Facts About Planet Venus | வெள்ளி கிரகம் பற்றிய சில செய்திகள்

வீனஸ் – வெள்ளி கிரகம். Venus Planet in Tamil , Latest News about Venus Planet in Tamil, venus is the second planet from Sun, வெள்ளி கிரகம் பற்றிய செய்திகள் உங்களுக்காக

வெள்ளி கிரகம்:

Facts about Venus in Tamil

  1. இந்த கிரகம்தான் சூரியனுக்கு அருகில் இருக்கும் இரண்டாவது கிரகம். 
  2. இது பூமியின் அளவுக்கு (கிட்ட தட்ட) உள்ள கிரகம் அதாவது அதன் அளவானது புவி = 6371 கிமீ ஆரம் கொண்டது ; வெள்ளி கிரகம் = 6051 கிமீ ஆரம் கொண்ட ஒரு கிரகம்
  3. இது சூரியனிடமிருந்து 108 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிரகம் ஆகும் அதாவது 67 மில்லியன் மைல் அல்லது 0.73 AU (Astronautical Units)
  4. இந்த கிரகமானது ஒரு முறை தன்னை தானே சுற்றிக்கொள்ள பூமியின் கணக்குப்படி 243 நாட்கள் எடுத்துக்கொள்ளும் ஆனால் ஒரு முறை சூரியனை சுற்றிவர வெறும் 225 நாட்களே எடுத்துக்கொள்ளும், (அதாவது ஒரு வருடம் வந்தாலும். ஒரு நாள் முடிந்திருக்காது ஹ ஹா ஹா)
  5. இந்த கிரகமானது ஒரு மலைப்பாங்கான கிரகம் (அதாவது நமது சூரிய குடும்பத்தில் முதல் நான்கு கிரகங்களில் மட்டுமே நம்மால் நிற்க முடியும்) இதை பற்றி பிறகு கேளுங்கள் (கமென்ட்  செக்ஸனில்)
  6. Atmosphere இந்த கிரகத்தில் வளிமண்டலமானது ஒரு அடர்த்தியான மேக கூட்டத்தினை போல் இருக்கும். மேலும் இதில் கார்பன் டை ஆக்ஸைட( ); நைட்ரஜன்( ); மற்றும் சல்பியூரிக் அமிலம் ( );  உள்ளது
  7. இந்த கிரகத்திற்கு எந்த துனை கிரகமும் இல்லை
  8. 40க்கும் மேற்பட்ட செயற்கைகோள்கள் இந்த கிரகத்தினை ஆராய இதுவறை அனுப்பப்பட்டுள்ளன
  9. இதன் வெப்பநிலை 480 டிகிரி செல்ஸியஸ் வரையில் இருக்கும். (புதன் கிரகத்தினை விட அதிக வெப்பநிலை இருக்கும்)
  10. இது பெரும்பாலான மற்ற கிரகங்கள் சுற்றும் திசைய காட்டிலும் எதிர் புரமான சுற்றும் அதாவது நமக்கு கிழக்கில் சூரியன் உதித்து மேற்கில் மறைந்தால் , வெள்ளி கிரகத்தில் மட்டும் மேற்கே உதித்து கிழக்கே மறையும்.   ஹ ஹா 
இது தான் வெள்ளி கிரகத்தினை பற்றிய நான் அறிந்த செய்திகள். 

கேள்விபதில்

வெள்ளி கிரகம் எதனால் எதிர்பக்கமாக சுற்றுகிறது?

இதன் உண்மையான விடை தெரியவில்லை.

வெள்ளி கிரகம் சூரியனிடமிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது?

சுமார் 108 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் (0.73 வானியல் அலகுகள்)

வானியல் அலகு (AU) என்றால் என்ன?

Astronomical Unit என்பதன் சுருக்கமே AU என்பது. இது சூரியனுக்கும் பூமிக்கும் இருக்கும் ஒரு நேர் கோட்டு தூரத்தினை குறிக்கும். அதாவது சரியாக 150 மில்லியன் கிலோ மீட்டர்கள்

வெள்ளி கிரகத்தின் அளவு என்ன?

நமது பூமிக்கு ஒத்த அளவினை உடையது வெள்ளி கிரகம். நமது பூமி 6371 கி.மீ ஆரம் உடையது. வெள்ளி 6051 கி.மீ ஆரம் உடையது.

வெள்ளி பற்றிய வேடிக்கையான தகவல் 1

வெள்ளி தன்னை தானே சுற்றிக்கொள்ள 243 நாட்கள் எடுத்துக்கொள்ளும்.
ஆனால் சூரியனை சுற்றி வர 225 நாட்களே எடுக்கும். அதாவது . வருடத்தினை விட நாள் மிக அதிகம்

Download Our App

More Posts to Read

No comments