Facts About Planet Mercury | புதன் கிரகம் பற்றிய சில செய்திகள் [தமிழ்]
Mercury Planet
- நமது சூரிய குடும்பத்தில் இது தான் மிக சிறிய கிரகம் ஆனால் பூமியின் துனைக்கோளான சந்திரனை விட சற்று பெரிதாக இருக்கும். அதன் அளவு 2439.7 கிமி ஆரம் கொண்ட ஒரு கிரகம் ( சந்திரன் அளவு 1737.5 கிமி ஆரம் கொண்டது)
- இது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது ; 58 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவு (0.39 AU) AU (Astronomical Units) = 150 Million Kilometer
- இது தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள (பூமியின் கணக்குக்படி) 59 நாட்கள் எடுத்துக்கொள்ளும் ஆனால் சூரியனை வெறும் 88 நாட்களில் சுற்றுவந்துவிடும். இதனால் அங்கு ஒரு நாள் என்பது மிகவும் நீண்டும் ஒரு வருடம் என்பது மிக குறைவாகவும் இருக்கும்.
- ஒரு வேளை நாம் புதன் கிரகத்தில் இருந்தால், நாம் பூமியில் இருந்து சூரியனை பார்த்தால் எவ்வளவு பெரியதாய் தெரியுமோ அதேபோல் மூன்று மடங்கு பெரியாதாக தெரியும்.
புதன் கிரகம் |
- நமது சூரியகுடும்பத்தில் உள்ள 8 கிரகங்களில் 4 கிரகங்களில் மட்டுமே மனிதனால் நிற்கக்கூடிய அளவு ஒரு மலைப்பாங்கான அமைப்பு உள்ளது. அதில் புதன் கிரகமும் ஒன்று.
- அதன் மேல் பகுதியில் உள்ள பெருட்களை பார்ப்போம். அதன் வளிமண்டலம் மிகவும் லேசானதாக இருப்பதால் இதனை எக்ஸொஸ்பியர் (Exosphere) எங்கிறார்கள். அதில். ஆக்ஸிஜன்(), சோடியம்(), ஹைட்ரஜன்(), ஹீலியம்(), பொடாசியம்()
- இதற்கு எந்த துனைகிரகமும் இல்லை (இதுவே ஒரு துனைக்கிரகம் போல்தான் உள்ளது)
- இதன் மேற்பரப்பு வெப்பநிலை 430o டிகிரி செல்ஸியஸ் வரை செல்லக்கூடும். ஆனால் இரவு நேரத்தில் வெப்பநிலை -180o வரை குறையக்கூடும் , இந்த வெப்பநிலை குறைவானது அதன் மிக மெல்லிய எக்ஸொஸ்பியர் வெப்பத்தினை தக்க வைக்க முடியாததால் ஏற்படுகிறது
- இந்த கிரகத்தினை நாம் கிரகனங்கள் ஏற்படும் நாட்களிலும் மற்றும் அதிகாலை பொழுதிலும் தான் கானமுடியும். அதன் படி
- இதற்குமுன் கட்ந்த மே மாதம்9 ந் தேதி 2016 இது சூரியனை கட்ந்து சென்றதை பார்க்கமுடிந்தது. அதற்கு அடுத்த படியாக
- 2019 வருடம். நவம்பர் மாதம்11 ந் தேதி திரும்பவும் புதன் கிரகம் சூரியனை வலம் வருவதை நாம் பார்க்க முடியும் என கனிக்கப்படுகிறது
News about Mercury Spacecrafts
To Read the Latest Bepicolombo Satellite to Mercury Click Here Or More Mercury Updates
Download Our App
More Posts to Read
Post a Comment