விண்வெளி துறையில் ஏற்பட்டுள்ள முன்னெற்றங்கள் 2024-25 | Space Economy and Industry 2024-25 Report in Tamil
விண்வெளிப் பொருளாதாரம் மற்றும் தொழில்துறை
2024 ஆம் ஆண்டில் உலகளாவிய விண்வெளிப் பொருளாதாரம் சாதனை அளவாக $613 பில்லியனை எட்டியது, இது ஆண்டுக்கு ஆண்டு 7.8% வளர்ச்சியடைந்தது, இந்த வளர்ச்சியில் வணிகத் துறை (Commercial Sector) யின் பங்கு சுமார் 78% ஆகும் (Ref: Source)
அரசாங்கங்கள் மட்டுமே விண்வெளி ஆராய்சிக்காக சுமார் $132 பில்லியனை செலவு செய்துள்ளன. அமெரிக்கா மட்டுமே $77 பில்லியனை விண்வெளிப் பாதுகாப்பு மற்றும் சிவில் (security and civil programs) திட்டங்களில் முதலீடு செய்தது. (Ref: Source)
வணிக செயற்கைக்கோள் பிராட்பேண்ட் துறை விரைவான விரிவாக்கத்தைக் கண்டுள்ளது.
இதில் ஸ்பேஸ் எக்ஸ், அமெசான் கைபர், மற்றும் ஒன் வெப் போன்ற நிறுவனங்களுக்கு இடையே அதிக போட்டி நிலவுகின்றது.
இந்தியாவின் விண்வெளித் துறை 2033 ஆம் ஆண்டுக்குள் ஐந்து மடங்கு வளர்ச்சியடையும் என்றும், செயற்கைக்கோள் ஏவுதல்கள், புதிய வின்வெளி சார்ந்த நிறுவனங்கள் மற்றும் அதிகரித்த முதலீடுகளால் , 44 பில்லியன் டாலர்களை எட்டும் என்றும், உலக சந்தையில் 8% ஐ கைப்பற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2025 ஆன் ஆண்டு முதல் பாதியான ஜனவரி-1 முதல் ஜூன்-30 வரை சுமார் 149 செயற்க்கை கோள்கள் ஏவப்பட்டுள்ளன. இது தோராயமாக ஒவ்வொரு 28 மனி நேரத்திற்கும் 1 என்ற வீதத்தில் உள்ளது. இதில் ஸ்போஸ் எக்ஸ் மட்டுமே 149 செயற்க்கைகோள்களை அந்த கால கட்டத்தில் ஏவுயுள்ளது (அனைத்தும் தொலைதொடர்பு செயற்கைகோள்களே) (Ref: Source)
2024 இன் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் அறிவியல் முன்னேற்றங்கள்:
- CLPS திட்டத்தின் கீழ் 2024 பிப்ரவரியில் நாசா சந்திரனில் புதிய அறிவியல் உபகரணத்தை தரையிரகியது.
- 2024 இல் நாசா வின் ஆர்டிமிஸ் திட்டம் உலகலாவிய ஒத்துழைப்பை கண்டது. ஆர்டிமிஸ் திட்ட ஒப்பந்தத்தில் 2024 இல் மட்டும் 15 நாடுகள் கையெழுத்திட்டுள்ளது. (Ref : Source)
- JWST ஆனது 2024 ஆம் ஆண்டில் மட்டும் 12 க்கும் மேற்பட்ட இளம் சூரியன்கள் உருவாகும் விண்மீன் திரள்களை அதிகாரப்பூர்வமாக கண்டறிந்துள்ளது.(Ref : Source)
- இஞ்சுனிடி ஹெலிகாப்டர் (Ingenuity Helicopter) செவ்வாயில் தனது ரெக்கைகளை இழந்து அதன் பயனத்தினை முடித்துக்கொண்டது.மார்ச் 2025இல்
- செவ்வாயில் சுற்றிவரும் மேவன் விண்கலம் தனது 10 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது.
- நம் சூரிய குடும்பத்தில் மனிதர்கள் வாழ அதிக தகுதியுள்ள துனைகிரகமாக கருதப்படும் வியாழன் கிரகத்தின் துணைகிரகமாக யுரோப்பா விற்கு "யுரோப்பா கிளிப்பர்" என்ற செயற்கைகோளை அக்டோபர் 2024 இல் நாசா ஏவுயுள்ளது.
- 2024 இல் முதல் முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் 3டி பிரிண்டிங்க் அதுவும் உலோக்த்தினை கொண்டு வெற்றிகரகமாக (மைக்ரோ கிராவிடியில் உலோக 3டி பிரிண்டிங் இதுவே முதல் முறை)
![]() |
Infinity Galaxy (may contain the first truly newborn supermassive black hole ) |
- சந்திரா X ரே மற்றும் ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி மூலமாக முதல் முதலாக ஒரு "சூப்பர் மாசிவ் கருந்துளை உருவாக்கத்தினை கொண்டுள்ள ஒரு கேலக்ஸியை ஆராய்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனை "Infinity Galaxy" என்று அழைக்கின்றனர். (Ref - Source)
Post a Comment