Prelude to Supernova | சூப்பர் நோவா நிகழ்வுக்கு முன்னாள் எப்படி இருக்கும்
WR 124 என்று அழைக்கப்படும் நட்சத்திரம் சூப்பர் நோவா என்று சொல்லும் வெடித்து சிதறும் நிகழ்வை அடைய இருக்கிறது.(😂 May be அது ஏற்கனவே அடைந்து இருக்கலாம் 😂)
இந்த நிகழ்விற்கு முன்னாள் பலவிதமான தூசுக்களையும் வாயுக்களையும் இது வெளியேற்றுகிறது.
இதன் விளைவாக வாயு மற்றும் தூசியின் ஒளிவட்டம் ஏற்படுகின்றது.
இந்த நிகழ்வினை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி யின் அகச்சிவப்பு அலைவரிசை கருவியின் மூலம் கண்டறிந்துள்ளது.
விளக்கம்:
இந்த நட்சத்திரம் பூமியில் இருந்து 15000 ஒளியாண்டு கள் தொலைவில் உள்ள sagitta சஜிட்டா என்னும் நட்சத்திர தொகுப்பில் உள்ளது.
இதன் பெயர் Wolf Rayet 124 . இதனை சுருக்கி WR 124 என்கின்றனர்.
இது சுமாராக நமது சூரியனை போன்று 30 மடங்கு அதிக நிறையுடையதாக கருதப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இது வரைக்கும் இது 10 சூரியன்கள் அளவிற்கான வாயுக்களையும், தூசியையும் வெளியேற்றியது.
வெளியேறிய தூசிக்கள் மற்றும் வாயு குளிர்ந்து இருப்பதால்.
வெப் தொலைநோக்கியின் அகச்சிவப்பு அலைவரிசை கருவியில் இது ஒளிர்ந்து காணப்பட்டது.
இது போன்ற நிகழ்வுகள் விண்வெளி அறிவியல்லாளர்களுக்கு அதிகப்படியான தகவல்களை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக உள்ளன.
நன்றி
Post a Comment