Vikram Lander Touch Down On September 7th 1.40am |இன்று நள்ளிரவு 1.40 மணியளவில் விக்ரம் லேண்டர் சந்திரனில் தரையிரக்கப்படுகிறது

Lander Vikram Touch down Moon

Latest Information about Vikram Lander: Lander is Lost Communication with Ground Control , at the Altitude of 2.1KM above the Lunar Surface, the data is being analysed

https://spacenewstamil.com/isro/vikram-lander-lost-communication-with-ground-control-at-2km-altitude-of-moon-surface/

ஜூலை 22 ஆம் தேதி ஜி எஸ் எல் வி மார்க் 3 வகை ராக்கெட் மூலமாக வின்ணில் பாய்ந்தது இந்தியாவின் சந்திரயான் 2 விண்கலம். இந்த சந்திரயான் 2 விண்கலமானது செப்டம்பர் 7 ஆம் தேதி அதனுடன் கொண்டு சென்ற விக்ரம் என்று பெயரிடப்பட்ட லேண்டரினை நிலவின் தரைப்பகுதியில் நிலைநிறுத்தும்.

இதற்கான ஆயத்த பணிகள் இன்று நள்ளிரவு 1:10 மணியளவில் ஆரம்பிக்கப்படும் என்று இஸ்ரோ தரப்பில் கூறியுள்ளது. அதாவது 1.40 மணிக்கு தான் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிரங்கும் ஆனால் இதற்காக இஸ்ரோ விஞ்சானிகள் நள்ளிரவு 1.10 முதல் தயாராக ஆரம்பித்து விடுவார்கள். இதனை இஸ்ரோ இனைய தளத்தில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட உள்ளது .

நேரடி ஒளிபரப்பினை கானஅதனை கான Click Here

1.40 மணிக்கு

நள்ளிரவு 1.40 மணிக்கு சந்திரயான்2 விண்கலத்தில் இருந்து விக்ரம் என பெயரிடப்பட்ட லேண்டர் கீழிறங்க ஆரப்பிக்கும் நிலவின் தரைப்பகுதியை நோக்கி The Moon Lander Vikram will descending at 1.40am,

லேண்டர் முழுவதுமாக கீழிறங்க 15 நிமிடங்கள் பிடிக்கும் என இஸ்ரோ விஞ்சானிகள் கூறுகிறார்கள்

அப்போது விக்ரம் லேண்டரானது சுமார் 35கி.மீட்டர் உயரத்தில் இருந்து 6000 கி.மீ / மணி என்ற வேகத்தில் நிலவில் தரையிரங்கிக்கொண்டிருக்கும்.

Chandrayaan 2 Rover Vikram’s Liquid Engine 800N for Rough Breaking

லேண்டரின் வேகம்

விக்ரம் லேண்டரில் 4 திரவ எஞ்சின்கள் உள்ளன.

இவை நிலவின் தரைப்பகுதியில் அதீத வேகத்தில் தரையிரங்குவதை தவிர்ப்பதற்காக , இயக்கப்படும்.

35 கி.மீட்டர் உயரத்தில் இருந்து 7.4 கி.மீட்டர் என்ற உயரத்தினை அடையும். அப்போது மனிக்கு 526 கி.மீட்டர் என்ற கணிசமான அளவில் அதன் வேகம் குறைக்கப்படும்.

இப்படியே படிப்படியாக 5 கி.மீட்டர் உயரம், மற்றும் 400 மீட்டர் உயரம் என்ற நிலையினை லேண்டர் அடையும்.

நிலவுக்கும் லேண்டருக்கும் சுமார் 400 மீட்டர் உயரம் இருக்கும் நேரத்தில் , விக்ரம் லேண்டர் சுமார் 12 வினாடிகள் கிடைமட்டமாக பறக்க ஆரம்பிக்கும், இது எதற்காக என்றால்?

நிலவின் தரைப்பகுதியைனை புகைப்படங்கள் எடுத்து , எந்த இடத்தில் தரையிரங்களாம் என லேண்டரில் உள்ள கணினி அமைப்பு முடிவு எடுக்கும்.

Embed from Getty Images

மீண்டும் லேண்டருக்கும் , நிலவுக்கும் 30 மீட்டர் உயரம் இருக்கும் போது, தேர்வு செய்யப்பட்ட இரண்டு நிலவின் தென் துருவப்பகுதியில் Manzinus and Simpelius Crater என்ற நிலவின் பள்ளத்தாக்கில் தரையிரங்கும்,

தரையிரங்கும் முடிவு முழுக்க முழுக்க லேண்டரில் உள்ள கணினி அமைப்பு பார்த்துக்கொள்ளும்.

Manzinus and Simpeliusj vikram lander will touch down at any of these crator of moon

ஏற்கனவே இஸ்ரேலின் Beresheet விண்கலம் வேகத்தினை குறைக்க முடியாததால் நிலவில் மோதி அழிந்தது நினைவிருக்கலாம்

No comments