Facts About Saturn Planet | சனி கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள்


இன்று நாம் பார்க்க இருக்கும் கிரகமானது சனி கிரகம் (Saturn) என்ற ஒரு கிரகத்தினை பற்றிய ஒரு சில செய்திகளை தெரிந்து கொள்வோம்…இந்த கிரகமானது ஒரு பெரிய வாயு கிரகம்  (Gas Giant) இதில் அதிகமாக இருக்கும் காற்று மூலக்கூறு : ஹீலியல் மற்றும் ஹைட்ரஜன்

பொதுவானவை:

   இந்த கிரகமானது அனைவருக்கும் தெரிந்தது போலவே. வியாழன் கிரகத்திற்கு அடுத்தபடியாக ஒரு மிகப்பெரிய கிரகம். அது மட்டுமல்லாது
நமது சூரிய குடும்பத்தில் ஆறாவது (6) கிரகமாக உள்ளது.


Hexagon Shape

  • இது சூரியனிடமிருந்து 1.4 பில்லியன் கி.மீ (Or) 886 மில்லியன் மைல் (or) 9.5 AU தொலைவில் உள்ளது.  [Astronomical Units] 1 AU என்பது 150 மில்லியல் கிலோ மீட்டர்களை குறிக்கும்
  • சுற்றுப்பாதையின் சராரசி வேகம் (அ) திசைவேகம் :(mean orbital velocity) ஆனது 34,701 கி.மீ / வினாடி ( kmph) [என்ற வேகத்தில் இது சூரியனை சுற்றிவருகிரது
  • Equatorial radius (அந்த கிரகத்தின் மத்திய ரேகையிலிருந்து அதன் ஆரமானது 58,232 கி.மீ
  • இந்த கிரகத்தின் பரப்பு இழுவிசையானது (Surface Gravity) 10.4*m/sஅதாவது நீங்கள் புவியில் 100 (Pound) பவுண்ட் எடை இருப்பின் சனிகிரகத்தில் நீங்கள் 107 பவுண்ட் இருப்பீர்கள். ( * சில மாறுதல்கள் இருக்கலாம் இந்த கணக்கானது. சனிகிரகத்தின் மத்திய ரேகை பகுதியில் எடுக்கப்பட்டது.. விண்வெளி அறிஞர்கள் இதன் கணக்கு மாறலாம் என கருதுகின்றனர்.
     
  • விடுபடும் வேகம் (Escape Velocity) (Or ) தப்பிக்கும் வேகமானது129,924 கி.மீ / மணி [ 129,924 KMPH] . அதாவது, சனிகிரகத்திலிருந்து மனிக்கு 129,924 கி.மீ எனும் வேகத்தில் புறப்படும் ஒரு பொருள் மிக எளிதாக சனிகிரகத்தின் ஈர்ப்பு விசையிலிருந்து தப்பி விண்வெளிக்கு சென்றுவிடும்.
சனி கிரகம் அதன் வளையங்களோடு
 

நாட்கள் & வருடம்

சனிகிரகத்தில் ஒரு நாளானது அதாவது ஒரு முறை அந்த கிரகம் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் காலமானது பூமியின் கணக்குப்படி 10.7 மணி நேரங்களாகும். 10 மணி 40 நிமிடங்களில் அந்த கிரகம் ஒரு முறை சுற்றிவிடும். 

ஆனால் அந்த கிரகத்தில் ஒரு வருடமானது மிகவும் அதிகமாக [பூமியின் கணக்குப் படி 10,756 நாட்கள்] எடுத்துக்கொள்ளும். புரியும் படி சொல்வதென்றால் 29 வருடங்கள். ஆமாம் சனி கிரகத்தில் ஒரு வருடமானது பூமியின் கணக்கு படி 29 வருடங்களுக்கு சமமானது.

வளையங்கள்

இந்த கிரகத்தில் அழகான வளையங்கள் காணப்படுகின்றன. மேலும் இது ஏழு (7) பிரிவுகளாகவுள்ளது. அதோடு இல்லாமல் இந்த ஏழு வளையங்களுக்கு இடையே சீரானா இடை வெளிகளும் காணப்படுகின்றன. சனிகிரகத்தின் மத்திய ரேகையிலிருந்து. 6630 கிமீ முதல் 1,20,700 கிமீ வரை இந்த வளையங்கள் நீண்டு உள்ளன. இந்த வளையங்களில் அப்படி எதுவும் இல்லை வெறும் உறைந்த தண்ணீர் மூலக்கூறுகள் அல்லது பனி என அறியப்படுகிறது மேலும் அதில் தூசி தும்புகள் அதிகமாக உள்ளது
   இந்த வளையங்களின் தடிமன் 10 மீட்டர்கள் எனவும் கண்டறிந்துள்ளனர் இது 1980 களில் நாசாவால் செலுத்தப்பட்ட வாயேஜன் 1 & 2 விண்கலம் மூலம் அறியப்பட்டது

துனைக்கோள்கள்

 
இந்த கிரகத்திற்கு துனைக்கிரகங்கள் உள்ளன இதுவரை 53 துனைகோள்கள் கண்டறியப்பட்டு பெயரிடப்பட்டுள்ளன். மேலும் 9 துனைகோள்கள் உறுதி செய்யப்படவில்லை .
டைட்டன் 
 
 மெலும் அவை சனிகிரகத்தினை தான் சுற்றி வருகின்றன என உறுதி செய்யப்படுமாய்யின். இதற்கு மொத்தம் 62 துணைக்கோள்கள் . இதன் ஒரு துணைக்கோளான டைட்டனில் வாழ்க்கைக்கான சாத்திய கூறுகள் இருக்கலாம் என பிரபலமான கூற்று உள்ளது. இது தான் நமது சூரிய குடும்பத்தில்  இரண்டாவது பெரிய துணைகோளாகும். ( முதலாவது வியாழனின் துணைக்கோள் கேனிமிடி (Ganymede) ஆகும்

விண்கலம்

இந்த கிரகத்தினை சந்தித்த விண்கலம்கள் மிகவும் சொற்பமே அதில் குறிப்பிட்டு சொல்லப்படுபவை 
1. பயனீர் 11 [Pioneer 11]
2. வாயேஜர் 1 & 2 (Voyager I & II) Voyager Enter Interstellar Space News Latest
3. காசினி – ஹுஜன்ஸ் (Cassini –  Huygens)
 
Cassini
 
இதில் காசினி-ஹுஜன்ஸ் எனும் இரண்டு விண்கலங்களும் ஒன்றாக அக்டோபர் 15 1997ல்  அனுப்பப்பட்டவை இதில் காசினி எனும் விண்கலமானது சனிகிரகத்தின் மேற்பரப்பு, வளிமண்டலம், வளையங்கள் மற்றும் ஒரு சில துணைகோள்களை ஆராய்ச்சி செய்வதற்காக டிசம்பர் 2004 முதல் அதன் வட்டப்பாதையில் சுற்றிவருகிறது.
ஹுஜன்ஸ் விண்கலமானது ஜனவரி 2005 ஆம் ஆண்டு  சனியின் துனைகிரகமான டைட்டனில் தரையிரக்கப்பட்டுள்ளது. 
 
இந்த கிரகத்தில் வாழ்க்கைக்கான எந்த ஆதாரமும் இல்லை என அறிவியலாலார்கல் கருதுகின்றனர். ஆனால் சனிகிரகத்தின் துணைகோலான டைட்டனில் அதற்கான சாத்திய கூறுகள் இருக்கலாம் என ஒரு கருத்து நிலவுகிறது. 

 

எதுவாக இருந்தாலும் நாம் இருப்பது நமது கிரகம் புவியில்.  நாம் தான் புவியின் பாதுகாவலர்கள். இதனை நாம். விண்வெளி கற்களிலிருந்து பாதுகாப்பது முடியாத காரியம். ஆனால் இந்த கிரகத்தினை பசுமையாக வைத்திருக்க நாம் நம்மால் முடிந்தவரை முயற்சி செய்ய வேண்டும், ஒவ்வொருவரும் வாழ்நாளில் ஒரு மரக்கன்றையாவது நட முயற்சிக்க வேண்டும்

 
இப்படிக்கு 

No comments