேயே அதிக தொலைவில் இருக்கும் ஒரு பொருள் கண்டறியப்பட்டுள்ளது. அதன் பெயர் "2018 AG 37" இதற்கு மற்றுமொரு பெயரும் உண்டு அது தான் "farfarout" ரொம்ப ரொம்ப தொலைவில் என்று பொருள் படும் வகையில் இதற்கு பெயர் வைத்து இருக்கிறார்கள்.

அப்படி எவ்வளவு தொலைவில் இருக்கு என்று தெரியுமா?

132 AU - 1 AU என்றால் 150 மில்லியன் கிலோ மீட்டர் (பூமிக்கும் சூரியனுக்கும் இருக்கும் நேரான தொலைவு)

உங்கள் புரிதலுக்காக சொல்லுகிறேன் நமது சூரிய குடும்பத்தில் இருக்கும் புளூட்டோ என்ற சிறிய கிரகமானது சூரியனிடமிருந்து வெறும் 39 AU தொலைவில் தான் இருக்கு.

இப்போ புரிந்து இருக்கும் உங்களுக்கு இதற்கு எதற்கு இந்த பெயர் கொடுத்து இருக்கிறார்கள் என்று


இது முதன் முதலில் கண்டறியப்பட்டது 2018 ஆம் ஆண்டில் தால்.

ஹவாயில் உள்ள சுபரி தொலைநோக்கிகள் மூலமாக இந்த ஒரு பொருள் மிகவும் தொலைவில் இருப்பது கண்டறியப்பட்டது. 

ஆனால் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பது பற்றிய தகவல்கள் சரியாக கிடைக்க வில்லை அந்த ஆராய்சியாளர்களுக்கு மேலும் பல தகவல்கள் தேவைப்பட்டன.

எனவே Sheppard மற்றும் David Tholen என்ற இரு ஆராய்சியாளர்கள். இதனை ஆராய முடிவு செய்தனர். அதற்காக ஹவாயில் உள்ள மற்றொரு Gemeni North Telescope ஐ வைத்து இந்த தொலைதூர பொருளுடைய வட்டபாதையை கணக்கிட்டனர்.

இதற்காக சில வருட காலம் இவர்களுக்கு தேவைப்பட்டது.

கடைசியில் இந்த தொலைதூர பொருளான "2018AG37" உடைய சூரியனை சுற்றிவரும் வட்டபாதை கனக்கிடப்பட்டது.

2018AG37:

  •  இது 132 வானியல் அலகுகள் தொலைவில் உள்ளது 
  • அளவானது சுமார் 400 கிலே மீட்டர் (250 மைல்கள்)
  • சூரியனை ஒருமுறை சுற்றிவர சுமார் 1000 வருடங்கள் ஆகலாம்
  • ஆனால் இதன் வட்டபாதையானது நெப்டியூனின் வட்டபாதையை தொடும் அளவிற்கு இருக்கிறது
  • இதன் உச்சபட்ச வட்ட பாதையானது அதிகபட்டசமாக 179 AU வரையும் 
  • குறைந்த பட்ச வட்ட பாதையானது 17 AU வரையிலும் செல்லுகிறது.
இது இவ்வளவு கால அளவை எடுத்துக்கொள்ளுவது எதனால் என்றால் இது மிகவும் மெதுவாக நகர்வதால் தான். 
இதனை பற்றிய துள்ளியமான தகவல்கள் மேலும் சில வருட ஆராய்சியின் பிறகே நமக்கு கிடைக்கப்பெறும்.




No comments