ஜுனோ! | செயற்கைகோள் | தமிழ் லேடஸ்ட் செய்திகள் | Space News Tamil

இது வானவியல் செய்திகள் தமிழ்

இன்று நாம் பார்க்க இருக்கும் ஒரு விடயம் தான். வியாழன் கிரகம் அல்ல
அதனை ஆராய சென்றிருக்கும் “ஜுனோ என்ற ஒரு செயற்கை கோளை பற்றித்தான் பார்க்க இருக்கிறோம். இந்த செயற்கைகோளானது ‘நாசா’ 2011 ஆகஸ்ட் 5ம் தேதி இந்திய நேரப்படி 9:55 மனிக்கு இரவு  அனுப்பப்பட்டது

இந்த செயற்கைகோளானது முக்கியமாக வியாழன் கிரகத்தின் வளிமண்டலத்தினை ஆராய அனுப்பப்பட்டுள்ளது

இதன் முக்கிய பணிகளாவன

 

  • வியாழன் கிரகத்தின் வளிமண்டலத்தில் ஈரப்பதம் மற்றும் அதன் தண்ணீர் பற்றிய முக்கிய விடயங்களை ஆராயும்
  • இந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் உள்ள மூலக்கூறுகள் என்னென்ன? என்பதை பற்றி ஆராயவும்
  • வியாழனின் வெப்பநிலை மேக ஓட்டங்கள்
  • மற்றும் இறுதியாக அந்த கிரகத்தின் ஈர்ப்பு விசை , மற்றும் காந்தபுலம் எப்படி இருக்கும் என்பதைப்பற்றியும் ஆராய இது அனுப்பப்பட்டுள்ளது.

இதர பணிகள்:

மேலும் இந்த செயற்கைகோள் இதை மற்றும் இல்லாமல் வேறு சில பணிகளையும் இது செய்ய இருக்கிறது.
அவையாவன
“ஜுனோ” An Artistic Image by NASA
 
  1. இந்த கிரத்தின் ஆரம்பம் என்ன ? என்பது பற்றி இது ஆராயும் [ஏனெனில் இந்த கிரகம் பற்றிய சில செய்திகள் ஆச்சரியம் மக்கதாக உள்ளது. இது நமது சூரியன் தோன்றிய காலத்திலிருந்தே உருவாகி இருக்கலாம் என சில கருத்துகள் உள்ளன)
  2. மேலும் இந்த கிரகம் ஏதேனும் பரினாம வளர்சி அடைந்துள்ளதா? என்னென்ன வளர்ச்சி அடைந்துள்ளது?  என அறியவும் 
  3. இந்த கிரகத்தின் வளையங்கள் பற்றி ஆராயவும் [சனி கிரத்திற்கு இருப்பதை போன்ற வளையங்கள் இந்த கிரகத்திற்கும் உள்ளன ஆனால் அவை மிகவும் மெல்லியவை என்பதால் அவை தொலைநோக்கியின் கண்களுக்கு தெரிவதில்லை]
 
 
மேலும்:
இந்த கிரத்தினை பற்றி ‘நாசா’ அறிவிக்கும் போது இந்த கிரத்தில் மனிதர்களால் நிற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது. ஏனெனில் இந்தகிரகமானது முற்றிலும் காற்றினால் சூழப்பட்டுள்ளது. இதன் உண்மையான் பருப்பொருளானது ஒரு பூமியின் அளவு மட்டுமே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
 
 

Mission Timeline
  • Launch –  August 5 2011
  • Deep Space Maneuvers – Aug/Sep 2012
  • Earth Flyby Gravity assist – Oct 2013
  • Jupiter Arrival – July 2016
  • Space Craft Will orbit Jupiter for 20 Months (37 Orbits)
  • End of the Mission (Deorbit into Jupiter)
ஜுனோ கடைசியாக வியாழன் கிரகத்தின் மேல் விழுந்து அழியும் 
 
நாம் எவ்வளவு விடைகளை தெரிந்து கொள்ள போகிறோம் என்பது முக்கியமல்ல. ஏனெனில் கேள்விகள் எப்போது வந்து கொண்டே இருக்கும்
 

Download Our App

More Posts to Read



No comments