September 30, 2018

1000 GBPS connection is Coming Soon | ISRO News | 1000 ஜிபி வேகம் வெகு விரைவில் இந்தியாவுக்கு வர உள்ளது.

அதிகமான இண்டர்னெட் பயன் பாட்டில் இந்தியாவானது உலக தரத்தில் 2 ஆவது நாடாக உள்ளது. ஆனால் உலகத்தில் இருக்கும் மற்ற நாடுகளை பார்க்கையில் . இந்தியாவில் உள்ள இந்த இண்டர்னெட்டில் வேகம். 76ஆம் இடம். இந்த குறையை போக்கும் வகையில் இந்தியா ஜிசாட்-19 எனும் செயற்க்கைகோலை 2017 ஆம் ஆண்டு ஏவியது.

 
பிறகு இந்தவருடம் ஜிசாட் -11 மற்றும் ஜிஎஸ்டி-29 போன்ற செயற்க்கைகோள்களையும், மேலும் அடுத்தவருட ஆரம்பத்தில் ஜிசாட்-20 ஐயும் இந்தியா விண்ணில் ஏவ உள்ளது. இந்த நாண்கு செயற்கைகோள்களும் முழுக்க முழுக்க இண்டர்னெட் வேகத்தினை அதிகரிப்பதற்காகஉம் மற்றும் டிடிஎச் (DTH)பயன் பாட்டிற்காக  மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன
 
இவை அனைத்தும் இந்தியாவின் இண்டர்னெட் வேகத்தினை அதிகரிக்க பயன்படுத்தப்படும் என்றும். இஸ்ரோ தலைவர் k.சிவன் அவர்கள் கூறினார்கள்
அதுமட்டும் இல்லாமல். இந்தியாவானது 10.900 கோடி ரூபாய்யை 30 PSLV மற்றும்  10 GSLV Launch க்காக  ஒதுக்கியுள்ளதாகவும். . அவர் அறிவித்துள்ளார்
பார்ப்போம் இனி நம் இண்டர்னெட் வேகத்தின் மாறுதல்களை

Check My App

Read More Posts



ஆஸ்ட்ரோனெட் தேர்வில் உதவும் ரஷ்யா | Russia Offers To Train Indian Astronauts for future Space Mission

மாஸ்கோ: செப்டம்பர் 14 ஆம் தேதி, ரஷ்யாவின் ராஸ்காஸ்மோஸ் மற்றும் இந்திய குழுவினருக்கும். நடந்த பேச்சுவார்த்தையின் போது. இந்தியாவின் வரும்கால “ககன்யான் மிஷன்” மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் இந்தியாவிற்கு. உதவ தயாராக இருப்பதாக அறிவிப்பு செய்தது. எப்படி என்றால்?????

இந்தியாவானது விண்வெளி வீரர்களை தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். பல தரப்பட்ட பயிற்சிகளையும் வீரர்களுக்கு தரவேண்டும். அந்த மாதிரியான சூழ்நிலையில். ரஷ்யாவின் “ராஸ் காஸ்மோஸ் ஐ”  அதாவது ரஷ்யாவின் ஒரு ஸ்பெஷலிஸ்ட் குழுவானது இந்தியாவின் தேர்வு செய்யும் குழுவில் இருக்கும் என்றும். அவர்கள் உதவியோடு. விண்வெளி வீரர்கள் தேர்வு நடக்கும் என்பது தான் அந்த பிளான்.

2015 ஆம் ஆண்டு இந்தியா- ரஷ்யா இடையே   கையெழுத்தான ஒப்பந்தங்கள். விண்வெளி ஆராய்ச்சியில் . இரு நாடுகளும் ஒரு சில விஷயங்களில் சேர்ந்து செயல் படும் என்பதை குறித்தும் உள்ளது. அதுமட்டும் இல்லாமல். இந்தியா – ரஷ்யா இடையோ கிட்ட தட்ட 40 வருட விண்வெளி தொடர்பு உள்ளது.
“ராகேஷ் சர்மாவை” விண்வெளிக்கு அனுப்பியது முதல், ஆரம்ப கால்த்தில் இந்தியாவின் “ஆரியபட்டா” “பாஸ்கர்” போன்ற செயற்கைகோள் களை வின்வெளிக்கு அனுப்ப ரஷ்யா உதவியது என்பது குறிப்பிடத்தக்க ஒரு செய்தி.

Check My App

Read More Posts



September 29, 2018

கீழே விழப்போகும் மற்றுமொறு சைனீஸ் விண்வெளி ஆய்வுக்கூடம் | Another Chinese space lab is going to fall back to Earth

இன்னொரு விண்வெளி ஆய்வுக்கூடமா என்று கேட்கிறீர்களா.? ஆம் ஏற்கனவே இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் சைனாவின் ஒரு வின்வெளி ஆய்வுக்கூடம் ஒன்று கட்டுப்பாடு இழந்து பூமியில் மீது விழுந்தது. நல்ல வேளையாக அது கடலின் புறமாக விழுந்தது. அதுமட்டும் இல்லாமல். நமது வளிமண்டலத்தில் நுழைந்த பழைய Tiangong-1  என்று பெயரிடப்பட்ட ஸ்பேஸ் ஸ்டேசன் எரிந்து சாம்பலாகி ஒரு சில குப்பைகளை மட்டும் பூமியின் மீது தூவியது. அதுவும் கடலின் பக்கம். அதேபோல் இந்த முறையும் ஒரு சைனீஸ் விண்வெளி ஆய்வுக்கூடம் ஒன்று பூமியின் மீது விழும் அபாயத்தில் உள்ளது . ஆனால் இந்த முறை கவலை வேண்டாம். அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என, சைனா வின் விண்வெளி ஆராய்ச்சி கழகம் கூறியுள்ளது. அதன்.

 

சைனாவின் Tiangong -2  விண்வெளி ஆய்வுக்கூடமானது வருகிற  2019 ஜூலை மாதம் வரை தனது பனிகளை செய்துகொண்டு விண்வெளியில் இருக்கும் அதன் பிறகு அதனை டி ஆர்பிட் செய்யப்படும்(Deorbit ) அதாவது பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து அகற்றப்படும்.

அந்த விண்கலத்தினை பூமியின் மீது மோத செய்வார்கள். இவ்வாறாக சைனாவின் விண்வெளி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதற்கான தகவல் களை நீங்கள் பின்வரும் Ref Link களில் காணலாம்.

Ref1: https://bgr.com/2018/09/27/chinese-space-station-fall-to-earth-2019/
Ref2: https://news.cgtn.com/news/3d3d514f3151444e7a457a6333566d54/share_p.html

Check My App

Read More Posts



September 26, 2018

4 வது பிறந்தநாள் கண்ட மங்கல்யான்

இத்துடன் 4 ஆண்டுகள் நிறைவடைகிறது செப்டம்பர் 24, 2018 உடன்.

2014 செப்டம்பர் 24 ஆம் தேதி அன்று தான் மங்கல்யான் செவ்வாயின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. அதுவும் முதல் முயற்சியிலேயே, அந்த பெருமை இஸ்ரோ பையே சாரும் .

அதன் 4 ஆவது பிறந்த நாள் அன்று “இஸ்ரோ மார்ஸ் ஆர்பிட்டர்” டுவிட்டர் பக்கத்தில், மங்கல்யான ்விண்கலத்தில் உள்ள காமிரா மூலம் எடுக்கப்பட்ட ஒரு சில செவ்வாயின் படங்களை வெளியிட்டுள்ளது. அதை தான் நீங்கள் கீழே பாக்கிரீர்கள்.

Check My App

Read More Posts



September 24, 2018

First Moon Tourist | நிலாவுக்கு செல்லும் டூரிஸ்ட்

எலன் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் என் முதல் நிலாவுக்கு செல்ல இருக்கும். அந்த நபரை. கடந்த 17 செப்டம்பர் மாதம் வெளியிட்டனர். அவர்தான் . கலை களை விரும்பும் ஜப்பானிய கோடீஸ்வரர். யசுகோ maazavaaba . இவர் 2023 ஆம் ஆண்டு நிலாவினை சுற்றி வர இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் . இவர் செலவு செய்த பணத்தின் அளவு இன்னும் வெளியிடவில்லை. ஆனால் ஃபோர்ப்ஸ் என்ற ஆங்கில
மேகசின் எல் இடம் பெற்ற செய்தியின் அடிப்படையில் இவர் தான் ஜப்பானில் 18ஆவது பெரிய பணக்காரர் ஆவார். இவரின் கலையின் மீதுள்ள ஆர்வத்தால். நிலாவுக்கு. 7 படம் வரையும் வல்லுனர்களும் கூட்டி செல்கிறார். முற்றிலும் இலவசமாக. பாருங்கள் நீங்களே. உங்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்வது தான். மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும். என்பதற்கு இவர் ஒரு உதாரணம்



Check My App

Read More Posts



September 23, 2018

Little Rover Sent Their First Image | Hayabusa 2 Mission Update

ஹயபுஸா 2 விண்கலத்திலிருந்து வெளி விடப்பட்ட மினர்வா 2 என்ற ரொவர். பத்திரமாக தரையிரங்கியதோடு மட்டுமில்லாமல். அது தனது முதல் படத்தினையும் . அதன் முக்கிய விண்கலனான ஹயபுஸா 2க்கு அனுப்பியுள்ளது. அந்த படங்களை ஹயபுஸா 2 ஆனது ஜப்பானில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கும் அனுப்பியிருக்கிறது. அந்த படங்களை இப்போது நீங்கள் கீழே பார்க்கலாம்.

 

இதில் ஹயபுஸா 2 ன். சோலார் பேனல்கள் மற்றும் அதன் வடிவம் . தெரிவதையும் காணலாம், இந்த படமும் மினர்வா 2 ரோவரில் இருந்து எடுக்கப்பட்டது.

 

கொஞ்சம் Blurr ஆக இருக்கும் இந்த படமானது.  தரைப்பகுதியை நெருகிய நேரத்தில் எடுக்கப்பட்டது.

 

ஆஸ்டிராய்டு “ருயுகு” வின் ஒரு பகுதி

இந்த ஹயபுஸா 2 விண்கலமானது., அடுத்தவருடத்தில் மற்றொரு லேண்டரை . அந்த ஆஸ்டிராய்டுவில்.. தரையிரக்க திட்டமிட்டுள்ளது. என்பதும்  ஒரு முக்கிய செய்தியாக உள்ளது. பிறகு. அந்த முக்கியமான. நிகழ்வு நடக்க உள்ளது. என்ன என்று கேட்கிறீர்களா. அதான், ஹயபுஸா 2 தானாகவே அந்த “ருயுகு” ஆஸ்டிராய்டினை அனுகி அதிலுருந்து  ஒரு சில மனலை அள்ளிக்கொண்டு திரும்பவும் பூமிக்கு திரும்ப உள்ளது. இது 2020 ஆண்டு நடக்கும் என ஜப்பானிய விண்வெளி ஆய்வுக்கழகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Read More Posts

September 21, 2018

Hayabusa 2 Drops its Little Robots in Ryugu | தரையிரங்கியது ஹயபுஸாவின் சிறிய இயந்திரங்கள்

ஹயபுஸா 2 எனும் விண்கலமானது ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட ஒரு விண்கலம். இது முதன்மை ஆஸ்டிராய்டு பெல்ட் பகுதியில் உள்ள “ருயுடு” எனும் ஒரு முக்கோன முட்டை வடிவ ஆஸ்டிராய்டினை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்டது. இந்த  விண்கலமானது 2014 டிசம்பர் மாதம் அனுப்பப்பட்டது.  கடந்த ஜூன் 2018 முதல் இந்த ஹயபுஸா விண்கலமானது அதன் இலக்கான ” ருயுடு ” ஆஸ்டிராய்டினை வட்டமடித்து வருகிறது. அதிலிருந்து அதிகமான விஷயங்களை சேகரித்தும் வருகிறது

ஆனால் இந்த ஹயபுஸா 2 வின் பனியானது “Asteroid Sample Return” மாதிரியை சேகரித்தல் எனும் செயலை முதன்மையாக கொண்டது. அதனால். அந்த விண்கலத்தில் உள்ளே உள்ள இரண்டு ரோபோட் போன்ற ரோவர்களை ஹயபுஸா 2 ஆனது அந்த ஆஸ்டிராய்டில் தரையிரக்கும் எனவும் பிறகு 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதன் அதிலிருந்து மாதிரிகளை எடுத்துக்கொண்டு 2020 டிசம்பர் வாக்கில் இது பூமி திரும்பும் என ஜப்பானிய விண்வெளி ஆராய்சி நிறுவனம் JAXA  கூறியது

அதில் முதல் படியாக . ஹயபுஸா 2 விண்கலத்தில் உள்ள மினர்வா II – 1A & 1B  என்ற இரண்டு ரோபோ “ரோவர்” களை அந்த ஆஸ்டிராய்டின் மேல் பகுதியில் நேற்று தரையிரக்கியுள்ளது. அந்த இரண்டு ரோவர்களும் அந்த ஆஸ்டிராய்டினை .

அதன் மணல், கனிமங்கள். மற்றும் வேறு சில அரிய தனிமங்கள் பற்றி ஆராய்சிகலை மேற்கொள்ளும் என தகவல் கள் வெளியாகியுள்ளன.

ஹயபுஸா2 பற்றிய மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள “Space News Tamil” தளத்தினை சப்ஸ்கிரைப் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

–>>Source

Download Our App

More Posts to Read on:-



September 20, 2018

Hot city | வெப்பமான நகரம் | லாஸ் ஏஞ்சலிஸ்

அமெரிக்கா பொதுவாகவே மிகவும் குளிர்ச்சியான பகுதிதான். அதுவும். தெற்கு கலிஃபொர்னியா போன்ற பகுதிகள். மிகவும் குளிர்ச்சி மிக்கவை. ஆனால் தற்போது. சர்வதேச விண்வெளி மையத்தில் புதிதாக நிறுவியுள்ள “ஈகோ ஸ்ட்ரஸ்” எனும் கருவியானது பூமியின் ஒரு பகுதியில் நிகழும் வெப்ப கூறுகளை ஆராய்ந்து அந்த பகுதியில் நிலவும் வெப்பநிலையை தெள்ளத்தெளிவாக படம் பிடித்து காட்டும் தண்மையுடையது. இந்த கருவியை ” நாசா ” அமைப்பானது. லாஸ் ஏஞ்சல் நகரினை பார்க்கும் படி வைத்தது. அதில் காணப்படும் வெப்ப காட்சிதான நீங்கள் கீழே பார்க்கும்  காட்சி.
இன்னும் சொல்லப்போனால்.  இந்த காட்சி காலையில் 3.30 மனிக்கு எடுக்கப்பட்ட தரவுகள். சூரியன் கூட வராத இந்த வேளையில் . அங்கு இருக்கும், வெப்பத்தின் அளவுகள் மிகவும் அதிகமானதாக இருக்கின்றன. இதற்கு காரணம். அங்கு நிலவும் அதிகப்படியான  போக்குவரத்து. நெரிசல் என காரனம் கூறப்படுகிறது.

September 16, 2018

விண்ணில் பாய்ந்தது ஐஸ் சாட் 2 | Icesat 2 Launched By Delta 2 Rocket Yesterday

பூமியில் நிலவும் வெப்ப நிலை மாற்றத்தினை அளவிட நாசா வடிவமைத்து தயாரித்த ஐஸ் சாட் 2 என்ற 1500 கிலோ செயற்கைகோலானாது. நேற்றி இந்திய நேரப்படி ஏறக்குறைய இரவு 9 மணியளவில் அதாவது 15-09-2018  அன்று காலை 9  மணி ( அமெரிக்க நேரப்படி) விண்ணில் ஏவப்பட்டது.

ஏவுவதற்கு பயன்படுத்தப்பட்ட ராக்கெட்தான் டெல்டா 2 வகை ராக்கெட். இது. இந்த சாட்டிலைட்டை மட்டும் சுமந்து செல்லவில்லை . இத்துடன் சேர்த்து 4 கியூப் சாட்களையும். அதாவது சிறிய வகை செயற்கைகோள்களையும் சுமந்து சென்றுள்ளது.

இந்த 5 செயற்க்கை கோள்களும். பூமியின் சுற்றிவட்ட பாதையில் நிலை நிறுத்த ராக்கெட்டின் இரண்டாம் பாகம் எனும் . (Second Stage Separationn) பிரிவில் தான் பூமியின் வட்ட பாதையில் வெளிவிடப்படும். இந்த ஐஸ் சாட் 2 ஆனது. மற்ற சிறிய செயற்கைகோள்கள் நான்கும் வட்ட பாதையில் நிலைநிறுத்திய பிறகு 20 நிமிடங்கள் தாமதமாக தான். வின்ணில் பூமியின் வட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது..

இதன் மூலம் நம்மால் , நம் பூமியில் நிலவும் பனிக்கட்டி மலைகளின் துள்ளியமாக அளவுகளையும். அதன் பணிக்கட்டி உருகும் வேகத்தினையும் துள்ளியமாக அளவிடும் பொருட்டு. அதிநவீன லேசர் தொழில் நுட்பம் கொண்ட ஆல்ட்மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாம் நமது பூமியினை எவ்வளவு வெப்பப்படுத்தி வைத்திருக்கிறோம் என தெரிய வரும்.

நீங்க, பூமிய வெப்ப படுத்தலன்னு சொல்றீங்களா? ஆனா நான் ஒன்னு சொல்றேன். பூமிய குளிர்ச்சியா வச்சிக்கனும்னு சொன்னாக்கா. நிறையா மரங்களை வளர்க்கனும். நீங்க எத்தன வச்சீங்க.

“இல்ல உங்களுக்கு வீடு, ஃபேக்டர் கட்டுரதுக்காக வெட்டு நீங்களா?”

இப்போ சொல்லுங்க. இதுக்கு நீங்களும் நானும் ஒரு காரணம் தானே!!!. இனிமேலாவது . நாமும் நமது வீட்டை சுற்றியும் , தெருவை சுற்றியும். நிறைய மரங்களை வளர்ப்போம்.

Ice Sat More info

Subscribe my YouTube

ISRO's September Schedule | இஸ்ரோவின் அடுத்த ராக்கெட் இன்று | 33 கவுண்டவும் துவங்கியது

இரண்டு புவி கவனிப்பு செயற்க்கை கோள்கள்களை சுமந்து செல்லும் பி.எஸ். எல். வி சி 42  வகை ராக்கெட் மூலம் வின்ணில் ஏவுவதற்கான 33 மணி நேர கவுண்டவும் நேற்று அதாவது சனிக்கிழமை (15.9.2018) 1.10 மதியம் நேர அளவில் ஆரம்பித்துள்ளது.

sriharikota

இதன் லாஞ்ச். இன்று இரவு 10.07 மணிக்கு திட்ட மிடப்பட்டுள்ளது. (16.9.2018)
ஏவப்படும் ராக்கெட் இஸ்ரோவின் மிகவும் நம்பகமான PSLV C42 வகை ராக்கெட் என்பது, இது PSLV ராக்கெட் வரிசையில் இந்த வருடத்தில் இஸ்ரோ ஏவும் 3 ஆவது ராக்கெட் என்பது குறிப்பிடதக்கது.

இந்த ராக்கெட் ஆனது சுமார் 800கிலோ எடையுடைய இரண்டு பூமி கண்கானிப்பு செயற்க்கை கோள்களை அதாவது Earth Observation Satellite.  “NovaSAR and S1-4,” என்று பெயரிடப்பட்ட இரண்டு செயற்க்கை கோள்கள்.  முறையாக பூமியின் காட்டு பகுதிகளை மேப் செய்யவும். (Forest Mapping)மற்றும்.  , Flood and Disaster Monitoring வெள்ள மற்றும் பேரிடர் ஆராய்ச்சிக்காகவும். இந்த இரண்டு செயற்கை கோள்கள் பயன் படுத்தப்படும் எனவும் கூறியுள்ளனர்.

இது பூமியில் இருந்த சரியாக 583 கிலோ மீட்டர் உயரத்தில் . அதாவது sun synchronous orbit ல் நிலை நிறுத்தப்படும் என்றும் கூறியுள்ளர்.

Source >>

September 14, 2018

சந்திரனுக்கு செல்ல போகும் டூரிஸ்ட் யார்

சந்திரனுக்கு என்றவுடன் நீல் ஆம்ஸ்ட்ராங்,, buzz Adrian மாதிரி நிலாவிற்கு இல்லை. மாறாக நிலாவின் சுற்று வட்ட பாதைக்கு.

அந்த நபர் யார் என்று தெரிய வேண்டுமா?வரும் 17ஆம் தேதி வரை பொறுத்திருங்கள்.

ஸ்பேஸ் எக்ஸ நிறுவனமானது, டூரிஸ்ட் ஆக செல்ல இருக்கும் அந்த நபரின் பெயரை. வரும் 17 ஆம் தேதி அறிவிப்பதாக, எலன் மஸ்க் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இனிமேல் விண்வெளிக்கு செல்வது கனவு என யாரும் சொல்ல முடியாது. இப்போது கமர்ஷில் ஆக மாறி வருகிறது. இந்த விண்வெளி பயணம். பார்ப்போம் அது யார் என்று…

நீங்கள் காணும் இந்த புகைப்படம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கடந்த ஞாயிற்று கிழமை விண்ணில் செலுத்தியது. இது ஒரு communication செயற்கைக்கோள் எனவும் . மேலும் இது.   இந்த பொதுமக்களின் விண்வெளி பயணத்தில். பயன்படுத்தப்படும் எனவும். கூறியுள்ளது.

இதற்காக BFR  , launch vehicle, பயன் படுத்தப்படும். எனவும் கூறியுள்ளது. BFR என்றால் Big Falcon Rocket என்று அர்த்தம்.

September 12, 2018

கேட்டகரி 4 வகையான புயலின் மையம்

 
நீங்கள் என்றாவது ஒருநாள் இது போன்று ஒரு புயலை மேலிருந்து பார்த்ததுண்டா?
இது தான் தற்போது atlantic பகுதியில் நிலவிவரும் புயலின் . மையப்பகுதி. இதனை. சர்வ தேச விண்வெளி மையத்தில். பணியாற்றி கொண்டு இருக்கும் அலெக்சாண்டர் எனும் . எக்ஸ்பிடிஷன் 56 குழுவை சார்ந்த , வின்வெளி வீரர் ஒருவர். இதனை, ஒரு சக்திவாய்ந்த காமிரா மூலம் வீடியோ எடுத்துள்ளார். மேலும் இது வரும் 14ஆம் தேதி, அதாவது செப்டம்பர் 14 ஆம் தேதி, கரையோர பகுதியை பாதிக்கும் என்றும். அமெரிக்கா வானிலை முன்னறிவிப்புகள் கூறுகின்றனர்.
அவர் எடுத்த வீடியோ. யூ ட்யூப் இணைப்பு கீழே உள்ளது.

https://youtu.be/weoWlAs4Dr4

Download Our App

More Posts to Read on:-

Pulsar Star | Neutron Star | பல்சார் நட்சத்திரம் | நியூற்றான் நட்சத்திரம்

பல்சார் நட்சத்திரம் , இதனை கண்மூடித்தனமாக சுற்றும்   நியூற்றான் நட்சத்திரம் என்றும் கூறலாம். இது மிகவும் அதிகமாக எடை உடையது. உதாரனமாக . நீங்கள் ஒரு டீஸ் ஸ்பூன் அளவு நியூற்றான் நட்சத்திரத்திலிருந்து பொருளை எடுக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதன் எடை எவ்வளவு இருக்கும் என்று தெரியுமா? நமது பூமியின் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் எடை அளவுக்கு இருக்கு. ஆனால் அந்த நட்சத்திரத்தின் மொத்த அளவினை கனக்கிட்டால் மிகவும் சிறியதாக இருக்கும். நமது பூமியின் அளவு கூட இருக்காது . ஆனால் எடையை நீங்கள் கனக்கில் கொண்டால். பல ஆயிரம் நமது சூரியன் போன்ற சூரியன் களின் எடைக்கு சமமாக இருக்கும்.
இந்த நியூற்றான் நட்சத்திரங்கள் மிகவும் வேகமாக சுழழும் தன்மை உடையது என்று குறிப்பிட்டு இருந்தேன். அதன் வேகம் என்ன தெரியுமா? ஒரு நிமிடத்திற்கு 7 முதல் 40 ஆயிரம்  (40,000) தடவை.
இது போன்று இருக்கும் நியூற்றான் நட்சத்திரங்கள்   மிகவும் அதிகமாக காந்த புலங்களை பெற்றிருக்கும் , அதிகமான காந்த புலம் மற்றும் அதிவேக சுழற்றியானது இதிலிருந்து மிகவும் சக்திவாய்ந்த மின் காந்த கதிர்வீச்சுகலை வெளியேற்ற வைக்கிறது.  இதனை நாம் பூமியில் இருந்து பார்க்கும் போது . ஒரு கலங்கரை விளக்கம் போல். இது காட்சியளிக்கும். அதாவது அதன் வெளிச்சம் பிரகாசமாகவும் , மங்களாகவும் மாறி மாறி தோன்றும்.
இது போன்ற நட்சத்திரங்கள் நாட்கள் செல்ல செல்ல இது தனது பலத்தினை இழந்து விடும் இருப்பினும், இதன் சுழழும் வேகம். நிமிசத்திற்கு 100 என்ற அளவிலாவது இருக்கும் எங்கிறார்கள் . இது போன்று இருக்கும்  நியூற்றான் நட்சத்திரங்கள் PSR  என்று கூறுவர். பல்சார் நட்சத்திரம் PSR 1620-26. இதனை சுற்றிவரும் ஒரு கிரகம் தான். மிகவும் பழமையான கிரகம் என கண்டறியப்பட்டுள்ளது. அதன் பெயர் PSR 1620-26b
 

பழமையான கிரகம் | Oldest Exoplanet We Ever Discovered | பூமி போன்ற கிரகம்

விண்வெளியாளர்கள் பல ஆண்டுகளாக . பூமிக்கு அடுத்த படியாக இருக்கும் கிரகத்தினை தேடி வருகின்றனர். அது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். சரி. இப்போ. ரொம்பவும் பழமையான கிரகம் என்ன என்று தானே கேட்கிறீர்கள்.அதன் பெயர். PSR 1620-26b இது கடந்த 2003 ஆண்டு கண்டறியப்பட்டது. இது கண்டறியப்பட்ட இடம் எது என்றால் இன்னும் ஆச்சரியமாக இருக்கும். அது தான் மெஸ்ஸியர் 4 (M4) Messier 4 . மெஸ்ஸியர் 4 என்பது ஒரு கிலஸ்டர். அதுவும் குளோபுலர் கிலஸ்டர்.

இந்த கிரகம் நமது வியாழன் கிரத்தினை போன்று 2 மடங்கு அதிக எடை உடையது என கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் இது ஒரு கேஸ் ஜயன்ட். Gas Giant., வாயு அரக்கன் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

இது சாதாரண மற்ற எக்ஸோ பிளானட் போன்று உருவாகி இருக்கலாம் என்றாலும் ஆராய்சியாளர்கள் இதனை சற்றி வித்தியாசமாக தான் பார்க்கிரார்கள். ஏனெனில் இது இருக்கும் பகுதியானது மெஸ்ஸியர் 4 எனும் ஒரு குளோபுலர் கிலஸ்டர், இந்த பகுதியில் உள்ள PSR 1620 – 26 எனும் ஒரு பல்சார் நட்சத்திரத்தினை சுற்றிவரும் கிரகம் தான் இந்த PSR 1620 – 26B

 

இந்த கிரகமானது அதன் சொந்த நட்சத்திரம் உருவான காலத்தில் . உருவாகி இருக்கலாம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பல்சார் நட்சத்திரம் . மெஸ்ஸியர் 4 எனும் பகுதியல் இருப்பதாக நான் குறிப்பிட்டு இருந்தேன் . இந்த மெஸ்சியர் 4 பகுதி 13 பில்லியன் ஆண்டுகள் பழமையான ஒரு பகுதி. அங்கு இருக்கும் இந்த கிரகம் கிட்டதட்ட 12.7 பில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என. கண்டறியப்பட்டுள்ளது. அப்படி என்றால். இது ஒட்டு மொத்த பிரபஞ்சம் உருவாக 1 பில்லியன் ஆண்டுகளில் உருவாகிய ஒரு கிரகம்.

 உங்களுக்கு புரியவில்லையா நமது பிரபஞ்சத்தின் வயது 13.8 பில்லியன் ஆண்டுகள். 

Download Our App

More Posts to Read on:-

September 02, 2018

Lost and Found Philae | தொலைந்த ஃபீலே லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2014 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ரொசட்டா விண்கலம், வாஷிங் மெஷின் அளவிலான. ஒரு லேண்டரையும் சுமந்து சென்றது. இதன் பெயர்தான். ஃபீலே , இந்த லேண்டரை காமெட் “67 பி ” எனும் விண்கல்லின் மேலே தரையிறக்கும் போது. ஏற்பட்ட கோளாரின் காரனமாக இது. மிகவும் நிழலான பகுதியில் தரையிரங்கியது. இதனால் இந்த லேண்டரில் இருந்த சோலார் பேனல் களினால், அந்த லேண்டருக்கு தேவையான சூரிய சக்தியை பெற முடியவில்லை. இதனால். இந்த லேண்டர். பூமியின் கட்டுப்பாட்டு அறையில் கையில் அகப்படாவண்ணம் இருந்தது. இதனால் . ரொசட்டோ எனும் விண்கலத்திற்கு அந்த தொலைந்த் லேண்டரை தேடும் பனியை வழங்கப்பட்டது.

கடைசியாக 2 வருடங்கள் கழித்து. இந்த ஃபீலே லேண்டர். அங்கு கண்டு பிடிக்கப்பட்டது. அந்த நாள் வரலாற்றில் இன்றுதான். அதாவது  (02-09-2016)

Martian skies Clears over Opportunity rover|செவ்வாயில் தெளிவாகும் வானம்

மார்ஸ் ஆபட்டுநிடி ரோவர் opportunity rover, 30 தேதி மே மாதம் இதனை முதலில் கண்டறிந்தார்கள், அதாவது செவ்வாயில் உள்ள புயல், அதன் பிறகு பல மாதங்கள் கழித்து இப்போது தான், மார்ஸ் opportunity rover இருக்கும் பகுதியில் இருந்து 3000 கிலோ மீட்டர் அளவுக்கு, வானம் தெளிவாகி இருப்பதாக கண்டறிந்து இருக்கின்றனர்,

இதுவரைக்கும், ரோவர், ஆஃப் லைன் எல் தான் இருந்துள்ளது. இந்த மெகா புயல் கடந்த பிறகு தான் ரோவரின் 15 வருட பழமையான சோலார் பேனல்கள் செயல்பட ஆரம்பிக்கும். என்றும் இதனை ரோவர் சிறப்பாக செய்து முடிக்க 45 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளார்கள், அதாவது 45 நாட்களுக்குள்், அது பூமியை தொடர்பு கொள்ளவில்லை எனில். அந்த ரோவர் செயல் எழந்ததாக அறிவிக்கப்படும் என. கூறுகின்றனர்,

Oppurtunity ரோவர் இல் இருந்து கடைசியாக ஜூன் மாதம் 10 தேதி தான் தகவல்கள் வந்தன, அதிலிருந்து இதுநாள் வரை ஆஃப் லைன் எல் தான் உள்ளது. செவ்வாயின் வானில் தாவ் அளவு (tau level) tau அளவு என்றால். சூரிய ஒளியில் உள்ள ஒருகுறிப்பிட்ட energy அளவு. இந்த அலவுஆனது 1.5 க்கும் கீழே குறையுமாயின், நமது பூமியில் உள்ள டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் மூலமாக தொடர்பு கொள்ளும் முறையை மேற்கொள்ளப்படும் . என்று நாசாவின் உள்ள oppirtunity ரோவர் குழுவினர் கூறியுள்ளனர்.

https://knowridge.com/2018/09/martian-skies-clearing-over-opportunity-rover/

1-9-2018 OTD in Space History | வரலாற்றில் இன்று

இன்றுதான் முதன் முறையாக “பயனீர் 11 விண்கலமானது சனிகிரகத்தினை கடந்து சென்றது. ” அதாவது 1 செப்டம்பர் 1979 ஆம் ஆண்டு , நாசாவின் பயனீர் 11 விண்கலமானது சனிகிரகத்தினை கடந்தது. முதன்முறையாக. இதனை கொண்டுதான் .,, வாயேஜர் விண்கலங்கள் அதன் பாதையை பாதுகாப்பானதாக அமைத்துக்கொண்டன. என்றால் ஆச்சரியபடுவதற்ற்கு இல்லை.

இந்த பயனீர் 11 விண்கலமானது 1973 ஆம் வருடமே ஏவப்பட்டது. ஆனால் இது முதலில் வியாழன் கிரகத்தினை பார்ப்பது போல் தான் இருந்தது. பிறகு வியாழன் கிரகத்தின் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி. இது தனது பாதைய சனிகிரகத்திற்கு மாற்ரியது.

இது தான் , விண்வெளி வரலாற்றில் இன்று நடந்தது. அதாவது முதன் முதலில் சனிகிரகத்தின கடந்து சென்ற விண்கலம் பயனீர் 11 அது இன்றுதான்…

PodCast

September 01, 2018

Case against Mars Colonisation | செவ்வாய் குடியேற்ற பிரச்சினை

இந்த மாத ஆரம்பத்தில் அதாவது முதலாம் ஆகஸ்டு 2018 அன்று. எலன் மஸ்க் இன் ஸ்பேஸ் எக்ஸ் சார்பில் ஒரு கூட்டம் போடப்பட்டது. இதனை மார்ஸ் ஒர்க் ஷாப் ஆரம்ப விழா என்று அழைக்கின்றனர்.இதில் அமெரிக்காவை சேர்ந்து முன்னணி அறிவியல் அறிஞர்கள் மற்றும் முக்கியமான அழைப்பாளராக. நாசா வின் மார்ஸ் exploration குழுவினர் அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரும் பேசிய ஒரு தலைப்பு. விவாதம் செய்த அந்த தலைப்பு என்னவென்றால். “செவ்வாயில் மனித குடியேற” என்பது பற்றிதான்.

 

இதில் மிகுந்த ஆர்வம் காட்டும் எலன் மஸ்க். இன் ஸ்பேஸ் ஏக்ஸ். நிறுவனமானது. இன்னும் 40-100 வருடத்திற்குள் மனிதர்களாகிய நாம், செவ்வாயில் தரையிறங்கி. அதில் மக்கள் தொகை கொண்ட ஒரு காலனியை கொண்டுவரவேண்டும் என்று கூறும் நேரத்தில் , அங்குள்ள பலர் இதனை செய்ய வேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

பியோ research சென்டர் என்ற ஒரு அமெரிக்கா நிறுவனம், அந்த நாட்டு குடிமக்கள் இடம் ஒரு சில சர்வே எடுத்துள்ளது அதில் சொன்ன கருத்துக்களை வைத்து அவர்கள். அதாவது அமெரிக்கா மக்கள் எதை விரும்புகிறார்களாம் என்று ஒரு தரம் பிரித்து வைத்துள்ளனர். (முக்கியமாக விண்வெளி பற்றியும் நாசாவின் செயல்கள் பற்றியும்) அந்த தரவுகளின் அடிப்படையில் மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்புவதை அமெரிக்கா மக்கள் விரும்பவில்லை . அது 8 ஆம் இடத்தில் உள்ளது. அதனால். நாம் வேறு ஏதாவது பற்றி பேசலாம் இது வீன் என்கின்றனர் ஒரு சில அறிஞர்கள், அந்த சர்வே ரிசல்ட் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் இருந்து அமெரிக்கா மக்கள். பூமியை காப்பாற்றுவதில். மற்றும் பூமியில் தட்ப வெப்ப மாற்றங்களால் கண்காணியுங்கள் என்று அதிகமாக வலியுறுத்தி இருப்பதை உங்களால் கான முடியும்.

Ref: http://www.pewinternet.org/2018/06/06/majority-of-americans-believe-it-is-essential-that-the-u-s-remain-a-global-leader-in-space/ps_06-06-18_science-space-01/

ஆனால் இங்குதான் எலன் Musk அவர்களின் கருத்தை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். மேலே உள்ள படத்தில் நீங்கள் 65 சதவீத அமெரிக்கா மக்கள் பூமியை காப்பாற்ற சொல்லியிருப்பது புரியும் ஆனால். . 73%மக்கள் என்ன கூறுகிறார்கள் என்றால் “அமெரிக்கா தான் விண்வெளி போட்டியில் முன்னணியில் இருக்கவேண்டும் ” என்று.

“American will be pioner in space race” they said

அப்படி இருக்கையில் விண்வெளி போட்டியில் இதுவரை அமெரிக்காவின் ரஷ்யாவும் தான் இருந்து வந்தன. ஆனால் இப்போது , சைனா, ஜப்பான், மற்றும் இந்தியா போன்ற நாடுகள் மிகுந்த வேகத்தில் வளர்ந்து வருகின்றன. குறிப்பாக. விண்வெளி போட்டியில்.. எனவே நாம் இந்த செவ்வாய் மனிதர்கள் குடியேற்ற வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று . கூறுகிறது. ஸ்பேஸ் எக்ஸ் என் குழு.

நாசா வின் ஒரு பிரத்தியேக வரைபடம். (கர்ப்பணை)

செவ்வாய் பயணமானது ரொம்பவும் ஆபத்து நிறைந்தது, கடுப்பா இருக்கும் , உத்திரவாதம் இல்லாதது. ஆனாலும் தற்போது லேட்டஸ்டாக வந்த ஒருசில தரவுகள், செவ்வாயின் துருவ பகுதிகளில் தண்ணீர் ஆதாரம் இருக்கிறது என்றும், அதன் வளிமண்டலத்தில் மீதெனின் ஒரு வகை கலந்திருக்கிறது என்றும்.

இதெல்லாம் நம்மை அங்கு போக தூண்டினாலும். அதன் ஆபத்துகள் மிகவும் பிரம்மாண்டமானது.

மறைந்த முன்னாள் இயற்பியல் அறிஞர் “ஸ்டீஃபன் ஹாக்கிங்” கூட . சொல்லும் போது, நமது பூமி இன்னும் 100 வருடங்கள் வரைதான் தாக்கு பிடிக்கும். என்று கூறியதையும் நாம் சாதாரணமாக அப்படியே விட்டுவிட முடியாது. எனவே

நீங்க என்ன நினைக்கிறீங்க அப்டின்னு எனக்கு கமெண்டுல சொல்லுங்க . அடுத்த பதிவில் பார்ப்போம்.

முழு கட்டுரை: https://amp.theguardian.com/science/blog/2018/aug/28/the-case-against-mars-colonisation

Download Our App

More Posts to Read on:-