Wasp 121B , இரும்பையே உருக்கி வளிமண்டலத்தில் பரவவிடும் விசித்திர கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது |Hubble Uncovers a ‘Heavy Metal’ Exoplanet
புவியிலிருந்து சுமார் 900 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரம் தான் WASP 121 எனும் நட்சத்திரம். இதன் அருகில். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் மிக அருகில் சுற்றிவரும் கிரகத்தின் பெயர்தான் WASP121b ,
இந்த கிரகம் அதன் சூரியனான WASP 121 என்ற நட்சத்திரத்தினை சுமார் 31 மணி நேரங்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. அப்படி என்றால் எவ்வளவு அருகில் இருக்கும் என நீங்களே கற்பனை செய்து பாருங்கள்.
இதன் காரணமாக அநத நட்சத்திரத்திலிருந்து வரும் அதிக வெப்பம் மிகுந்த புறஊதா கதிர்கள் இந்த கிரகத்தில் உள்ள “கன உலோகங்களாக ” கருதப்படும். “இரும்பு மற்றும் மக்னீசியம், போன்ற தனிமங்கள் வாயுக்களாக , அந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் வெளியேருவதை . ஹப்புள் விண்வெளி தொலைநோக்கியானது. கண்டறிந்துள்ளது.
இந்த கிரகம் நமது வியாழன் கிரகத்தினை போன்று அளவுடையது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் வியாழனை போன்று 1.18 மடங்கு பெரியது.,
இது போன்று அதாவது ஒரு வியாழன் கிரகம் போன்ற கிரகம் சூரியனுக்கு மிக அருகில் இருந்தால் . அதனை “HOT Jupiter” என்று அழைப்பதுண்டு.
பொதுவாக இது மாதிரியான HOT Jupiter கிரகங்கள் மிகவும் பெரியதாக இருக்கும் அதனால். என்ன தான் கிரகத்தில் உள்ள தனிமங்கள் வெப்பமடைந்து வெளியேறினாலும். அவை வளி மண்டலத்திற்கு செல்லாது. மாறாக மேகங்களை போல் , மாறி மாறி அந்த கிரகத்திற்கு திரும்பவும் வரும் அளவு , அங்கேயேதான் இருக்கும், ஒரு மேகத்தினை போல.
உதாரணத்திற்கு நீங்கள் நம் பூமியை எடுத்துக்கொள்ளுங்கள். இங்கு நீர் மூலக்கூறுகள் வெப்பத்தின் காரணமாக நீராவியாக மேலெலும்பும், ஆணால். மேகங்களாக மாறுமே தவிர. அதை தாண்டி வளிமண்டலத்திற்கு செல்லாது.
ஆனால் இந்த HOT Jupiter ஆக இருக்கும் wasp121b கிரகத்தில் முற்றிலும் மாறாக. கன உலோகங்கள் யாவும். வளிமண்டலம் செல்லும் அளவுக்கு. வெப்பம் அங்கு வாட்டி வதைக்கிறது.
அறிஞ்சர்களின் கருத்துப்படி. அந்த கிரகத்தில் சுமார்4 600 டிகிரி ஃபாரன் ஹீட் இருக்கலாம் என அறிஞ்சர்கள் கூறுகிரார்கள்.
அது மட்டுமின்றி இந்த கிரகத்தினை பற்றி வரும் காலத்தில் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் ஆராய திட்டமிட்டுள்ளனர், இதன் மூலம் நமக்கு பல தகவல்கள் இந்த கிரத்தினை பற்றி கிடைக்க வாய்ப்புள்ளது.
Post a Comment