August 30, 2018

30-8-2018 OTD in Space | விண்வெளி வரலாற்றில் இன்று 30-8-2018 | முதல் கைப்பர்பெல்ட் ஆப்ஜக்ட்

விண்வெளி வரலாற்றில் இன்று “முதன் முதலில் கைப்பர் பெல்ட் பகுதியில் . ஒரு பொருளை கண்டறிந்தனர். அதாவது புளூட்டோவிலிருந்து ரொம்ப தொலைவில்

 

15760 Albion, provisional designation 1992 QB₁, was the first trans-Neptunian object to be discovered after Pluto and Charon. It was discovered in 1992 by David C. Jewitt and Jane X. Luu at the Mauna Kea Observatory, Hawaii. Wikipedia
Radius: 54 km
Orbital period: 294 years
Discovered: 30 August 1992

 

 

August 29, 2018

Hayabusa 2 Will Land on Asteroid Ryudu and Return | ஹயபுஸா 2 விண்கலம்விவரம்

ஹயபுஸா 2 விண்கலமானது , 2014 ல் விண்ணில் ஏவப்பட்டது. எதை நோக்கி என்றால்? ருயுகு எனும் ஒரு ஆஸ்டிராய்டை நோக்கி. இந்த ருயுகு ஆஸ்டிராய்டு . முக்கிய ஆஸ்டிராய்டு பட்டையில் உள்ளது. இது பூமிக்கு மிக அருகில் உள்ள பொருட்களின் பட்டியலில், அதுவும் கொஞ்சம் பெரிதாக உள்ள பொருட்களின் (ஆஸ்டிராடு) பட்டியலில் . உள்ளது. இந்த வகையாக பொருட்கள் அதாவது (Near Earth objects) பூமிக்கு ஆபத்தை விளைவிக்க ஒரு சில சந்தர்ப்பங்கள் இருக்கின்றன . எனவே ஜப்பான் விண்வெளி அமைப்பனது JAXA: Japan’s Institute of Space and Astronautical Science,கடந்த 2014 டிசம்பர் மாதம் அனுப்பட்டது. அந்த விண்கலமானது (ஹயபுசா2) கடந்த ஜூன் மாதன் 2018 ல் அதன் இலக்கான “ருயுகு” ஆஸ்டிராய்டை அதன் வட்டபாதையில் சென்றடைந்தது.

அதன் பிறகு அறிவித்த JAXA விண்வெளியாளர்கள், இது இன்னும் 2 மாதங்களில் அதன் மேற்பகுதியில் தறையிரங்கி , தேவையான அளவு ஆஸ்டிராடின் மேற்புற மாதிரிகளை கொண்டு வரும் . என்று கூரியுள்ளனர். ஆம் போன முறைபார்த்த ஒசிரிஸ் ரெக்ஸ் போலவே இதுவும் ஒரு ஆஸ்டிராய்டு சாம்புள் ரிட்டன் (Asteroid Sample Retrun) எனும் அடிப்படையில் செயல் படக்கூடியது தான்

  • தறையிரங்கும் இடம்
  • ஹயபுஸா 2

இந்த ஹயபுஸா 2 விண்கலம் தனியாக இல்லை. இதில் 3 விதமாத ரேவர் மற்றும் ஒரு கேமரா இயந்திரமும் உள்ளது

MASCOT and the three tiny, hopping rovers — known as Minerva-II-1a, Minerva-II-1b and Minerva-II-2 — will gather a variety of information about the asteroid from its surface.
Space.com

மேலும் இந்த ஹயபுஸா 2 விண்கலமானது இது அனைத்தையும் சேகரித்து விட்டு 2020 ல் பூமிக்கு திரும்பும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 2020 ல பூமிக்கு திரும்பிடுமா. அவளே சீக்கிறமா என்று கேட்கிறீர்கலா? ஆம். அதனால் தான் இது தனது பள்ளம் தேண்டும் பனியை அடுத்த மாதம் ஆரப்பிக்க இருக்கிறது. அதாவது செப்டம்பர். மாதிரிகலை எடுத்த அடுத்த நிமிடமே திரும்பி வர திட்டமிகப்பட்டுள்ளது..

Source : https://en.wikipedia.org/wiki/Hayabusa2      https://www.space.com/41602-hayabusa2-asteroid-ryugu-landing-site-selected-photos.html

29-8-2018 OTD in Space | விண்வெளி வரலாற்றில் இன்று- ஜெமினி 5

1965 ல் கார்டன் கூப்பர் மற்றும் பீட் கான்ராட் எனும் இரண்டு நாசா விண்வெளி வீரர்கள்   அமெரிக்காவின் ஜெமினி 5 விண்கலத்தில் இருந்து பூமிக்கு திருப்பி வந்தனர்.  இந்த ஜெமினி 5 விண்கலத்தில் அவர்கள் 8 நாட்கள். கழித்தார்கள். இதுதான் அமெரிக்காவின் “ஒரு வின்கலத்தில் அதிக நாள் களை பூமியின் வட்ட பாதையில் செலவு செய்த மிஷன்” என்ற பெருமையுடன். ஆகஸ்டு 29 1965 ல் பூமியில் வந்து இறங்கினர்.Source: https://en.wikipedia.org/wiki/Gemini_5

August 28, 2018

Resign From NASA after 1968 | விண்வெளி வீரர் "ராப் கொலின்" வெளியேரினார்


வேலை கிடைக்கிறது எவ்வளவு பெரிய விஷயம் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரியனும்னு இல்லை. இந்த நிலையில், நாசாவின் வின்வெளி வீரர் பட்டியலில் இருந்து , இரண்டு வருடங்கலாக பயிற்சி எடுத்த “ராப் கொலின்” எனும் நாசாவின் வின்வெளி வீரர் ஒருவர்  நாசாவை விட்டு விலகுவதாக கூறியுள்ளார். இதற்காக இவர் ரிசைன் (Resign) லெட்டரையும் கொடுத்துள்ளார்.  குடும்ப விஷயம் காரனமாக விலகுவதாகவும் கூறியுள்ளார். இதனால் இந்த வாரத்தின் இறுதியில் இவருடைய நாசா பனி முடிவுக்கு வருகிறது. அதாவது ஆகஸ்டு 31 , 2018

இதைபற்றி நாசா கூறும் போது 1968 க்கு பிறகு நடக்கும் முதல் விலகுதல் நிகழ்வு என்று கூரினர்., அதாவது கடைசியாக நாசாவிலிருந்து விலகிய விண்வெளி வீரர் “ஓ லாரி” “O’Leary ” இவர் 1968 ன் முதல் பகுதியில் விலகினார் அதாவது ஜனவரி மாதம். அதே வருடத்தின் ஆகஸ்டு மாதத்தில் ஜான் லிவலின் ” John Llewellyn” எனும் விண்வெளி வீரரும் பனி விலகினார். அதன் பிறகு ராப் கொலின் தான். 1968 க்கு பிறகு  2018ல் அடுத்த வீரர் .

எற்கனவே அவர் இருந்த குழுவில் இவருடன் சேர்த்து மொத்தம் 12 பேர் இருந்தனர். ராப் ன் விலகுதலுக்கு பிறகு அதில் காலியாக உள்ள இடத்தினை நிரப்பு நாசா எந்த ஒரு முயற்சியும் எடுப்பது போல் தெரியவில்லை..


Source: https://arstechnica.com/science/2018/08/for-the-first-time-in-50-years-a-nasa-astronaut-candidate-has-resigned/

28-8-2018 OTD in Space History |விண்வெளி வரலாற்றில் இன்று

OTD Means On This Day in Space

OTD பதிவிற்கு உங்களை வரவேற்கிறேன். On This Day in Space August 28, 1993, கல்லியன் விண்கலமானது ஐடா (Ida) எனும் ஒரு ஆஸ்டிராய்டை கடந்து சென்றது. அதாவது (Fly by) இந்த ஐடா எனும் ஆஸ்டிராய்டுதான் முதன் முதலில்  கண்டறியப்பட்ட இயற்க்கையான துனைக்கிரகத்தினை கொண்டது என்று. குழப்பமாக உள்ளதா. ? உண்மையில் சொல்லப்போனால்.

“ஒரு ஆஸ்டிராய்டை சுற்றிவரும் மற்றொரு ஆஸ்டிராய்டு.”

அந்த மற்றோரு ஆஸ்டிராய்டின் , அதாவது ஐடா ஆஸ்டிராய்டை சுற்றிவரும் அந்த மற்றொரு ஆஸ்டிராய்டின் பெயர் டாக்கில் என வைக்கப்பட்டது. (Dactyl)

இது தான் ஆகஸ்டு 28 , அன்று 1993ல் நடந்த ஒரு விஷயம்… நல்லா இருந்தா ஒரு லைக் போடுங்க…

NASA Released Forgotten Audio about MOON landing Mission| மறைக்கப்பட்டஉண்மைகளை வெளிவிட்டது நாசா

“அப்போலோ மிஷன்” ஜூலை 1969 இல் , நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.. அல்லது கேள்வி பட்டிருக்கலாம், இந்த சமயத்தில் நடந்த உரையாடல்களை, இப்போது தான் நாசா வெளியிட்டுள்ளது. ஒருவழியாக பல வருடங்கள் கழித்து. இது நாசா வின் அற்கைவ் பகுதியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

One small step for man,” Armstrong declared. “One giant leap for mankind

இந்த பிரபலமான வசனங்களை நெங்களும் அறிந்திரிந்தீர் கள் என்றால் அந்த சேமிப்பு பகுதியில் உள்ள ஆடியோ கோப்பு களை நான் உங்களுக்கு தருகிறேன் . ஆனால் பாத்து கொங்க. இது பல மணி நேரம் வரும் .

The audio can now be listened to on NASA’s archival page or UT Dallas’ website.

sound

https://archive.org/details/Apollo11Audio/11-03302.mp3

August 27, 2018

OTD in Space History | இன்று வரலாற்றில் நடந்தது

இந்த புதிய OTD (On This Day) பகுதிக்கு நான் உங்களை வரவேற்கிறேன், இன்று விண்வெளி வரலாற்றில் நடந்தது என்ன? என்று உங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டுமா?

 

இன்று ஆகஸ்ட் 27,

 

வரலாற்றில் இன்று , 1962 ஆகஸ்ட் 27, முதன் முதலாக மரைனர் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

 

அமெரிக்கா வின் முதன் முதல் வேறு கிரகத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு விண்கலம். இது வெள்ளி கிரகத்தை ஆராய அனுப்பப்பட்டது. மேலும் இது டிசம்பர் 14. ஆம் தேதி அதே வருடம் வெள்ளி கிரகத்தை அடைந்தது

 

August 26, 2018

OSIRIS-REx Arriving On Its Destination | ஆஸ்டிராய்டு பென்னு வை நெருங்குகிறது ஓசிரிஸ் ரெக்ஸ்




OSIRIS-REx என்பது ஆஸ்டிராய்டு Sample Return ஐ மையமாக கொண்ட ஒரு மிஷன். இது 2016 செப்டம்பர் மாதம் வின்ணில் செலுத்தப்பட்டது. செலுத்தப்படும் போது இதன் இலக்காக இருந்த ஆஸ்டிராய்டு, “பென்னு” என்று சொல்லக்கூடிய மிகவும் பழைமையான ஆஸ்டிராய்டு. “Bennu Asteroid”, இப்போது வந்த தகவலின் அடிப்படையில் இன்னும் இரண்டு மாதங்களில். ஓசிரிஸ் ரெக்ஸ் ஆனது தனது இலக்கை அடைந்து விடும். 



மேலும் இந்த விண்கலமானது. அந்த குறிப்பிட்ட ஆஸ்டிராய்டை சில காலங்களுக்கு வட்டமடித்து அதனை மேப் செய்யும். (Map ) பிறகு அதில் ஒரு பாதுகாப்பான மற்றும் வசதியான இடத்தினை தேர்வு செய்து அதில் தரையிரங்கும்.  அதன் பிறகு அந்த கலனில் உள்ள அதிக அழுத்தம் கொண்ட ஹைற்றஜன் குழாயின் மூலம் ஆஸ்டிராய்டு பென்னு வின் மேற்பரப்பில் ஒரு துளையிடும்., அதன் மூலம் வெளிவரக்கூடிய தூசி , துகள்கள், மற்றும் அங்கு கிடைக்கக்கூடிய அனைத்தையும். உறிஞ்சி எடுத்துக்க்கொண்டு தனது விண்கலத்தில் உள்ள ஒரு பாதுகாப்பான பெட்டகத்தில் வைத்துவிடும். பிறகு இது பூமியை நோக்கிய பயனத்தினை ஆரம்பிக்கும். 





கணக்குகளின் அடிப்படையில் வருகின்றன் 2013 ஆம் ஆண்டு ,  செப்டம்பர் மாதம் 24 தேதி வாக்கில் தான் சேகரித்து வைத்த பாதுகாப்பு பெட்ட கத்தினை அந்த விண்கலம் பூமியின் மேற்பரப்பில் வீசிவிட்டு செல்லும். வீசப்பட்ட அந்த Sample மாதிரி நிறைந்த பாதுகாப்பு பெட்டகமானது அமெரிக்காவில் உள்ள “ஊடா””Utah Western America பாலைவனப்பகுதியில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



கிடைக்கும் மாதிரிகளை ஓசிரிஸ் ரெக்ஸ் ன் ஆராய்ச்சி குழுவானது கால்வாசி மட்டும் எடுத்து ஆராயும் மீதி முக்கால்வாசி மாதிரிகள் உலக முழுவதும் இருக்கும் ஆராய்சியாளர்களுக்காக கொடுக்கப்படும் என நாசா விஞ்சானிகள் அறிவித்துள்ளனர்.  அப்படிஎன்றால் இது எவ்வளவு எடையுள்ள மாதிரிகலை சேகரிக்கும் என்று கேட்கிறீர்களா? ஓசிரிஸ் ரெக்ஸ் ன் விஞ்சானிகள் கூறும் போது , குறைந்த பட்சம் 60 கிராம் முதல் 2 கிலோ வரை கிடைக்கும் என கூறுகிரார்கள். . அது சரி எதற்க்காக இந்த ஆஸ்டிராய்டு “பென்னு ” என்று கேட்டீர்களேயானா. இது ஒரு பெரிய கதை. உண்மையில் இந்த ஆஸ்டிராய்டு தான் , நமது பூமிக்கு அருகில் உள்ள ஆஸ்டிராய்டு. அது மட்டும் அல்ல. அளவிளும் ஓரு விங்கலம் தரையிரங்கும் அளவுக்கு பெரிய ஆஸ்டிராய்டு. , முக்கியமாக இது நமது பூமியை விட மிகவும் பழமையானது என கனிக்கப்பட்டுள்ளது.  (4.7 பில்லியன் ஆண்டுகள் ) அது மட்டும் இல்லைங்க. இதன் உள்ள பொருட்கள் மிகவும் அரிய வகை , Iron, Platinum போன்ற தனிகவகைகள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 



Origins, Spectral Interpretation, Resource Identification, Security, Regoli – – OSIRIS – REx

Meaning of OSIRIS-REx


VIDEO describing MISSION 


  1. https://www.nasa.gov/osiris-rex
  2. https://en.wikipedia.org/wiki/OSIRIS-REx

August 25, 2018

NASA Try to Help SAVE Planet Earth |ஐஸ் சாட் 2 துருவ பகுதியை ஆராயும்

ICEsat-2 என்ற செயற்க்கைக்கோலை நாசா வருகின்ற செப்டம்பர் மாதம் 2 ஆம் வாரத்தில் வின்னில் செலுத்த உள்ளது. இந்த செயற்க்கைகோலை பற்றி சிறப்பான விஷயம் என்னவென்றால்? இதனை நாசா நமது பூமியின் பாதுக்காப்பிற்காக அதாவது. உலக வெப்பமயமாதல் எனும் ஆபத்தான நிலையிலிருந்து பாதுகாப்பதற்க்காக அனுப்ப இருப்பதாக   கூறியது.  (இது வரைக்கும் அவங்க பன்னது போதும்னு தானெ நெனக்கிறீங்க)
அப்டி அந்த சாட்டிலைட் ல என்ன வச்சிருக்காங்க . அது எப்டி பூமிய , வெப்பமயமாதல் லேந்து காப்பாத்தும்னு தானே சந்தேகம். அந்த ஐஸ்சேட்2 ல் மிகவும் அதீத திறம் நிறைந்த ஒரு வகையான லேசர் தொழில்நுட்பம் பயன்படுத்த போவதாக கூறியுள்ளனர். இந்த லேசர் தொழில் நுட்பத்தினை வைத்து அவர்கள். கிரீன் லாந்து , மற்றும் அண்டார்ட்டிக் பகுதிகளில் உள்ள பாறைகளில் அதாவது பனிப்பாறைகளில் உள்ள சிறிய சிறிய மாறுதல் களையும் கண்டறிவதன் மூலம் . நாம் பூமிவப்பமயமாதலை தடுக்க முடியும் என்று கூறியுள்ளனர். இந்த செயற்க்கைகோள் உதவியுடன் நம்மால் பனிமலைகளின் ஏற்படும் மாற்றங்களை கண்கானிக்க முடியும் அது 5 செ.மீ குறைவு என்றாலும் சரி.. இதனை “அல்டி மீட்டர்” தொழில்நுட்பம் என்கின்றனர். ஏற்கனவே 2003 ஆம் ஆண்டு ஐஸ்சாட்1 ஏவப்பட்டது. குறிப்பிடத்தக்கது.
ஐஸ்சாட் என்றால் பனிக்கட்டி செயற்க்கைகோல் என்று பொருள் அல்ல, மாறாக. ICEsat  Means – Ice, Cold and Land Elevation Satellite
அதாவது , நமது உலகில் ஏற்பகும் கடல் மட்டம் குறைதல். ஏறுதல், சீதோஷ்ன மாற்றங்கள் (Climate Changes) பற்றி நாம் அறிந்து கொள்ளவேண்டும் என்றால் . நமது துருவப்பகுதிகளில் என்ன நடக்கிறது என்று கண்கானித்தால் போதுமானது. நாம் நம்மால் முடிந்த வரை வேறு ஒரு மாற்றி வழிகளை கண்டறிந்து. அதனை சரிசெய்யலாம்.  இது தான் இந்த ஐஸ்சேட்2 மிஷனின் முக்கிய நோக்கம். சும்மா ராக்கெட் விட்டுட்டு இல்லாம நம்ப பூமிக்காக என்னவே பன்றாங்களே அது வரைக்கும் சந்தோசம் தான். இதனை பற்றி மேலும் தெரிந்து கொள்ள நீங்கள் கீழே உள்ள வீடியோவை பாருங்கள் உங்களுக்கு புரியும்.
Video From NASA
 Source : https://www.space.com/41596-nasa-icesat2-earth-ice-satellite-september-launch.html icesat-2.gsfc.nasa.gov

August 24, 2018

Chang-e4 Chinese Lunar Probe and Rover Will Explore Far Side of the Moon | சாங்கி-4 ரோவர் சந்திரனை ஆராயும்.




சைனாவின் சாங்கி4 விண்கலமானது , லேண்டர் மற்றும் ரோவர் கொண்டதாக இருக்கும் என சைனீஸ் ஸ்பேஸ் ஏஜென்சி கூறியுள்ளது.  மேலும் இது சந்திரனின் இருண்ட பகுதி எனப்படக்கூடிய சந்திரனின் மற்றொரு பகுதியில் தரையிரங்கு , ஆராய்சி பனிகளை மேற்கொள்ளும் எனவும் அறிவித்து இருக்கிறது. 



சைனாவின் லூனார் மிஷனின் தலைமை வடிவமைப்பாலர் (Designer) Wu weiren கூறுகையில், செவ்வக வடிவம் கொண்ட இந்த ரோவர்  , இரண்டு சோலார் பேனல்கள்  கொண்டதாகவும். (மடங்க்க்கொள்ளும் தன்மை உடையது) , 6 சக்கரங்களை கொண்டுள்ளதாகவும், 1.5 மீட்டர் அகலம் கொண்டதாகவும். 1.1 மீட்டர்  உயரம் உடையதாகவும் உள்ளது. இந்த  சாங்கி 4 விண்கலத்தின் ரோவரின் வடிவம் மற்றும் டிசைன் ஆனது சாங்கி 3 விண்கலத்தின் ரோவரின் வடிவத்தினை ஒத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.  வடிவத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யவில்லை என்று கூறியுள்ளது. சைனாவின் விண்வெளி அமைப்பு (CNSA)



இந்த ரோவரின் கட்டமைப்புகள். அதன் உள்ள அனைத்து அமைப்புகளையும் எந்த சூழ்நிலைக்கும் தன்னை மாற்றிக்கொண்டு செயல்படும் வகையில் அமைத்திருப்பதாகவும் . அப்போது தான். சந்திரனின். இருண்ட பகுதி என்று அழைக்கப்படும் மற்றோரு பகுதியில் . உள்ள தரை எந்த விதமானதாக இருந்தாலும் அதற்கு ஏற்றார்போல் இது தண்ணை தானே மாற்றிக்கொண்டு செயல்படும் என்றும் கூறியுள்ளது.



இந்த ரோவரின் 4 அறிவியல் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதில்



  • பனேரோமிக் காமிரா (Panoramic Camera)
  • Infrared Imaging Spectrometer (இன்ஃப்ராரெட் மீட்டர்)
  • ரேடார் அளவிடும் கருவி (Radar Measurement Device)
  • Radiation Measuring Device (கதிரியக்கத்தினை அளவிடும் கருவி)


இதில் முதல் மூன்று கருவிகள் சந்திரனின் மேற்பகுதியில் புகைப்படம் எடுக்கவும். அதன்  வடிவம் , அமைப்பு, மண். போன்றவற்றை அளவுடவும் பயன்படும் என சைனாவின் விண்வெளி அமைப்பு கூறியுள்ளது. 



மேலும் இது போன்ற விண்வெளி பற்றிய செய்திகளுக்கு, நீங்கள் ஸ்பேஸ் நியூஸ் தமிழ் ஐ சப்ஸ்கிரைப் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.




August 22, 2018

New Theory in Exoplanets Discovery | பூமியை போல் 5 மடங்கு தண்ணீரி இருக்கும்எக்ஸோ பிளானெட்

பூமியின் அளவை ஒப்பிடும் போது மற்ற கிரகங்கள்
பூமியின் அளவை ஒப்பிடும் போது மற்ற கிரகங்கள்

பூமிபோன்ற கிரகங்கள்:

பூமியை போன்ற அளவிலும், வடிவத்திலும், மற்றும் சூரியனிடமிருந்து சரியான அளவில் அமையும் “ஹாபிடபுள்” சோன். எனும் பகுதியில் உள்ளதா. என்பதையும் நாம் கண்டறிந்து விட்டால் போதுமானது. அது எக்ஸொ பிளானட் எனும் பூமி யை போன்ற கிரகமா அல்லது சாதாரண கிரகமா என்பதை கூறிவிடமுடியும். கடந்த 20 வருடங்களாக நாம் எக்ஸோ பிளானட்களை ஆராய்சி செய்து வருகிறோம். இது வரை நாம் 4000 க்கும் மேற்பட்ட பூமி போன்ற கிரகங்களை கண்டறிந்து  இருக்கிறோம். இந்த 4000 கிரங்களையும். இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று :பூமியைபோன்று 1.5 மடங்கு பெறிய கிரகங்கள் (Radius) இவை பூமியைப்போன்று 5 மடங்கு எடை இருக்கும் என கருதப்படுகிறது.இரண்டாவது: பூமியை போன்று 2 மடங்கு பெறிய கிரகங்கள் (Radius) . இவை. பூமியைப்போன்று 10 மடங்கு எடை இருக்கும் என கருதப்படுகிறது.

Conference (கூட்டம்)

ஆகஸ்டு 17 , 2018 அன்று, அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரில் நடந்த, Goldschmidt Conference ல் . “லீ ஜாங்” எனும் ஹார்வார்டு பல்கலைக்கழக பேராசிரியரின் தலைமையிலான  ஒரு குழுவான அறிவியலாலர்கள். எக்ஸோ பிளானட் பற்றி ஆராய்சிகளை மேற்கொண்டு அதற்காக ஒரு புதிய தியரியை கொண்டுவந்துள்ளனர். அது என்னவென்றால்.?

Theory கருத்து:

அவர்கள் சொன்ன கருத்து இது தான். அதாவது எக்ஸொ பிளானெட்களில். இருக்கும் தண்ணீரின் அளவானது நமது பூமியில் இருப்பதை போன்று  5 மடங்குக்கு சமம் என்பது தான் அந்த கருத்து. இதற்க்காக இரு தியரியை அவர்கள் கொடுத்துள்ளனர்.நமது பூமியின் ஆரத்தை  மையமாக கொண்டு இந்த ஆராய்சி முடிவுகள் இருக்கும் . அதாவது 6371 கிமீ. ஆரம் கொண்ட இந்த பூமிகிரகத்தில் 0.022 % மட்டுமே இருக்கும் தன்ணீரின் அளவு 75 % இருக்கும் போது. 1.5 மடங்கு ஆரம் இருக்கும் எக்ஸோ பிளானட்களில் 5 மடங்கு தண்ணீர் இருக்கும் என்பது தான். இப்போது உங்களுக்கு ஒரு மிகப்பெரிய சந்தேகம் வரும் 0.022% தன்ணீரின் அளவு என்று நான் மேலே குறிப்பிட்டதாக தான் இருக்கும். ஆனால் இந்த 0.022% எனும் தன்ணீரின் அளவு தான். நான் சொன்னது சரிதான் .இந்த அளவானது நமது பூமியின் மொத்த எடையை கொண்டு கணக்கிடப்படுகிறது. ஆம் நமது மொத்த பூமியின் எடையில் . தண்ணீரின் அளவு வெறும் 0.022% தான் இதை நீங்கள் கூகுளில் “What is the Weight of the Oceans” என்று போட்டு பாத்தாலே தெரியும். ஆம் அவர்கள் சொன்ன தியரியானது. ஒரு கிரகத்தின் ஆரத்திற்கும் அதன் எடைக்கும் உள்ள  விகிதத்திற்கும்தான், நான் ஏற்கெனவே மேலே சொன்ன மாறி 1.5 மடங்கு ஆரம் கொண்ட கிரகங்களில் 5 மடங்கு பூமியை போன்று எடை இருக்கும் என குறிப்பிட்டு இருந்தேன். அப்படி இருக்கையில். அந்த கிரகத்தில் இருக்கும் தண்ணீரின் அளவு 0.1% அளவு . பூமியின் தண்ணீரின் (எடை) அளவுக்கு. இருக்கும் என்பது தான். ஒரு சிறிய தியரி. இதை. கொஞ்சம் யோசித்தாலே நீங்கள் புரிந்து கொள்ளலாம்.  இதை பற்றி நான் பேசிய வீடியோ ஒன்று யூடியூபில் உள்ளது. அதை கொஞ்சம் கேட்டால் இது உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்.நன்றி வேறு ஒரு வின்வெளி பற்றிய செய்திகளுடன் நான் அடுத்த முறை வருகிறேன். Source: https://www.sciencedaily.com/releases/2018/08/180818115758.htm
பூமியின் அளவை ஒப்பிடும் போது மற்ற கிரகங்கள்
பூமியின் அளவை ஒப்பிடும் போது மற்ற கிரகங்கள்

பூமிபோன்ற கிரகங்கள்:

பூமியை போன்ற அளவிலும், வடிவத்திலும், மற்றும் சூரியனிடமிருந்து சரியான அளவில் அமையும் “ஹாபிடபுள்” சோன். எனும் பகுதியில் உள்ளதா. என்பதையும் நாம் கண்டறிந்து விட்டால் போதுமானது. அது எக்ஸொ பிளானட் எனும் பூமி யை போன்ற கிரகமா அல்லது சாதாரண கிரகமா என்பதை கூறிவிடமுடியும். கடந்த 20 வருடங்களாக நாம் எக்ஸோ பிளானட்களை ஆராய்சி செய்து வருகிறோம். இது வரை நாம் 4000 க்கும் மேற்பட்ட பூமி போன்ற கிரகங்களை கண்டறிந்து  இருக்கிறோம். இந்த 4000 கிரங்களையும். இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று :பூமியைபோன்று 1.5 மடங்கு பெறிய கிரகங்கள் (Radius) இவை பூமியைப்போன்று 5 மடங்கு எடை இருக்கும் என கருதப்படுகிறது.இரண்டாவது: பூமியை போன்று 2 மடங்கு பெறிய கிரகங்கள் (Radius) . இவை. பூமியைப்போன்று 10 மடங்கு எடை இருக்கும் என கருதப்படுகிறது.

Conference (கூட்டம்)

ஆகஸ்டு 17 , 2018 அன்று, அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரில் நடந்த, Goldschmidt Conference ல் . “லீ ஜாங்” எனும் ஹார்வார்டு பல்கலைக்கழக பேராசிரியரின் தலைமையிலான  ஒரு குழுவான அறிவியலாலர்கள். எக்ஸோ பிளானட் பற்றி ஆராய்சிகளை மேற்கொண்டு அதற்காக ஒரு புதிய தியரியை கொண்டுவந்துள்ளனர். அது என்னவென்றால்.?

Theory கருத்து:

அவர்கள் சொன்ன கருத்து இது தான். அதாவது எக்ஸொ பிளானெட்களில். இருக்கும் தண்ணீரின் அளவானது நமது பூமியில் இருப்பதை போன்று  5 மடங்குக்கு சமம் என்பது தான் அந்த கருத்து. இதற்க்காக இரு தியரியை அவர்கள் கொடுத்துள்ளனர்.நமது பூமியின் ஆரத்தை  மையமாக கொண்டு இந்த ஆராய்சி முடிவுகள் இருக்கும் . அதாவது 6371 கிமீ. ஆரம் கொண்ட இந்த பூமிகிரகத்தில் 0.022 % மட்டுமே இருக்கும் தன்ணீரின் அளவு 75 % இருக்கும் போது. 1.5 மடங்கு ஆரம் இருக்கும் எக்ஸோ பிளானட்களில் 5 மடங்கு தண்ணீர் இருக்கும் என்பது தான். இப்போது உங்களுக்கு ஒரு மிகப்பெரிய சந்தேகம் வரும் 0.022% தன்ணீரின் அளவு என்று நான் மேலே குறிப்பிட்டதாக தான் இருக்கும். ஆனால் இந்த 0.022% எனும் தன்ணீரின் அளவு தான். நான் சொன்னது சரிதான் .இந்த அளவானது நமது பூமியின் மொத்த எடையை கொண்டு கணக்கிடப்படுகிறது. ஆம் நமது மொத்த பூமியின் எடையில் . தண்ணீரின் அளவு வெறும் 0.022% தான் இதை நீங்கள் கூகுளில் “What is the Weight of the Oceans” என்று போட்டு பாத்தாலே தெரியும். ஆம் அவர்கள் சொன்ன தியரியானது. ஒரு கிரகத்தின் ஆரத்திற்கும் அதன் எடைக்கும் உள்ள  விகிதத்திற்கும்தான், நான் ஏற்கெனவே மேலே சொன்ன மாறி 1.5 மடங்கு ஆரம் கொண்ட கிரகங்களில் 5 மடங்கு பூமியை போன்று எடை இருக்கும் என குறிப்பிட்டு இருந்தேன். அப்படி இருக்கையில். அந்த கிரகத்தில் இருக்கும் தண்ணீரின் அளவு 0.1% அளவு . பூமியின் தண்ணீரின் (எடை) அளவுக்கு. இருக்கும் என்பது தான். ஒரு சிறிய தியரி. இதை. கொஞ்சம் யோசித்தாலே நீங்கள் புரிந்து கொள்ளலாம்.  இதை பற்றி நான் பேசிய வீடியோ ஒன்று யூடியூபில் உள்ளது. அதை கொஞ்சம் கேட்டால் இது உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்.நன்றி வேறு ஒரு வின்வெளி பற்றிய செய்திகளுடன் நான் அடுத்த முறை வருகிறேன். Source: https://www.sciencedaily.com/releases/2018/08/180818115758.htm

August 21, 2018

அமெரிக்காவில் விண்கல் விழுவதை பாருங்கள் | Alabama meteor Spot August 17 2018

இந்த நிகழ்வு ஆகஸ்ட் 17ஆம் தேதி 2018 அன்று , அமெரிக்காவில் உள்ள Alabama நகரத்தில் இது ஒரு பிரகாசமான நெருப்பு பந்து போன்ற காட்சியை விண்ணில் ஏற்படுத்தியது. இதனை விண்ணில் இருந்து நாசா படம் எடுப்பதற்கு முன் இந்த பகுதியில் உள்ள பாதுகாப்பு security காமிரா வில் இது தெளிவாக தெரியும் படி பதிவாகியுள்ளது . இந்த வின்களானது.

இதனை பற்றி விவரிக்கும் போது, இது சுமாராக 6 அடி அதாவது 2 மீட்டர் அளவுள்ள வின்கள்ளாக இருக்கலாம் என்றும் , இது மணிக்கு 87,000 கி.மி , என்ற வேகத்தில் மேதி இருக்கிறது. இதனால். நமது சந்திறன போன்று 20 மடங்கு பிரகாசமாக தெரிந்தது. என நாசா தரப்பிலிருந்து. கூறப்படுகிறது.

நாசா காமிராவில் பதிவான காட்சி, விண்ணிலிருந்து

பொது காமிராவில் பதிவான காட்சியை பாருங்கள்

August 20, 2018

சூரியனுக்கு எதற்க்காக? பார்க்கர் புரோப் அனுப்புராங்க ? | Why Parker SolarProbeto SUN | SNT Tamil


வனக்கம் நன்பர்களே, வின்வெளி செய்திகள் தமிழுக்கு நான் உங்களை வரவேற்கிறேன். போன பதிவில் பார்க்கர் சோலார் புரோப் பற்றி பார்த்திருப்போம், ஆனால் நமக்கு எப்போது இருக்கும் ஒரு கேள்வி. எதற்க்காக இந்த நாசா 1.5 பில்லியன் டாலர் செலவில் சூரியனுக்கு விண்கலனை அனுப்புகிறது என?  அதற்கான பதிலை இப்போ நான் உங்களுக்கு சொல்லப்போறேன். என்னால் முடிந்த அளவு. உங்களை சமாதானப்படுத்த,
சூரியனை பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? சூரியன் மனித வாழ்விற்கு மிகவும் முக்கியமான வெப்பத்தின் ஒரு மூலாதாரம்.  செடிகள் வளர இது உதவி புரிகிறது. செடிகளில் ஒளிச்சேர்க்கை நிகழ்விற்கு இது ஒரு ஆதாரமாக இருக்கிறது. அதெல்லாம் சரி, நல்ல விஷயம் தான். இதன் ஆபத்துகள் என்னென????????
உண்மையில் சொல்லப்போனால். சூரியனினால் நமக்கு ஆபத்து இல்லை , அதன் வளிமண்டலம் என கருதப்படும் “கரோனா” “Corona” இந்த பகுதியில் தான் . மிகவும் ஆபத்தான. கரோனா மாஸ் எரப்ஸன் “Corona Mass Eruption” எனும் ஒரு நிகழ்வு அடிக்கடி நிகழ்கிறது. இதனால். சூரியனின் மிகவும் ஆபத்தான “மின் காந்த அலைகள்” பூமியை தாக்குகின்றன. இந்த நிகழ்வு நடக்க 14% வாய்ப்புகள் இருப்பதாக அறிவியலாலர்கள் கூறுகிறார்கள்.. (அதிக ஆபத்தினை எப்போதும் விளைவிப்பது இல்லை. உண்மையில் சொல்லப்போனால்.)
ஆனாலும் நமக்கு இது பொருளாதார ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஆமாம். நமது புவியின் மேற்பரப்பில் , சேவை சார்ந்த பணிகளில் உள்ள செயற்க்கைகோள்கலை இது செயல் இழக்க வைக்கிறது. இதனால். மனிதர்களுக்கு பல நேரங்களில் . மிகவும் முக்கியமான ஒரு சில இனைய சேவை, தொலைக்காட்ட்சி சேவை போன்றவை பாதிக்கின்றன. இதனால் பல கம்பெனிகள் அடிக்கடி செயற்கைகோள்கலை அனுப்ப வேண்டிய கட்டாயம் இருக்கிறது.   இது வெறும் நமது செயற்கைகோள்கலை பாதித்தால் மட்டும் தான். ஒருவேலை, மேலே சொன்ன 14 % வாய்ப்பு சரியாக அமைந்து. அது போல ஒரு வலிமையான சூரியனின் மின் காந்த அலைகள் பூமியை தாக்குவதாக நினைத்துக்கொள்ளுங்க. எப்ப என்னவாகும்னு நீங்களே கற்பனை பன்னி பாருங்க!!!????

உங்களுடைய செல்போன் , இண்டர்னெட், தொலைக்காட்சி, தண்ணீர், பஸ், ரயில், என அனைத்தும் பாதிக்கும், எப்படி பஸ் ரயில் , தண்ணீர் எல்லாம் பாதிக்கும் என்று கேட்கிறீர்களா? உண்மையில் சொல்லப்போனால் நமக்கு தண்ணீர்வழங்கும் ஏரிகள் பெரும்பாலும் எலக்ட்ரானிக் முறையில் தான் செயல்படுகின்றன. ரயில் , பஸ் உட்பட அனைத்தும் . இந்த வகையான. சூரிய அலைகளினால் அதிகமாக பாதிக்கப்படுவது எலக்ட்ரானிக் சாதனங்கள் தான் .. இப்போ சொல்லுங்க. எலக்ட்ரானிக் சாதனங்கள்  இல்லாத உங்கள் வாழ்வினை கற்பனை செய்து….

இதனால் தான் ஒரு சில அறிவியலாலர்கள் சொல்கிறார்கள். இதற்கு ஒரெ வழி, நமக்கும் சூரியனுக்கும் ஒரு நல்ல புரிதல் வேண்டும். அதாவது. அந்த கரோனா பகுதிய நாம் ஆய்வு செய்யனும். அத முதல்ல புரிஞ்சிகினும். அப்போதான். அது எதனால் நடக்குதுன்னு, தெரிஞ்சிக்கிலாம், அது மட்டும் இல்லாம அப்படி தெரிஞ்சால் தான்,. அதற்கு மாற்று தீர்வாக எந்தமாரி பொருட்களை பயன்படுத்தி எலக்ட்ரானிக் சாதனங்கள்  தயாரித்தால். இந்த வகையான சூரிய புயலிலிருந்து தப்ப முடியும் என ஒரு முடிவுக்கு வரமுடியும். இப்போதே நடந்து விடாது. ஆனால் எதிர்காலத்தில். இந்த சூரியனின் , சக்திவாய்ந்த கதிர்வீச்சிலிருந்து நாம் தப்ப முடியும் அதுக்கு தான். இந்த “பார்க்கர் சோலார் புரோப்” “Parker Solar Probe”நாசா அனுப்பியிள்ளது.

August 18, 2018

15 year dream GAGANYAAN come Alive |இந்தியாவின் 15 வருட கனவு "காகண்யான்"

இஸ்ரோவின் 15 வருட கணவுங்க இது. ஆம் முதன் முதலில் 2004 நவம்பர் மாதம் தான் இஸ்ரோ. தனது மனித குழு விண்வெளி பயணத்தை பற்றி வெளியுலகுக்கு சொன்னது. அதிலிருந்து இதுவரை 2018 வரை. கிட்ட தட்ட 14 வருடம் முடிந்து விட்டது. இப்போது தான்

நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இப்போதுதான் இதற்கு பச்சை கொடி காமிசிருக்காரு. ஆம் இந்திய அரசாங்கம் சார்பாக நமக்கு இப்போதான் ஒரு அறிவிப்பு வந்துருக்கு. அது என்னனா. 2022 குல் இந்தியர்களை விண்வெளி வீரர்களாக வைத்து ஒரு விண்வெளி மிஷன் செய்து முடிக்க வேண்டும் என்பதுதான்.

இஸ்ரோ தான் இதனை 2004 முதல் கூறி வருகிறதே . அவங்க எந்த டென்ஷன் உம் ஆகள. பதட்டமும் படாமல். …. “இதற்கான எல்லா ஏற்பாடுகளும் 70% தயார் நிலையில் தான் உள்ளது. நாங்கள் கண்டிப்பாக 2022 இல் இந்திய வீரர்களை விண்ணில் செலுத்துவோம் என கூறி உள்ளனர்.

உங்களுக்கே தெரியும் “விகாஸ் எஞ்சின்” பரிசோதனை, மற்றும் பாதுகாப்பு பெட்டகம் பரிசோதனை என முக்கியமான பல தேவைகளை இஸ்ரோ ஏற்கனவே பூர்த்திசெய்து விட்டார்கள். இப்போ தேவையானது எண்ணனு ஒரு பட்டியலையும் போட்டிருக்காங்க.

1, விண்வெளி வீரர்களின் பயிற்சி – அதற்கு IAF உதவியை நாட போவதாக கூறியுள்ளது.

2, பணதேவை – இதற்காக 9000 கோடி தேவைப்படலாம் என கணக்கிடப்பட்டுள்ளது . அதில் இப்போது. 2000 ஏற்பாடு செய்ய கோரிக்கை விடுத்துள்ளது இஸ்ரோ. அதுவும் எதற்காக என்றால். மேலே சொன்ன வீரர்களுக்கு பயிற்சியும். 3வது பாயின்டை பாருங்க.

3, இதற்காக நமது ராக்கெட் ஏவதளம் கொஞ்சம் அப்டேட்ஸ் பண்ணவேண்டும். இதற்காக அந்த 2000 கோடி தேவைப்படலாம் அல்லவா

அது மட்டும் இல்லை. இந்திய விண்வெளி வீரர்கள் பயன் படுத்தும் சூட் வடிவமைத்துள்ளனர் அதையும் நீங்களே பாருங்கள்

Source:

https://www.thehindu.com/sci-tech/science/all-you-need-to-know-about-the-human-space-mission-gaganyaan/article24705425.ece 

August 15, 2018

WOW Signal in Tamil | TODAY in History | August 15th 1977

WOW! சமிக்சை,, இது வரலாற்றில் மிகவும் பிரபலமானது. இன்று நமது 72 ஆவது சுதந்திர தினம். கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த நாள்தான் . விண்வெளியாளர்களை . வேற்றுகிரகவாசிகலையும். கிரகங்களையும் தேட ஆர்வமூட்டிய தினம் என்றால் மிகுந்த ஆச்சரியத்தை தான் தருகிறது. ஆம்

Wow signal and Independence day Incident
Wow signal and Independence day Incident

1977 ஆகஸ்டு 15 ஆம் நாள் தான் ஒஹியோ ஸ்டேட் பல்கலைக்கழகதில் உள்ள ஒரு பெரிய ரேடியோ தொலைநோக்கியானது. தனது பெரிய ரேடியோ தட்டினை (Array) பயன்படுத்தி. “சஜிடாரியஸ்” விண்மீன் தொகுப்பில் இருந்து ஒரு அலைவரிசையை பெற ஆரம்பித்தது. 72 வினாடிகள் நீடித்த இந்த செயல்.அதன் பிறகு மறைந்து போனது.

அதன் பிறகு சில நாட்கள் கழித்து Astronomer Jerry R. Ehman எனும் ஆராச்சியாளர். அதனை . அதாவது அந்த தரவுகளை (Data) ஆராச்சி செய்தார். ஆராச்சி செய்துவிட்டு அந்த தரவுகள் இருந்த தாளில் . தனது ஆச்சரியத்தினை பதிவு செய்யும் பொருட்டு அவர் “வாவ்”

“WOW” என எழுதினார்.

இந்த அலைவரிசை நமக்கு எங்கு இருந்து வந்திருக்கும் என்பதற்கான ஒரு கனினி வரைபடை . நீங்கள் மேலே பார்க்கிறீர்கள். இந்த நிகழ்வுதான். மனிதர்களை. நம்மை போண்ற வேறு ஒரு உலகில் வேறு சில மனிதர்கள். அல்லது வேறுயாராவது. வாழ்ந்திருக்க கூடும் என. விண்வெளி ஆய்வாளர்களையும். மற்ற ஆர்வமிக்க மனிதர்கலையும், வானத்தின் பக்கம் ஆராச்சி செய்ய ஆர்வமூட்டுயது. இன்னமும். இது போன்ற பல நிகழ்வுகள் நமக்கு. வேறு சில உலககங்கள் இருக்கலாம் என்ற நம்பிக்கையை . அதிகமாக கொடுத்துவருகிறது.

உங்களுடைய கருத்து என்ன.????????? பதிவிடுங்கள்.

REF: WOW Signal

August 13, 2018

ISRO TV is coming|வருகிறது இஸ்ரோ டிவி

ஆகஸ்டு 12 , இஸ்ரோ ஸ்தானத்தின் முன்னோடி மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை யாக கருதப்படும் விக்கிரம சாராபாய் வின் 99 ஆவது பிறந்த நாள் விழாவான நேற்று, இதனை இஸ்ரோ அறிவித்தது.

ஆகஸ்ட் 12 1919 ல் பிறந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் கட்டடமைப்பாளர். விக்ரம் சாராபாய் யின் நினைவாக , இஸ்ரோ நிறுவனமானது தான் செலுத்த உள்ள சந்திரயான் 2 விண்கலத்தில் உள்ள லெண்டரில் (lander) பெயரை “விக்ரம் ” என்றே சூட்டியுள்ளது.

மேலும். இந்திய இளைஞர் மற்றும் அறிவியல் சார்ந்த துறைகளில் மாணவ மாணவிகளுக்கு ஆர்வத்தினை அதிகமாக்க, இஸ்ரோ நிறுவனம் தனக்கென பிரத்தியேகமாக “இஸ்ரோ தொலைக்காட்சி “ யை அந்தந்த பிராந்திய மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் அதை பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என இஸ்ரோ தரப்பு கூறியுள்ளது.

Source: http://idrw.org/isro-set-to-launch-its-tv-channel/

August 08, 2018

Chandrayaan 2 Launch Date Update ISRO | Chandrayaan-2 launch put off:India, Israel in lunar race

சந்திராயன், இந்த பெயரை கேள்விப்படாத மக்களே இருக்க முடியாது என்று கூட கூறலாம். அவ்வளவு எதிர்பார்க்கப்பட்ட ஒரு விஷயம் தான் சந்திராயன் நிலவு பயனம்.

சில நாட்கள் கழித்து இஸ்ரோ அமைப்பானது அதன் தொடர்ச்சியாக சந்திராயன் 2 விண்கலம் விரைவில் நிலவுக்கு செலுத்தப்படும் என்று கூறியது. இதற்கு பிறகு இந்த சந்திராயன் 2 எப்போது என கேள்வி கேட்காக ஆட்களே இல்லை. அவ்வளவு ஆர்வம் அனைவருக்கும், 2008 ஆம் ஆண்டு முதல் சந்திராயனை அனுப்பியதுடன். 10 வருடங்கள் கழித்து. தனது இரண்டாம் பகுதியை அதாவது சந்திராயன் 2 ஐ 2018 ஏப்ரல் மாதம் அனுப்பபடும் என இஸ்ரோ 2017 ல் அறிவித்தது. அனைவரும் மிகுந்த ஆர்வத்தோடு இருந்தனர். அதன் பிறகு இந்த நிகழ்வு சற்று தாமதப்படுத்தப்பட்டு அக்டோபர் முதல் வாரம் என மாற்றினார்கள்.  ஆனால். இப்போது ஆகஸ்டு 2018 ஆகிறது. இதுவரை இஸ்ரோ சந்திராயன் 2 ஐ அனுப்பிய பாடில்லை, என்ன ஆனது என TOI நிறுபர்கள் கேட்டதற்கு. அதன் லாண்ச் பன்னக்கூடிய நாளை திரும்பவும் டிசம்பர் 2018 என மாற்றி அமைத்தது இஸ்ரோ. ஏன் என்றால் இஸ்ரேல் நாடும் தனது நிலவு செயற்கைகோலை தயாரித்து வருகிறது. இதனை தொடந்து. இஸ்ரேல் இந்தியாவை அனுகி தங்களுக்காக. இந்த செயற்கைகோளை விண்ணில் ஏவித்தறுமாறு வேண்டியது. இதனை ஒப்புக்கொண்ட இஸ்ரோ. அக்டோபர் முதல் வாரத்தில் அனுப்ப வேண்டிய சந்திராயன் 2 ஐ. டிசம்பர் மாதன் அனுப்ப திட்டமிட்டுள்ளது. ஏன் என்றால் இஸ்ரேல் தனது நிலவு செயற்கைகோலை டிசம்பர் மாதத்தில் தான் இந்தியாவிடம் ஒப்படைக்கும். 

சந்திராயன் 2

சந்திராயன் 2 நிலவு விண்பயனமானது. ஒரு ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரொவெர் (Orbiter) (Lander) (Rover)  கொண்ட ஒரு அமைப்பு. இந்த முறை சந்திராயன் 2 முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தாலேயே தயாரிக்கப்படுகிறது. இது முதலில். நமது Launch Vehicle GSLV  Mk 2 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுவதாக அறிவித்தது. அதன் பிறகு இஸ்ரேலின் செயற்கைகோள் இனைப்படுவதால் இது  GSLV mk 3 ராகெட் ஆக மாற்றப்பட்டது.

விவரம்

சந்திரனின் வட்டபாதையை அடையும் சந்திராயன் 2 விண்கலத்திலிருந்து லேண்டர் பகுதி மட்டும் விடுபட்டு நிலவில் குறிக்கப்பட்ட இடத்தில் soft landing ஆகும்.  அதன் பிறகு அதோடு இனைக்கப்பட்டுள்ள  6 சக்கரங்களை கொண்ட ரேவர் அதிலிருந்து பிறிந்து. வெளிவரும், வெளிவந்த ரோவர் 100 மீட்டர்கள் சுற்றளவு வரை . 14 நாட்கள் அலசி ஆராயும். (14 நாட்கள் என்பது நிலவில் ஒரு நாள்) அதிலிருந்து எடுக்கப்படும் புகைப்படங்கள். பூமிக்கு அதாவது நமது இஸ்ரோ கன்ட்ரோல் செண்டருக்கு 15 நிமிடங்களில் கிடைக்கும் படி வடிவமைக்கப்பட்டுல்ளது.

Source:

https://timesofindia.indiatimes.com/india/chandrayaan-2-launch-put-off-india-israel-in-lunar-race-for-4th-position/articleshow/65275012.cms 

August 07, 2018

VLA Detects Planetary Mass Magnetic Object in Space|புதிய சக்தி வாய்ந்தகாந்த மண்டலம் கொண்ட பொருள்

கந்த மண்டலம், அதாவது magnetic field. அதிகமாக கொண்ட ஒரு விண்வெளி பொருள் தற்போது 3 நாட்களுக்கு முன் அதாவது ஆகஸ்ட் 3ம் தேதி. இது National Radio Astronomy Observatory ல் உள்ள VLA அதாவது Very Large Arrey மூலமாக கண்டரிிந்தனர். இது எப்படி இருக்கும் என கற்பனையாக தீட்டப்பட்ட புகைப்பட்டத்தினை நீங்கள் கிழே பார்க்கலாம்

SIMP J01365663+0933473
இந்த உருவத்தை எங்கேயோ பார்த்தது போல் உள்ளதா? ஆம் நீங்கள் நினைப்பது சரிதான் இது வியாழன் கிரகம் போல வரையப்பட்டுள்ளது. இந்த புதிரான பொருளை ஆராய்ச்சி செய்ததில் இது வியாழன் கிராகத்தினை போன்று 12.7 மடங்கு பெரியது எனவும் , அதேபோல அது வியாழனின் காந்த புலத்தினை போன்று 200 மடங்கு அதிக காந்த புல சக்தியை கொண்டுள்ளது என்றும். தெரிவிக்கிறார்கள். இந்த வித்தியாசமான பொருள் நமது பூமியில் இருந்து 20 ஒளிியாண்டுகள் தொலைவில் உள்ளது. இதன் பெயர் SIMP J01365663+0933473, மேலும் இது ஒரு கிரகத்திற்கும். சிறிய வகை மங்கலான சூரியனுக்கும் இடையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதை போன்ற அதிக காந்த புலம் கொண்ட கிரகங்களை. கிரகமா? அல்லது என்ன? என்ற ஆராய்ச்சியும். தொடர்கிறது. மேலும் இதிலிருந்து பல ஆச்சரியமிக்க உண்மைகள் வந்த வண்ணம் உள்ளன. கிரக மற்றும் நட்சத்திரங்களுக்கு உள்ள காந்த புலத்தினை அறிந்து கொள்ள இது உதவியாக இருக்கும் எனவும் இதன் ஆராய்ச்சியாளர் Melodie Kao, என்பவர் கூறியுள்ளார். இவர் அரிசோன பல்கலைக்கழகத்தில் உள்ள ஹபுள் விண் தொலைநோக்கியின் சிறப்பு அறிவியலாராவார்.

Source: https://www.sciencedaily.com/releases/2018/08/180803103336.htm

August 04, 2018

India's upcoming 2255 MW Bhadla mega solar park

இந்தியாவில் கட்டப்பட உள்ள புதிய 2255 மெகா வாட் திறன்கொண்ட சூரிய சக்தி சேகரிப்பங்கள். இது ராஜஸ்தானில் வருவாக்கப்படுகிறது

 

https://youtu.be/-fEwA_L3eDg