TRAPPIST 1 |டிராப்பிஸ்ட் 1 | அதன் 7 கிரகங்களும்

Transiting Planets and Planetesimals Small Telescope (TRAPPIST) இந்த தொலைநோக்கியினால் கண்டறியப்பட்ட ஒரு சிறிய நட்சத்திரம் தான் டிராப்பிஸ்ட்1 என பெயரிடப்பட்டுள்ளது. முதல் முதலில் 2016 மே மாத வாக்கில் டிராப்பிஸ்ட் 1 நட்சத்திரத்தினை வலம் வரும் 3 கிரகங்களை கண்டறிந்து வெளியிட்டனர். அவை அனைத்திற்கும் ESI என முத்திரையிடப்பட்டது. அதாவது Earth Similarity Index என பொருள்.

தெளிவாக சொல்வதென்றால். பூமியை போல் அளவும். வளிமண்டலமும் உள்ள கிரகத்திற்கு இந்த பெயருண்டு. அதன் வரிசையில். இன்னும் 3 கிரகங்களை நேற்று  கண்டறிந்துள்ளனர்.

டிராப்பிஸ்ட் 1 கிரகங்களை பற்றி சொல்வதென்றால். அவை அனைத்திலும் தரை பகுதி( Rocky Core)  அதாவது பூமியை போல். மேலும் சூரியனிடமிருந்து. ஹாபிடபுள் ஜோன் (Habitable zone) என்று சொல்லக்கூடிய பகுதியில் அமைந்துள்ளன (3 கிரகங்கள் மட்டும்.). அதாவது. தண்ணீர் ஆவியும் ஆகாமல். உறைந்தும் போகாமல். திரவ நிலையிலேயே இருக்கும்.

சூரியனிடமிருந்து அது சரியான தொலைவில் இருக்கும். (நம் பூமி நமது சூரியனின் ஹாபிடபுள் ஜோன்) பகுதியில் தான் உள்ளது.

இந்த டிராப்பிஸ்ட் கிரகங்களை கண்டறிந்ததில். Spitzer வானியல் தொலைநோக்கிக்கு மிகப்பெரிய பங்குண்டு. மேலும் அதைபற்றிய .. இல்லுஸ்டிரேட் படங்கள் வந்த வண்ணம் உள்ளன..

No comments