யுரேனஸுக்கு புதிய நிலவு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. | New Moon Discovered Orbiting Uranus

புதிய யுரேனஸ் துனைக்கிரகம்

யுரேனஸ் கிரகத்திற்கு 28 துணைக்கிரகங்கள் இருந்தன இப்போது அதில் ஒன்று அதிகப்படுத்தி 29 என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 2, 2025 இல் Southwest Research Institute (SwRI) என்ற அமைப்பில் Solar System Science and Exploration Division ஐ சார்ந்த Maryame El Moutamid என்பவரின் தலைமையில் செயல்பட்ட குழு இதனை கவனித்துள்ளனர்.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் உள்ள (NIRCam) (Near Infrared Camera) இன்ஃப்ரா ரெட் கேமிரா மூலமாக 40 நிமிட Exposure கொன்டு எடுக்கப்பட்ட  தகவல்களை ஆராய்ந்ததில் இந்த "அறியப்படாத" பொருள் தெரிந்துள்ளது. இதற்கு S/2025 U1 என பெயரிட்டுள்ளனர்



S/2025 U1:

இது சுமார் 10 கிலோமீட்டர் விட்டம் கொண்ட ஒரு நிலவாக இருக்கலாம் என்றும். யுரேன்ஸ் கிரகத்தின் மற்ற சிறிய நிலவுகளை விட இது மிகவும் சிறியதாகவும், மங்களாகவும் உள்ளதாகவும்  கனிக்கின்றனர் ஆராய்சியாளர்கள். 

இது யுரேனஸில் இருந்து 56,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, மற்றும் இது யுரேனஸின் மத்திய ரேகை பகுதியில் மையமாக கொண்டு சுற்றிவருவருகிறது. ஒஃபிலியா(Ophelia) மற்றும் பியாங்கா(Bianca) விற்கு இடையில் இதன் சுற்றுப்பாதை அமைந்திருக்கிறது.

மேலே உள்ள படத்தினை பார்த்தால் உங்களுக்கு புரியும்.

Ref : Source

Editors Note : This post highlights data from Webb science in progress, which has not yet been through the peer-review process.


கருத்துகள் இல்லை