வியாழன் கிரகமா சூரியானா? Is Jupiter a failed star??
வியாழன் கிரகம் ஒரு சூரியனாக வேண்டியதா? பலரும் வியாழன் கிரகத்தினை ஒரு சூரியன் ஆக வேண்டிய பொருள் ஆனால் தப்பித்தவறி கிரகமாக இருக்கிறது என்று கூறுவார்கள்.
இதற்கு அவர்கள் கூறும் காரணம் ஆனது நமது சூரியனில் 75% ஹைட்ரஜன் மற்றும் 25% ஹீலியம் உள்ளது.
இதேபோன்று வியாழன் கிரகத்திற்கும் 90% ஹைட்ரஜனும் 10% ஹீலியமும் இருக்கிறது இதனாலேயே வியாழன் ஒரு சூரியன் ஆக வேண்டிய பொருள். மாறாக கிரகமாக இருக்கிறது என்று கூறுவார்கள். முதலில் தோற்றுப்போன நட்சத்திரம் (failed star) என்றால் என்ன என்று பார்ப்போம்.
- Interesting Facts about Earth – நம்முடைய பூமியை பற்றிய 5 நம்ப முடியாத செய்திகள்
- 10 Facts About Our Earth’s Atmosphere in Tamil
- Facts About Planet Mercury | புதன் கிரகம் பற்றிய சில செய்திகள் [தமிழ்]
- Facts About Planet Venus | வெள்ளி கிரகம் பற்றிய சில செய்திகள்
- Facts About Our Moon | நமது சந்திரன் பற்றிய சில செய்திகள் [Tamil]
பிரவுன் டுவார்ஃப் (brown dwarf) என்பது ஒரு நட்சத்திரத்தின் வகை ஆனால் அது நட்சத்திரம் கிடையாது.
அளவில் இரண்டும் கிட்டத்தட்ட பார்ப்பதற்கு ஒன்றாகவே இருக்கும் ஆனால் வியாழன் கிரகத்தை விட brown dwarf நட்சத்திரமானது அதிகம் எடை உடையதாகவும் அதிக வெப்பம் உடையதாகவும் இருக்கும்.
நட்சத்திர உருவாக்கம்
நட்சத்திரங்கள் உருவாகும் மூலக்கூறு மேகங்கள் (molecular cloud) பகுதிகளில் ஏற்படும் மோதல்கள் காரணமாக பல ஆயிரம் வருடங்களாக, ஏண், குறிப்பிட்டு சொல்லப்போனால் பல லட்சம் ஆண்டுகளாக நட்சத்திரங்கள் உருவாகும் நிகழ்ச்சி அங்கு நடைபெறும்.
இதில் ஒரு சில நட்சத்திரங்கள் முழுமையாக அந்த மூலக்கூறு பகுதிகளில் உள்ள பொருட்களை உட்கொண்டு அதிக எடை உடைய நட்சத்திரமாக மாறுவதற்கு முன்னதாகவே அவ்விடத்தைவிட்டு வெளியே சென்றுவிடும் இதற்குத்தான் தோற்றுப்போன நட்சத்திரம் அல்லது failed star என்று பெயர்.
கிரக உருவாக்க மண்டலம் protoplanetary disc
எந்தெந்த பொருட்கள் எல்லாம் நட்சத்திரங்கள் உருவாகும் மூலக்கூறு மேகக் கூட்டத்தில் தனித்து இருக்கின்றனவோ, அவைகள் மட்டுமே அவ்விடத்தில் உள்ள அனைத்து மூலக்கூறுகளும் உட்கொண்டு ஒரு பெரிய நட்சத்திரமாக மாறும்.
மாறும் தருவாயில் மூலக்கூறு மேகங்களில் இருக்கும் ஒரு சில பகுதிகள் அந்த நட்சத்திரத்தை சுற்றிக்கொண்டே இருக்கும்.
அதாவது அந்த நட்சத்திரம் இன்னும் முழுமையாக உருவாகவில்லை மீதமிருக்கும் மூலக்கூறு மேகங்கலையும், உட்கொள்ளும் போது அங்கு இருக்கும் மூலக்கூறு மேகங்கள் ஒரு சில பொருட்களை உருவாக்கும் அவைகளே கிரகங்களாக வளரும்.
இந்த வழியில் முதன்மையாக தோன்றிய கிரகம் தான் நமது வியாழன் கிரகம் என்று அறிவியலாளர்களால் பெரிதும் நம்பப்படுகிறது.
அப்படி இருக்கும் பட்சத்தில் வியாழன் கிரகமும் மீதமிருக்கும் மூலக்கூறு மேகங்களை உட்கொண்டு ஒரு பெரிய நட்சத்திரமாக அல்லது சுமாரான நட்சத்திரமாக உருவாகி இருக்கக்கூடும் ஆனால் நமது சூரியன் அனைத்து மூலக்கூறு மேகங்களில் உள்ள பொருட்களையும் தன்னிடத்தே எடுத்துக்கொண்டு. மிகப்பெரும் அறுதிப் பெரும்பான்மையை காட்டுகிறது.
நீங்கள் எல்லாரும் அறிந்தது தான் நமது சூரியக்குடும்பத்தில் ஒட்டுமொத்த இடையில் 99.8 சதவீத எடையை நமது சூரியன் மட்டுமே கொண்டுள்ளது.
மீதமுள்ள 0.1 சதவிகித எடையை வியாழன் கிரகமும் மேலும் 0.1 சதவீத எடையை மற்ற கிரகங்களும் என்ற விகிதத்தில் சம படுத்தப்பட்டுள்ளது.
இதைப்பற்றிய Video
Post a Comment