February 21, 2021

Indian Space Telescope "AstroSat" Found a Earliest Galaxy in Hubble Deep Field

AstroSat: Indian Space Telescope

இந்தியாவின் முதல் பல் அலைதிறன் கொண்ட விண்வெளி செயற்கைகோளான "AstroSAT" ஆனது முதன் முதலாக பிரபஞ்சத்தில் மிகவும் தூரத்தில் உள்ள அதாவது

 இந்த பிரபஞ்சத்தில் ஆரம்ப காலத்தில் உருவான கேலக்ஸி ஒன்றை "தீவிர புரஊதா கதிரை" கொண்டு கண்டறிந்து உள்ளது..

 இந்த செய்தி இஸ்ரோ இனைய தளத்தில் ஆகஸ்டு 27 ,2020 இல் பதிவேற்றப்பட்டுள்ளது. ( ISRO Link)

ஆனால் இந்த செயலானது 2016 ஆம் ஆண்டிலேயே துவங்கப்பட்டுள்ளது. அதாவது ஹப்புள் Deep Field கு அடங்கிய ஒரு பகுதியை, சுமாராக 28 மனிநேரங்கள் ஆராய்ந்து இருக்கிறார்கள்.

 UV light எங்காவது வெளிப்படுகிறதா என்று பார்க்க.

 இது நடந்தது அக்டோபர் 2016 இல், 

பிறகு கிடைக்க பெற்ற தீவிர புற ஊதா கதிர்கள் , ஒரு பழமையான கேலக்ஸிக்கு சொந்தமானது தான் என்பதை உறுதிபடுத்த அவர்களுக்கு 4 வருடங்கள் தேவைப்பட்டுள்ளது.

இந்த கதிர் பூமியில் இருந்து சுமார் 9.1 பில்லியன் ஒளியாண்டுகள் தூரம் உள்ள AUDFs01 என்ற கேலக்ஸியில் இருந்து வந்துள்ளது. (அது மட்டும் இல்லாமல் இது தான் முதல் முறை ஒரு கேலக்ஸியை தீவிர புற ஊதா கதிரினை கொண்டு கண்டுபிடிப்பது.)  

( this is the first time a galaxy has been observed in the extreme ultraviolet light) - weather.com


இந்த கண்டுபிடிப்பினை உலகலாவிய விண்வெளியாளர்கள் அடங்கிய குழு கண்டறிந்து உள்ளது. தலைவராக Dr. Kanak Saha என்பவர் உள்ளார் இவர் பூனேயில் உள்ள வானியல் மற்றும் வானியற்பியலுக்கான பல்கலைக்கழக மையத்தில் உள்ளவர்.

இது பற்றிய விவரமான அறிக்கை Nature Astronomy என்ற இடையதளத்தில் வெளியாகியும் உள்ளது. (Read on : Nature.com)



இவர்கள் ஆராய்ந்த இந்த AUDFs01 என்ற கேலக்ஸியானது "Hubble extreme deep field" உள்ள ஒரு பகுதியாகும்.


இந்த சாதனைக்கு காரணம் அஸ்ட்ரோ சாட் இல் உள்ள UVIT kகருவியாகும். 

ஏனெனில் இதில் , background noise என்று சொல்லப்படும் ஒரு விஷயம் சற்று குறைவாகவே உள்ளது. 

ஹப்புள் விண்வெளி தொலைநோக்கியை காட்டிலும் இதில் மிகவும் குறைவு என்பதாலே இந்த அளவு இதனால் வேலை செய்ய முடிந்தது என்று Dr.Saha அவர்கள் கூறியுள்ளார்கள்.

Article Reference:

https://www.outlookindia.com/website/story/india-news-indias-astrosat-discovers-one-of-the-earliest-galaxies-in-extreme-uv-light/359256

https://weather.com/en-IN/india/space/news/2020-08-26-indias-astrosat-discovers-an-ancient-galaxy

https://www.isro.gov.in/indias-astrosat-discovers-one-of-earliest-galaxies-extreme-ultraviolet-light-and-marks-major


First Ever Color Image of the Mars by Perseverance Rover

 செவ்வாய் ஒரு சிவப்பு கிரகம் என்று நமக்கு சொல்லிருக்கிறார்கள். ஆனால் அந்த கிரகத்தின் நாம் நம் பூமியில் பயன்படுத்தும் சாதாரன வன்ண காமிரா கொண்டு படம் பிடித்தால் எப்படி இருக்கும் என்பது யாருக்காவது தெரியுமா?

செவ்வாயில் வண்ணம் இப்படித்தான் இருக்கும்

பொதுவாக எந்த ஒரு புகைப்படமாக இருந்தாலும் அதில் (Color Correction) புகைப்பட திருத்தம் என்று கூறு அதன் வன்ணங்களை கூடுதலே குறைத்தலே செய்வார்கள். ஆனால்

இந்த இரண்டும் அப்படி இல்லை. உண்மையான செவ்வாயின் வண்ண புகைப்படம்.

முதல் படம்

mars color image from perseverance rover mars 2020 color image of mars | 20 Megapixel Camera Image

இந்த படமானது விடாமுயற்சி ரோவரின் சக்கரத்தின் அருகே இருக்கும் கேமிரா இது 20 மெகா பிக்ஸல் கேமிராவாகும்

மேலுல்ல புகைப்படத்தில் செவ்வாயின் தெரியும் தரைப்பகுதியில் உள்ள சிறு சிறு பள்ளங்களை பார்க்கலாம். 

(அதாவது சிறிய எறும்பு அல்லது கரையான் புற்று ஓட்டைகள் போல் உள்ளது )
அந்த சிறிய துவாரங்கள் எப்படி வந்திருக்கும் போன்ற கேள்விகள் பல எழுந்துள்ளது.

இந்த புகைப்படங்களை அறிவியலாலர்கள் பலர் ஆராய்சி சிது வருகின்றனர்.

இரண்டாவது படம்


Color Image of Mars Hazard Cam Picture

இந்த படமானது (Hazard camera) ஆபத்து கால புகைப்பட கருவியை கொண்டு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம். 

அதாவது. ரோவரின் சக்கரம் எப்படி இருக்கிறது . அது மணலில் புதைந்துள்ளதா. போன்றவற்றினை இந்த கேமரா கொண்டுதான் கண்டுபிடிப்பார்கள்.


வீடியோ:



இந்த புகைப்படத்தின் பாதுகாப்பு கவர் பொருத்தப்பட்ட படத்தினைத்தான் நீங்கள் போன பதிவில் பார்த்தது.

மீண்டும் ஒரு செய்தியுடன் வருகிறேன். நன்றி

February 18, 2021

Gaaganyaan Update: Before 2023 there is no Manned Mission | 2023 க்கு முன் மனித விண்வெளி பயனம் கிடையாது மத்திய அமைச்சர்

 ககன்யான் திட்டம் புதிய செய்தி: 

சிவன் இஸ்ரோ தலைவர் Gaganyaan Delay by upto 2023 ISRO Head K.Sivan Interview 2021  Latest


மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் புதிய திருப்பம்.

2020 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பிரச்சனையால் இஸ்ரோவின் அனைத்து திட்டங்களின் தேதியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2021 டிசம்பர் மாதத்தில் முதல் ஆளில்லா சோதனை ஓட்டம் நடைபெறும். இதில் ஹுமனாய்டு ரோபோ பயன்படுத்தப்படும். 

(அந்த ஹுமனாய்டு ரோபோவானது வருகின்ற அக்டோபர் மாதர் தயாராகும் )

2022 - 2023 ஆம் ஆண்டுக்குள் மற்றும் ஒரு  ஆளில்லா விண்கலம் சோதனை ஓட்டம் நடைபெறும் அதற்கு அடுத்து தான் அதாவது 2023 க்கு பிறகுதான் முதன் முதலில் ஒரு சோதனை ஓட்டம் மனிதர்களை வைத்து நடைபெறும் 

First Unmanned mission is planned in December 2021. Second unmanned flight is planned in 2022-23, followed by human spaceflight demonstration,"

-Union minister of state for space Jitendra Singh

தயாரிப்புகள்:

இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயனத்திற்காக GSLV mk III இன் புதிய மாற்றியமைக்கப்பட்ட முன் பகுதி தயாராகிக்கொண்டிருக்கிறது (modified top portion of GSLV Mk3) 
இது முழுக்க முழுக்க "குழு தொகுதி" (Crew Module) மற்றும் "குழுவின் தப்பிக்கும் அமைப்பின்" (Crew Escape system )சரியாக பொருந்தப்படுவதற்காகவே பிரத்தியேகமாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது .
இதனை அவர்கள் Human Rated GSLV Mk 3 என்று அழைக்கின்றனர்.
காகன்யான் விண்வெளியாளர்கள் சிறப்பு உடை


புதிய பட்ஜெட்:

    ஓவ்வொரு வருடமும் இஸ்ரோவுக்கு என்று புதிய பட்ஜெட் கொடுக்கப்படும். அந்த வகையில் 2020-2021 ஆம் ஆண்டிற்காக இஸ்ரோவுக்கென்று சுமார் 900 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அது மட்டும் இல்லாமல் இஸ்ரோ இதுவரை 328 வெளி நாட்டு செயற்கைகோள்களை வின்ணில் ஏவியுள்ளது. அதன் மூலம் சுமார் 25 மில்லியன் அமெரிக்க டாலர்களும் 189 மில்லியன் யூரோக்களும் வருவாய் ஈட்டியுள்ளது.

அடுத்த புதிய முயற்சிகள்:

நீங்க என்ன நினைக்குறீங்க , ஒரு முறை மட்டுமே இந்தியரை விண்வெளிக்கு அனுப்புவாங்க. அதோடு அதைபற்றி பேச மாட்டாங்ன்னு நினைக்கிறீங்களா?

அப்படி இல்லை இஸ்ரோவுக்கு ககன்யான் மட்டுமே தனிப்பட்ட திட்டம் கிடையாது . 

அதை தாண்டி "விண்வெளியில் இந்திய மனிதர்களை தங்க வைக்கும்" (Sustained human presence in space by ISRO) ஒரு மிகப்பெரிய திட்டத்தினையும் கையில் எடுத்து இருக்கிறார்கள். அதற்கான கொள்கைகள் இப்போது அமைக்கப்பட்டு வருகின்றன.

அதில் முதல் கட்டமாக செயற்கைகோள்களில்  (Electronic Propulsion ) மின்னனு உந்து விசை பயன்படுத்தப்போவதாக கூறி வருகின்றனர். அதுவும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது.

இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட புத்தம் புதிய மூன்று தொழில் நுட்பங்களை சோதனையாக பயன்படுத்த இருக்கின்றனர்.

  • travelling wave tube amplifier (used on communication satellite to improve the data speed)
  • our own atomic clock
  • oru own Electronic Propulsion system
அதையும் தாண்டி:
ககன்யான் திட்டத்தினை தாண்டி, இந்த வருடம் SSLV என்று அழைக்கப்படும் சிறிய ரக செயற்கைகோள் ஏவுகனையை சோதனை ஓட்டம் செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர்.


February 17, 2021

spacex puts 60 satellite in orbit and booster engine into seas | 60 செயற்கைகோளை விண்ணிலும் ராகெட் பூஸ்டரை கடலிலும் ஏவினர்

 இது எப்போதும் வழக்கமான செயல்தான்.

space x puts 60 starlink satellite in orbit and a rocket booster into the ocean LOL


எப்போதும் போல் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது "ஸ்டார்லிங்க்" Starlink" தொகுப்பிற்காக பல சிறிய வகை செயற்கைகோள்களை விண்ணில் ஏவி வருகிறது அந்த வகையில் பிப்ரவர் 15 ஆம் தேதி 

60 ஸ்டார்லிங்க் செயற்கைகோள்களை ஃபால்கன் 9 ராக்கெட் வழியாக வின்ணில் செலுத்தினர். ஆரம்ப கட்ட ஏவுதலும். சிறந்த விதத்தில் தான் இருந்தது . அதே போல் சிறிய ரக செயற்கைகோள்களும் சரியாக வின்ணில் நிலைநிறுத்தப்பட்டன. 

ஆனால் ராக்கெட் பூஸ்டர் மட்டும் எப்போது போல் நிர்ணயிக்க பட்ட தளத்தில் வந்து இரங்காமல் . கடலில் விழுந்தது.

இதனை தேடும் முயற்சியில் ஸ்பேஸ் எக்ஸ் ஈடுபட்டுள்ளது.

அதில் பாதி பாகங்கள் கிடைத்திருப்பதாகவும் எலன் மஸ்க் அவர்கள் கூறியுள்ளார்.

டிவுட்டர்

VIDEO



Source


February 16, 2021

"farfarout" most distance solar system body confirmed | சூரிய குடும்பத்திலேயே மிகவும் தொலைவில் இருக்கும் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது


farfarout

நமது சூரிய குடும்பத்திலேயே அதிக தொலைவில் இருக்கும் ஒரு பொருள் கண்டறியப்பட்டுள்ளது. அதன் பெயர் "2018 AG 37" இதற்கு மற்றுமொரு பெயரும் உண்டு அது தான் "farfarout" ரொம்ப ரொம்ப தொலைவில் என்று பொருள் படும் வகையில் இதற்கு பெயர் வைத்து இருக்கிறார்கள்.

அப்படி எவ்வளவு தொலைவில் இருக்கு என்று தெரியுமா?

132 AU - 1 AU என்றால் 150 மில்லியன் கிலோ மீட்டர் (பூமிக்கும் சூரியனுக்கும் இருக்கும் நேரான தொலைவு)

உங்கள் புரிதலுக்காக சொல்லுகிறேன் நமது சூரிய குடும்பத்தில் இருக்கும் புளூட்டோ என்ற சிறிய கிரகமானது சூரியனிடமிருந்து வெறும் 39 AU தொலைவில் தான் இருக்கு.

இப்போ புரிந்து இருக்கும் உங்களுக்கு இதற்கு எதற்கு இந்த பெயர் கொடுத்து இருக்கிறார்கள் என்று


இது முதன் முதலில் கண்டறியப்பட்டது 2018 ஆம் ஆண்டில் தால்.

ஹவாயில் உள்ள சுபரி தொலைநோக்கிகள் மூலமாக இந்த ஒரு பொருள் மிகவும் தொலைவில் இருப்பது கண்டறியப்பட்டது. 

ஆனால் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பது பற்றிய தகவல்கள் சரியாக கிடைக்க வில்லை அந்த ஆராய்சியாளர்களுக்கு மேலும் பல தகவல்கள் தேவைப்பட்டன.

எனவே Sheppard மற்றும் David Tholen என்ற இரு ஆராய்சியாளர்கள். இதனை ஆராய முடிவு செய்தனர். அதற்காக ஹவாயில் உள்ள மற்றொரு Gemeni North Telescope ஐ வைத்து இந்த தொலைதூர பொருளுடைய வட்டபாதையை கணக்கிட்டனர்.

இதற்காக சில வருட காலம் இவர்களுக்கு தேவைப்பட்டது.

கடைசியில் இந்த தொலைதூர பொருளான "2018AG37" உடைய சூரியனை சுற்றிவரும் வட்டபாதை கனக்கிடப்பட்டது.

2018AG37:

  •  இது 132 வானியல் அலகுகள் தொலைவில் உள்ளது 
  • அளவானது சுமார் 400 கிலே மீட்டர் (250 மைல்கள்)
  • சூரியனை ஒருமுறை சுற்றிவர சுமார் 1000 வருடங்கள் ஆகலாம்
  • ஆனால் இதன் வட்டபாதையானது நெப்டியூனின் வட்டபாதையை தொடும் அளவிற்கு இருக்கிறது
  • இதன் உச்சபட்ச வட்ட பாதையானது அதிகபட்டசமாக 179 AU வரையும் 
  • குறைந்த பட்ச வட்ட பாதையானது 17 AU வரையிலும் செல்லுகிறது.
இது இவ்வளவு கால அளவை எடுத்துக்கொள்ளுவது எதனால் என்றால் இது மிகவும் மெதுவாக நகர்வதால் தான். 
இதனை பற்றிய துள்ளியமான தகவல்கள் மேலும் சில வருட ஆராய்சியின் பிறகே நமக்கு கிடைக்கப்பெறும்.




A New Dwarf Planet in Our Solar System is the Most Far Out Planet | சூரிய குடும்பத்திலேயே மிகவும் தொலைவில் உள்ள புதிய கிரகம் கண்டிபிடிப்பு

2018 VG 18 Farout Details in Tamil | Space News in Tamil Planetoid News in Tamil | most distance body of solar system is called "farout"

தொலைதூர கிரகம்

நமது சூரியக் குடும்பத்திற்கு அப்பால் மிகவும் தொலைவில் ஒரு சிறிய கிரகத்தினை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்  இதன் பெயரானது 2018 VG18 என்பதுதான் ஆனால் இதற்கு மற்றொரு பெயர் வைத்துள்ளனர் அது என்ன தெரியுமா (farout) ஃபார் அவுட் என்பதுதான்.  இது ஒரு சிறிய கிரகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

புளூட்டோ:

பெயருக்கு ஏற்றார் போல எந்த கிரகமும் புளூட்டோவிலிருந்து கிட்டத்தட்ட மூன்று மடங்கு தொலைவில் உள்ளது அதாவது நாம் பூமியிலிருந்து கிட்டத்தட்ட 18 பில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் நம் பூமியில் இருந்து ப்ளூட்டோ எவ்வளவு தொலைவு என்று உங்களுக்கு தெரியும்  தானே, அது போல மூன்று மடங்கு தொலைவில் இருப்பது தான் இந்த கிரகம் இந்த ஹவாய் தீவு தீவிலுள்ள ஜப்பானிய தொலைநோக்கி மூலம் கண்டறிந்தனர் இந்த தொலைநோக்கி பெயர் subaru

இது Planet X அல்லது நிபுரூவா

இந்த கிரகத்தினை கண்டறிந்த Scott Sheppard அறிவியலாளர்  Carnegie Institution for Science in Washington DC. இவர் இது பற்றி கூறுகையில் இந்த அளவு தொலைவில் இந்த கிரகம் இருப்பதற்கான காரணங்கள் ஏதும் புரியவில்லை. என்றும் மேலும் இந்த கிரகத்தின் இந்த வித்தியாசமான வட்ட பாதைக்கு காரணமாக இருப்பது, வேண்டுமென்றால் மிகப்பெரிய கிரகம் ஒன்று இருப்பதாக கருதப்படும் பிளானெட் எக்ஸ் அல்லது நிபிரு என்ற ஒரு மிகப்பெரிய கிரகமாக இருக்கலாம் என்றும் இவர் கூறியுள்ளார். இது அனுமானங்களே தவிர இதைப் பற்றிய சரியான முடிவை இதுவரை எடுக்கவில்லை யாரும் இந்த கிரகத்தை கண்டறிந்த அந்த அறிவியலாளர்கள் கூறிய செய்துதான் இது.

Source | Google News

February 15, 2021

Tianwen-1 சைனாவின் செவ்வாய் கிரக விண்கலம் வெற்றிகரமாக வட்டபாதையில் செலுத்தப்பட்டது

 கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது 12 பிப்ரவர் 2021 ஆம் நாள் அன்று

China's Mars orbiter Enter Mars's Orbit Successfully in feb 10th 2021


சைனாவின் விண்வெளி நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் அந்த நாட்டின் செவ்வாய் கிரக விண்கலமான தியான்வென் 1 என்ற விண்கலம் , அதில் செவ்வாயின் வட்டபாதையில் இனையும் விண்கலத்தினை கான்பித்து இருந்தனர்.

வீடியோ பார்க்க:


எப்போது நடந்தது:

    இந்த நிகழ்வானது விண்கலம் வெற்றிகரமாக செவ்வாயின் வட்டபாதையில் சுற்றிவர ஆரம்பித்த பின்னர் 2 நாட்கள் கழித்து சீன விண்வெளி கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது விண்கலம் சரியாக பிப்ரவரி 10 2021 அன்று செவ்வாயின் வட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

தியான்வென் (Tianwen-1)

    அப்படி என்றால் Questions to Heaven (சுவர்கத்திற்கான கேள்விகள்) என்று அர்த்தமாம்.

இந்த விண்கலத்தில் ஒரு ஆர்பிட்டர், லேண்டர் , மற்றும் ரோவர் என்று எல்லா அறிவியல் அமைபுகளும் இருக்கிறது.

கடந்த வருடம் ஜூலை மாதம் இது அனுப்பப்பட்டது. உங்களுக்கு நினைவிருக்கலாம். (HOPE & Perseverance rover also sent of Same Timeline)

அதுமட்டும் இல்லாது இந்த சீன நிறுவனமானது வருகின்ற 2022 ஆம் ஆண்டிற்குள் மணிதனை செவ்வாய்க்கு அனுப்பவும் திட்டமிட்டு இருக்கின்றனர்.

விண்கலத்தின் திட்டவிவரம்:

இந்த தியான்வென் -1 இன் ரோவரானது (லேண்டர் மற்றும் ரோவர்) இந்த வருடம் மே மாத வாக்கில் செவ்வாயில் தரையிரக்கப்படலாம். என கருதப்படுகிறது.

இந்த 240 கிலோ எடை இருக்ககூடிய ரோவரானது செவ்வாயின் உடோபியா என்ற ஒரு விண்கல் பள்ளத்தாக்கில் தரையிரக்கப்படும். (Utopia is a Impact Basin On Mars)

மற்றும் அதன் ஆர்பிட்டரானது ஒரு ஆண்டு வரை செயல்படும் செவ்வாயின் கணக்கு படி (பூமி கணக்கில் 2 ஆண்டுகள் )

Source

Seven Minutes of Terror Come for Perseverance Rover | 7 நிமிட போராட்டத்திற்கு தயாராகும் நாசா

 இன்னும் 3 தினங்கள் தான் உள்ளது. 

Perseverance rover 7 minutes of terror while descend to Mar's Land


நாசாவின் விடாமுயற்சி (Perseverance Rover) ரோவர் செவ்வாயில் தரையிரங்க நிர்னயித்த கால கட்டத்தினை நெருங்கிவருகிறது. 

நாசாவின் கணக்கு படி பிப்ரவரி 18 2021 இல் தரையிரங்கும். இதை நாம் சாதாரணமாக கூறிவிடுகிறோம்.

ஆனால் ஒரு விண்கலத்தினை வேறு ஒரு கிரகத்தில் தரையிரக்குவது எவ்வளவு கடினம் என்பது அங்கு இருக்கும் விண்வெளி அறிவியலாலர்களுக்கு தான் தெரியும் .

அதிக பொறுப்பு :

அதுவும் முக்கியமாக இந்த ரோவர்தான் இதுவரை நாசா தரையிரக்கிய ரோவர்களிலேயே மிகவும் அதிக எடியுடையது மற்றும் இதுவரை இல்லாத அளவு அதிக தொழில் நுட்ப சக்தி

Perseverance Rover Name Plate

பெற்றது.

இதன் மொத்த செலவு 2.7 பில்லியன் டாலர் அதாவது 19,600 கோடி இந்திய ரூபாய் மதிப்பு.

இதன் மொத்த எடை : 1025 kilo gram


கீழிரங்கும் நிகழ்வு:

பெரும்பாலும் இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிரங்குவதை நம்மால் பார்வையிடதான் முடியுமே தவிர . எந்த உதவியையும் செய்ய இயலாது. 

இது முழுக்க முழுக்க தனித்து இயங்கும். (Descend will be Autonomous) 

இதனை 7 நிமிட போராட்டம் என்று நாம் பெயர் வைத்து இருக்கிறோம்.

அதாவது செவ்வாயில் மெல்லிய வளிமண்டலத்தில் இருந்து, தரைப்பகுதிக்கு கீழிரங்கும் போது ஒரு வித ரேடியோ சிக்னலை அனுப்பும் . அந்த ரோவர்.

அந்த தகவல் நம்மை வந்து அடைவதற்குள் அங்கு ரோவர் தரையிரங்கியே இருக்கலாம். 

CircuitDistanceDelay Time
Earth-Moon384,000 km1.3 s
Earth-Mars55 - 378 million km3 - 21 minutes
Earth-Jupiter590 - 970 million km33 - 53 minutes
Earth-Pluto~5800 million km5 hours

நீங்கள் நினைக்கலாம் , ஆனால் நாம் சந்திரயான் 2 விக்ரம் ரோவரை தரையிரக்கிய போது நேரடியாக காண்பது போல் அல்லவா இருந்தது. 

செவ்வாய்க்கு மட்டும் ஏன் இவ்வளவு நேரம்.?

இது பொதுவாக செவ்வாய் - பூமி எங்கு இருக்கின்றது என்பதை பொருத்து மாறுபடும்.

கண்டுபிடிப்புகள்:

இந்த ரோவர் மிகவும் அதிக தொழில் நுட்பங்களை தன்னுள் அடக்கி வைத்துள்ளது . இவை அனைத்தும் செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்துள்ளனவா? என்பதை பற்றிய ஆராய்சிக்காகவே இருக்கும்.

அதோடு சேர்த்து ingenuity என்ற ஒரு சிறிய ஹெலி காப்டரும் (Mars Helicopter)செவ்வாயில் வலம் வரும்.

பார்க்கலாம் எப்படி இருக்க போகிறது.

இது சரியாக நடந்து முடிக்கப்பட்டது என்ற பட்சத்தில் நமக்கு செவ்வாய் கிரகம் பற்றிய பல அரிய மற்றும் இதுவரை கிடைத்திடாத தகவல்கள் கிடைக்கும். 

காத்திருப்போம்.

Mars 2020 Rover name Contest Winning Essay

Source


Lucy : First Mission to Trojan Asteroids | கிரகத்தின் புதைபடிவங்கள் என்றுஅழைக்கப்படும் ஆஸ்டிராய்டுக்கு ஒரு விண்கலம்

Lucy Mission

NASA Lucy Mission to Trojan Asteroid Spacecraft
Lucy mission

இந்த லூசி விண்கலமானது அக்டோபர் 2021ல் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இது தான் முதல் முறையாக நாம் ஒரு டுரோஜன் ஆஸ்டிராய்டினை ஆராய அனுப்பும் விண்கலம்.

டுரோஜன் ஆஸ்டிராய்டு

ட்ரோஜன் ஆஸ்டிராய்டு என்றால் என்ன என்று ஒரு கேள்வி எழும் உங்களுக்கு.

பொதுவாக செவ்வாய் கிரகத்திற்கும் வியாழன் கிரகத்திற்கு இடையில் இருக்கும் ஒரு பகுதிதான் “முக்கிய ஆஸ்டிராய்டு பட்டை” எனப்படும் Main Asteroid Belt , இதை தாண்டி.

வியாழன் கிரகத்தினை முன்னாலும் பின்னாலும் தொடர்ந்து வரும் ஒரு குழுவான குறுங்கோள்கள் தான் இந்த ட்ரோஜன் ஆஸ்டிராய்டு.

இது பிரத்தியேகமாக உள்ள ஒருவகை குறுங்கோள், (Asteroid)

Types of Asteroid

இவை மூன்று வகைப்படும்.

  • Main Asteroid Belt
  • Trojan Asteroid
  • NEA (near earth Asteroid)

Main Asteroid Belt

இதைதான் நாம் முன்பே பார்த்தோம். அதாவது செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் இருக்கும் விண்கல் பட்டையை தான் இப்படி அழைப்பர்

Trojan Asteroid



trojan asteriod placement at Lagrangian point

எந்த ஒரு கிரகத்தினை அதன் சுற்று வட்ட பாதையிலேயே பயனிக்கும் ஆனால் கிரகத்திற்கு எந்த ஒரு இடையூரினையும் செய்யாது. இது போன்ற ஆஸ்டிராய்டினை ட்ரோஜன் ஆஸ்டிராய்டு என்று அழைப்பர்.

(Trojan Asteroid Means Asteroid that shares a Planet’s orbit but not collide with planet , it simply share the orbit)



இதுவரை செவ்வாய், வியாழன்,நெப்டியூன், மற்றும் பூமிக்கு கூட ட்ரோஜன் ஆஸ்டிராய்டு இருக்கிறது என்பதை நாசா 2011 ல் தான் கண்டு பிடித்தது.

அடுத்தது NEA (Near Earth Asteroid)

இவைகள் தான் மிகவும் ஆபத்தானவை. எப்போது வேண்டுமானாலும் இது நம் கிரகத்தோடு மோதலாம். அது மட்டும் இல்லாமல் அடிக்கடி பூமிக்கு அருகில் வந்து போகும் ஆஸ்டிராய்டினையும் நாம் NEA என்று தான் அழைப்போம்.

7 ஆஸ்டிராய்டு

NASA Lucy Mission All 7 Trojan Asteroid Images
Lucy 7 Asteroid 


7 asteroid artistic concept

2021, அக்டோபரில் வின்னில் அனுப்ப இருக்கும் இந்த லூசி விண்கலமானது 7 ட்ரோஜன் ஆஸ்டிராய்டினை ஆராயும் என நாசா தெரிவித்துள்ளது.


Lucy Mission Tamil Video



2021 இல் இஸ்ரோவின் முக்கிய பணிகள் எவை?

 கடந்த ஜனவரி 31 2021 , அன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இஸ்ரோ தலைவர் K.சிவன் அவர்கள் அளித்த பதில்களை பார்ப்போம்.


Embed from Getty Images

கொரோனாவுடைய தாக்குதலுக்கு பிறகு இந்த ஆண்டு 2021 இல் இஸ்ரோவின் முக்கிய பணிகள் எவையாக இருக்கும்?

பதில் : 

    எங்களுடைய முக்கிய பணியாக இருக்கபோவது, In-Space (Indian National Space Promotion and Authorization Center) என்று ஆரம்பிக்கப்பட்ட இஸ்ரோவின்  ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்ட அந்த அமைப்பினை திறம்பட மேலெடுத்து செல்வது தான். அது மட்டும் இல்லாமல் அதற்காக இந்தியாவில் இருக்கும் தனியார் வின்வெளி துறை நிறுவனகளை இஸ்ரோவில் இனைப்பதற்கான வின்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது முக்கிய பனியாக இருக்கும், பிறகு,

எங்களின் அடுத்த முக்கிய பனியாக இருப்பது ககன்யான், இது தொடர்பான பனிகளும் முழுவீச்சில் நடக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.

அதன் பிறகு இருப்பது சந்திரயான் திட்டம் மற்றும் அதனை தொடர்ந்து வரும் அறிவியல் சார்ந்த சூரியனை ஆராய அனுப்ப இருக்கும் ஆதித்யா L1 மற்றும் ரேடார் இமேஜீங்க் சாட்டிலைட் RISAT-1A 

மற்றும் SSLV என்று அழைப்பட கூடிய சிறிய  ரக ராக்கெட் ஏவுகனை வாகனங்கள். 

இவைதான் எங்களின் இந்த 2021 ஆம் ஆண்டு முக்கிய பணிகளாக இருக்கும்.

ககன்யான் சம்பந்தமாக விண்வெளி வீரர்கள் பயிற்சி எந்த நிலையில் உள்ளது?

பதில்:

    தேர்ந்தேடுக்கப்பட்ட் 4  இந்திய விமானப்படையை விமானிகளும் இஸ்ரோவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்காக பயிற்சி ரஷ்யாவில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்போது அவர்களுக்கு விண்வெளியின் கடும் குளிர் அதிகமாக சூழலை சமாலிப்பதற்கான எல்லா பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

அது போன்று ஒரு சில குறிப்பிட்ட பணிகளுக்கு சில பிரத்தியேக பயிற்சிகள் அளிக்கப்படும். அத்துடன் சேர்த்து ஒரு சில கோட்பாடு சம்பந்தமாக வகுப்புகளும் நடக்கும், (Generic Training and Also Some Theory classes too)

இவர்களுடைய பயிற்சி வரக்கூடிய மார்ச், ஏப்ரல் 2021 மாதங்களில் முடிவடைய அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. 

அது மட்டும் இல்லாமல் இந்தியா திரும்பிய பிறகு அவர்களுக்கு (Mission Specific Training ) பணி குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

பனிகுறித்த சிறப்பு பயிற்சி எந்த மாதிரியானதாக இருக்கும்.?

பதில்:

    பணி குறித்த சிறப்பு பயிற்சிகளில் அவர்களுக்கு  (Emergency Situations) ஆபத்தான காலங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்படும்.

இந்த பயிற்சிகள் பெங்களூருவில் இருக்கும் இஸ்ரோவின் செயற்கைகோள் பயிற்சி மற்றும் சோதனை மையத்தில் தான் நடை பெறும். 

அதோடு சேர்த்து உடல் தகுதி  பயிற்சிகளும் தொடர்ந்து நடைபெறும்.(Continuous Training for physical fitness)

ககன்யான் சோதனை ஓட்டம் எப்போது?

பதில் :

    ககன்யான் சம்பந்தமாக அனைத்து பனிகளும் , மற்றும் வடிவமைப்புகளும் (Designs are finalised ) இறுதி கட்டத்தினை அடைந்துள்ளது. இந்த வருடத்தில் ஜூலை மாத காலகட்டத்திற்குல் இஸ்ரோ 2 (Uncrewed) ஆளில்லா சோதனை ஓட்டத்தினை முடிக்கவும், இந்த வருட இறுதியில்  அதாவது டிசம்பர் 2021 ல் 3ஆம் மற்றும் இறுதி சோதனை ஓட்டமான மனிதர்களை கொண்டு ஒரு சொதனை ஓட்டமும்.

நடைபெறும் 

இவ்வாறு அவர் கூறினார்

சந்திரயான் 3 சம்பந்த பட்ட கேள்வி பதில்

Source

    

February 04, 2021

Chandrayaan 3 Latest update 2021 Jan Interview w/K.Sivan

Jan 30, 2021.


2021 இல் இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்கள்:

அதில் சந்திரயான் 3 பற்றிய கேள்விகளுக்கு அவர் கொடுத்த பதில்களின் அடிப்படையில் .

சந்திரயான் 3 புதிய செய்தி ஏதாவது உண்டா?:

சந்திரயான் 3 செயற்கைகோள் சம்மந்தமாக தேவையான பரிந்துரைகளை அளிக்க தேசிய அளவிளான் குழு ஒன்று கூட்டப்பட்டுள்ளது.

அதில் இஸ்ரோவின் தலைசிறந்த வல்லுநர்களும், மற்றும் கல்வியாளர்களையும் இனைத்துள்ளோம்.

சந்திரயான் 3இல் இருக்கும் முக்கிய அமைப்புகளை நாங்கள் இப்போது முழு கவனத்தில் எடுத்துள்ளோம்.

எப்போது விண்ணில் ஏவப்படும்?

சந்திரயான் 3 க்கான பனிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 

எனினும். எங்களால் எப்போது விண்ணில் ஏவப்படலாம் என்ற கால நேரத்தினை என்னால் சொல்ல இயலாது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இஸ்ரொவின் பனிகளில் "சந்திரயான் 3" உம் ஒன்று. 

என்று அவர் கூறினார்.

சந்திரயான் 2 Vs. சந்திரயான் 3 என்ன வித்தியாசம்:

சந்திரயான் 2 ஐ பொறுத்த வரையில். ஒரு ஆர்பிட்டரும் (Orbiter), ஒரு லேண்டரும் அதனும் ஒரு ரோவரும் இருந்தது (Lander and a rover inside the lander)

சந்திரயான் 3 இல் நாங்கள் ஏற்கனவே இருக்கும் சந்திரயான் 2 இன் ஆர்பிட்டரை பயன்படுத்திக்கொள்ளுவோம். 

அது மட்டும் இல்லாமல். லேண்டர் மட்டும் தான் சந்திரனை சென்றடையும். அதற்கு உதவும் வகையில் சிறிய அளவில் உந்து விசை அமைப்பு (Propulsion System) அமைக்கப்படும். 

அது மட்டும் இல்லாமல் சந்திரயான் 2 ஆர்பிட்டரில் இருக்கும் தரவுகளை பதிவிறக்கம் செய்யும் வேலையும் இப்போது நடந்து வருகிறது.

தற்போது சந்திரயான் 2 இன் முதல் பகுதி தரவுகளை பொது மக்கள் பயன்பாட்டிற்காக கொடுத்துள்ளோம்.

இந்த தரவுகள். அறிவியல் மற்றும் ஆராய்சி பனிக்காக பயன் படுத்தப்படும்

இவ்வாறு அவர் கூறினார்...

Source