Facts About Neptune | நெப்டியூன் கிரகம் | தமிழ் விண்வெளி செய்திகள்


நெப்டியூன் கிரகமானது கண்டுபிடிக்கப்பட்டது 1846 செப்டம்பர் மாதம் 13ம் தேதி கண்டு பிடிக்கப்பட்டது.

 

கண்டு பிடித்தவர்கள் யார் யார் என் பார்த்தால்

  1. உர்பைன் லி வெரியர் (Urbain Le Verrier)
  2. ஜொஹன் காலி (Johann Galle)
  3. ஜான் கொஷ் ஆதம் (John Cosh Adams)
நெப்டியூன் 
 
இந்த கிரகமானது இறுதி கிரகமாக கருதப்படுகிரது.
அதாவது நமது சூரிய குடும்பத்தில் மொத்தம் 8 கிரகங்கள் தான் 9 ஆவதாக கருதப்பட்ட புளூட்டோ 2006 ம் ஆண்டு முதல் கிரகம் என்ற ஒரு அந்தஸ்தை இழந்துள்ளது. அதை பற்றி பிறகு பார்ப்போம்.
 
இந்த கிரகம் சூரியனிடமிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என பார்த்தால் : இது சூரியனிடமிருந்து8 4.5 பில்லியன் கி,மீ தொலைவு 
அதாவது 2.8 பில்லியன் மைல் அதாவது 30.07 AU (Astronomical Units)
 

*1 AU Equals 150 Million KM ( 1 வானியல் அலகு என்பது 150 மில்லியன் கி.மீ)

நெப்டியூன் கிரகத்தில் ஒரு நாள் என்பது புவியின் கனக்கு படி 16 மணி நேரங்கள் ஆகும் அதாவது அந்த கிரகம் ஒரு முறை முழுமையாக தண்ணைத்தானே சுற்றி வர 16 மணி நெரங்களே எடுத்துக்கொள்ளும். (Super ba)

டிரைடன் (நெடியூனின் துனைகிரகம்)

இதே அந்த கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது எப்படி இருக்கும் என கேட்டீர்களேயானால். (ஆஆ..)  சற்று தலை சுற்றும் அவ்வளவு தான்
அதாவது அங்கு ஒரு வருடம் என்பது 165 பூமியின் வருடங்கள் ( அதாவது நெப்டியூன் ஒரு முறை முழுமையாக சூரியனை சுற்றிவர 165 ஆண்டூகள் ஆகும் புவியின் கணக்குபடி)

இந்த கிரகம் 2011 ஆண்டு தான் ஒரு முறை சூரியனை சுற்றி வந்துள்ளது என கணக்கிட்டுள்ளனர்.(இதனை கண்டு பிடித்த 1846ம் ஆண்டு முதல் 2011 வரை )

இந்த கிரகத்தினை ராட்சத கிரகம் என அழைக்கப்படுகிறது. (giant Planet)
இது காற்று கிரகமாகவும் மற்றும் பனிக்கிரகமாகவும் இருக்கிறது ( Gas Giant and Ice Giant)

நெப்டியூன் (வாயேஜர் II)

இந்த கிரகத்தில் உள்ள நிலப்பகுதிகளில் கானப்படும் தனிமங்கள் பொருட்களாவன

  1. தண்ணீர் (h2O)
  2. மீத்தேன் (CH3)
  3. அம்மோனியா(NH4) 
கிரகத்தின் மேற்பகுதிகளில் உறந்த நிலையில் பனி மூலக்கூறுகள் உள்ளன என கூறப்படுகிறது.
 

யுரேனஸ் மற்றும் நெப்டியூன் , இந்த இரு கிரகங்களும்  சகோதர கிரகங்கள் என கூறப்படுகின்றன.(Both are Sister Planets)

நெப்டியூனின் வளிமண்டலமானது யுரேனஸ் கிரகத்தில் இருப்பது போலவே தான் உள்ளது. ஹைட்ரஜன் , ஹீலியம் , மற்றும் மீத்தேன்

*நம் சூரிய குடும்பத்தில் அனைத்து கிரகங்களும் ஹீலியம் மற்றும் ஹைட்ரஜனால் ஆக்கப்பட்டுள்ளது.

இந்த கிரகம் வளையங்கள் கொண்ட கிரகம் (கடைசி நாண்கு கிரகங்களுக்கும் வளையங்கள் உள்ளன)
இதில் 6 விதமான வளையங்களால் ஆனது

இந்த கிரகத்திற்கு 13 துனை கிரகங்கள் உள்ளன. இவை அனைத்திற்கும் பெயர் வைக்கப்பட்டுள்ளன. இந்த அனைத்து பெயர்களும் கிரேக்க புரானங்களை கொண்டு பெயரிடப்பட்டுள்ளது.

இந்த கிரகத்தினை வாயேஜர் II என்ற ஒரே ஒரு விண்கலம் மட்டுமே பார்த்துள்ளது.

இவையே நெப்டியூன் கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள்.
மேலும் விவரங்களுக்கு Subscribe பன்னுங்க

Download Our App

More Posts to Read



No comments