கூம்பு நெபுலா!!!!

கூம்பு (கோன்) நெபுலா என்று சொல்லக்கூடிய, ஒரு மிக பிரம்மாண்டமான தூசித் தூனில்(Dust Pillar),  நட்சத்திரங்கள் உருவாகிக்கொண்டு இருக்கின்றன.

கூம்பு போன்ற வடிவங்களும், தூன் போன்ற அமைப்புகளும், மற்றும் வித்தியாசமான வடிவங்களை உடைய மேலும் பல மர்மமான வடிவங்கள் அதிக அளவில். உள்ள இடம் தான் புதிதாக நட்சத்திரங்கள் உருவாகும் இடம் அல்லது வளரும் இடம் என்று சொல்லக்கூடிய Stellar Nurseries என அழைக்கப்படுகிறது

இந்த Stellar Nurseries க்கு மிகவும் ஏற்ற ஒரு எடுத்துக்காட்டுதான் இந்த கூம்பு (கோன்) நெபுலா.

இந்த கூம்பு (கோன்) நெபுலாவானது , என்.ஜி.சி 2264 என அழைக்கப்படக்கூடிய , ஒரு மிக பிரகாசமான மண்டலத்தில் உள்ளது , இது பூமியில் இருந்து 2600 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது…

கோன் நெபுலாவானது, ஹுப்புள் வின்வெளி தொலைநோக்கியிலிருந்து. படம் பிடிக்கப்பட்டுள்ளது.  மேலும் இது இன்ஃப்ரரெட் காமிரா(Infrared Camera) உதவியுடன் 1997 ஆண்டிலேயே படம் பிடிக்கப்பட்டது.

இந்த கூம்பு(கோன்) நெபுலாவின் அகலம் மட்டுமே….. அதாவது அதன் தலை போன்ற பகுதி மட்டுமே. சுமார் 2.5 ஒளியாண்டுகள் தூரம் உடையது எனவும்(அதனை சுற்றிவர)
. அதன் மொத்த நீளமானது சுமார் 7 ஒளியாண்டுகள் இருக்கலாம் என கனிக்கப்பட்டுள்ளது.

நமது சூரிய குடும்பத்திலிருந்து. அருகில் இருக்கக்கூடிய சூரிய குடும்பமான, ஆல்ஃபா செஞ்சுரிக்கு போகும் தூரத்தில் பாதி தான் கோன் நெபுலாவின் தலையை சுற்றிவர ஆகும் காலம். என்றால் நீங்களே பாத்துக்கொள்ளுங்கள்….

No comments