Vikam Lander Lost in 2.1 KM or 0.335 Meter Altitude??? விக்ரம் லேண்டர் தொலைந்தது 2.1கி.மீ or 0.332 மீட்டர் ??

Scientific thamizhans Where’s Vikram Video

Scientific Thamizhan என்ற யூடியூப் சேனலில் ஒரு வீடியோ போட்டிருந்தனர். அதில் உண்மையில் சந்திரயான் 2ன் லேண்டர் விக்ரம் தொலைந்தது எந்த இடத்தில் என்பது பற்றி ?

நானும் ISRO வின் நேரடி நிகழ்வினை பார்த்து கொண்டுதான் இருந்தேன், அப்போது விக்ரம் சுமார் நிலவின் மேலே 335 மீட்டர் இருக்கும் போது அதிலிருந்து எந்த வித தகவல்களும் வராமல் இருந்தது.

இந்த நிகழ்வினை இஸ்ரோ மட்டுமல்ல நெதர்லேண்டில் உள்ள https://twitter.com/cgbassa ரேடியோ தொலைநோக்கியின் மூலமும் கண்காணித்து வந்தனர் இதன் மூலம் எடுக்கப்பட்ட டாப்லர் வளைவுகளை வைத்து ஆராய்ந்து அதில் எடுக்கப்பட்ட தகவல்கலையும் , சேர்ந்து பார்க்கும் போது.

தலைகீழாக விக்ரம்

விக்ரம் லேண்டர் நிலவின் தரைப்பகுதியில் இருந்து சுமார் 2.920 கி.மீட்டர் தொலைவில் இருக்கும்போது , விக்ரம் கடிகார முள் பக்கமாக (வலது பக்கம் ) முழுமையாக சுற்றியதை நீங்கள் பார்க்கலாம், இது தான் அனைத்திற்கும் உண்டான முக்கிய காரனம். ..இது எதனால் வந்தது என தெரியவில்லை

Vikram Clockwise rotation at atitude of 2.9km above the surface of the moon

இந்த நிகழ்வின் காரணமாகத்தான் லேண்டர் மிகவும் சிரமப்பட்டு தன்னை சீர்படுத்த முயற்சித்து இருக்கலாம் அப்போது அதிக அளவு எரிபொருளையும் பயன் படுத்தி இருக்கலாம்.

உங்களுக்கே தெரியும் எந்த பக்கம் உந்துதல் Thrust அதிகமாக இருக்கிறதோ அதன் எதிர் பக்கம் தான் அது செல்லும். இந்த நிகழ்வின் மூலம் ஏற்பட்ட உந்துதலாம் தவறான பக்கத்திற்கு போயிருக்கலாம் .

அல்லது இந்த தவறு இப்படியும் நிகழ்ந்திருக்கலாம். அதாவது நிலவின் ஏதாவது ஒரு பள்ளத்தாக்கில் விக்ரமின் அல்டிமீட்டர் பட்டு தரைக்கும் லேண்டருக்கும் இருக்கும் தொலைவினை தவறாக பதிவிட்டு இருந்திருக்கலாம்.

திட்டமிட்ட தொலைவு

அதுமட்டும் இல்லாமல் விக்ரம் திட்டமிட்ட கிடைமட்ட தொலைவினை அடந்துவிட்டது , ஆனால் கொஞ்ச தூரத்திற்கு முன்னாலே. கீழுல்ல படத்தினை பாருங்கள்

இதில் விக்ரம் எங்கு வந்த பிறகு செங்குத்தாக கீழிறங்க வேண்டும் என்ற ஏற்கனவே திட்டமிட்ட ஒரு சிவப்பு நிற கோடு இருப்பதை பார்கிறீர்கள், ஆனால் மேலே நடந்து அந்த கடிகார முள் திசையில் விக்ரம் தவறுதலாக சுற்றியதன் விளைவாக விக்ரமால் கிடைமட்ட தொலைவினை அடைய முடியவில்லை,

On live நேரடி ஒளிபரப்பில்

அது மட்டும் இல்லாமல் நீங்கள் லைவ் நிகழ்சியை பார்த்தீர்கள் என்று சொன்னால் அதில் விக்ரம் திடீரென வேகமாக கீழிறங்கியதை பார்க்கலாம். watch the video down

lander vikram’s planned and actually trajectory

Astronomer Prabu

These Information are gathered by Astrophotographer, Amateur Astronomer, Prabu s Kutti You Can follow his Works and Photographs, also visit his website

இப்போது விக்ரம்

இப்போது விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தினை சந்திரயான்2 ஆர்பிட்டர் வழியாக நாம் thermal Imaging மூலம் கண்டறிந்து விட்டோம் அது மட்டுமில்லாமல் விக்ரம் தரைப்பகுதியில் சற்று சாய்ந்த நிலையில் , அது மட்டுமின்று உடையாமல் உள்ளது என கண்டறிந்து உள்ளோம்.

Vikram in Deep Space Network

இந்த் விக்ரம் லேண்டரினை தொடர்பு கொள்ள முடியுமா என பல வழிகளில் முயற்சித்து வருகிறோம். இதில் ஒரு முகமாக நாசாவின் Deep Space Network அமைப்பு மூலம் இதனை தொடர்புகொள்ள முடியுமா என ஆராய்ந்து வருகின்றனர்.

நாசாவின் ஆசை

நமது அடுத்த சூரியனுக்கான மிஷனில் Adithya L1 ல் நாசா இஸ்ரோவுடன் இனைந்து செயலாற்ற தயாராக உள்ளதாக டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளது நாசா

No comments