Tianwen-1 சைனாவின் செவ்வாய் கிரக விண்கலம் வெற்றிகரமாக வட்டபாதையில் செலுத்தப்பட்டது
கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது 12 பிப்ரவர் 2021 ஆம் நாள் அன்று
சைனாவின் விண்வெளி நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் அந்த நாட்டின் செவ்வாய் கிரக விண்கலமான தியான்வென் 1 என்ற விண்கலம் , அதில் செவ்வாயின் வட்டபாதையில் இனையும் விண்கலத்தினை கான்பித்து இருந்தனர்.
வீடியோ பார்க்க:
எப்போது நடந்தது:
இந்த நிகழ்வானது விண்கலம் வெற்றிகரமாக செவ்வாயின் வட்டபாதையில் சுற்றிவர ஆரம்பித்த பின்னர் 2 நாட்கள் கழித்து சீன விண்வெளி கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது விண்கலம் சரியாக பிப்ரவரி 10 2021 அன்று செவ்வாயின் வட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
தியான்வென் (Tianwen-1)
அப்படி என்றால் Questions to Heaven (சுவர்கத்திற்கான கேள்விகள்) என்று அர்த்தமாம்.
இந்த விண்கலத்தில் ஒரு ஆர்பிட்டர், லேண்டர் , மற்றும் ரோவர் என்று எல்லா அறிவியல் அமைபுகளும் இருக்கிறது.
கடந்த வருடம் ஜூலை மாதம் இது அனுப்பப்பட்டது. உங்களுக்கு நினைவிருக்கலாம். (HOPE & Perseverance rover also sent of Same Timeline)
அதுமட்டும் இல்லாது இந்த சீன நிறுவனமானது வருகின்ற 2022 ஆம் ஆண்டிற்குள் மணிதனை செவ்வாய்க்கு அனுப்பவும் திட்டமிட்டு இருக்கின்றனர்.
விண்கலத்தின் திட்டவிவரம்:
இந்த தியான்வென் -1 இன் ரோவரானது (லேண்டர் மற்றும் ரோவர்) இந்த வருடம் மே மாத வாக்கில் செவ்வாயில் தரையிரக்கப்படலாம். என கருதப்படுகிறது.
இந்த 240 கிலோ எடை இருக்ககூடிய ரோவரானது செவ்வாயின் உடோபியா என்ற ஒரு விண்கல் பள்ளத்தாக்கில் தரையிரக்கப்படும். (Utopia is a Impact Basin On Mars)
மற்றும் அதன் ஆர்பிட்டரானது ஒரு ஆண்டு வரை செயல்படும் செவ்வாயின் கணக்கு படி (பூமி கணக்கில் 2 ஆண்டுகள் )
Post a Comment