MAVEN Shriking its orbit for Mars 2020 | மார்ஸ் 2020 ரோவருக்கு உதவும் மேவன் விண்கலம்

Maven Space craft

4 வருடங்களாக சிவப்பு கிரகமென்று அழைக்கப்படும் செவ்வாய்யை சுற்றிவரும் விண்கலம் தான் “மேவன்” விண்கலம் Mars Atmosphere and Volatile Evolution = MAVEN

இந்த விண்கலமானது 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாயின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்டப்பட்டது கடந்த 4 வருடங்களாக செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம் பற்றி ஆராய்ந்து பல அறிய தகவலகள பூமிக்கு அனுப்பியுள்ளது.

வட்டப்பாதை (Orbit)

இந்த மேவன் விண்கலமானது செவ்வாய்கிரகத்தினை சுமார் 4.5 மணி நேரங்களுக்கு ஒரு முறை சுற்றிவருகிறது அதாவது ஒரு நாளைக்கு பூமியின் கணக்குப்படி 5.3தடவை அந்த விண்கலத்திலிருந்து தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

அது மட்டுமில்லாமல் இந்த விண்கலமானது செவ்வாய் கிரகத்தினை 6500×150 என்ற உயரத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது, புரியும் படி செல்லவேண்டும் என்றால் , கிரகத்திற்கும் விண்கலத்திற்கும் இருக்கும் உச்சபட்ச உயரம் 6500 கிலோ.மீட்டர் மற்றும் கிரகத்திற்கு விண்கலத்திற்கு இருக்கும் குறைந்த பட்ச உயரம் 150 கி.மீட்டர்கள். கீழுள்ள படம் உங்களுக்கு புரிய வைக்கும் a Image can talk 100 things

இந்த உச்சபட்ச மற்றும் குறைந்த பட்ச உயர தூரங்களை 4500×150 என்ற அளவிற்கு குறைப்பதற்கு நாசா விஞ்சானிகள் திட்டமிட்டுள்ளார்கள்

பயன் என்ன??

இப்படி செய்வதன் மூலம் நாசா விஞ்சானிகளுக்கு கூடுதல் தகவல்கள் கிடைக்கும் ஆம், மேவன் விண்கலத்தின் சுற்றுவட்ட தொலைவு குறைக்கப்படுவதால் , விண்கலம் கிரகத்தினை ஒரு முறை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரமும் குறையும், அதாவது 4.5 மணி நேரங்களுக்கு ஒரு முறை என்ற நிலமை மாறி 3.5 மணி நேரங்களுக்கு ஒரு முறை கிரகத்தினை முழுமையாக சுற்றிவரும் அளவுக்கு மாற்றி அமைக்கப்படும்.

இதனால் ஒரு நாளைக்கு(பூமியின் கணக்குப்படி) 6.8 தடவைகள் அது செவ்வாய்கிரகத்தினை சுற்றிவரும். இதன் மூலம் நம்மால் 6.8 தடவைகள் அந்த விண்கலத்திலிருந்து தகவல்களை பெற முடியும்.

இது பயன் தானே. ஆனால் இதெல்லாம் எதற்காக???

மார்ஸ் 2020 (Mars 2020)

நாசாவின் மார்ஸ் 2020 ரோவரானது செவ்வாயினை ஆராய அடுத்த வருடம் வின்ணில் ஏவ இருக்கிறது. இந்த ரோவர் செவ்வாயில் தரையிரங்கும் தருவாயில் எந்த வித பிரச்சனைகளும் வராமல் இருப்பதற்காக ….

இந்த மேவன் விண் கலமானது தனது சுற்றுவட்ட பாதையை சுருக்கிக்கொள்கிறது. இதன் மூலம் நமக்கும் மேவன் விண்கலத்திற்கும் அதிக நேரம் தகவல் தொடர்பு கிடைக்கும்.

அது மட்டுமில்லாமல், செவ்வாய் கிரகத்தில் தற்போது இயக்கத்தில் சில கருவிகள் உள்ளன (உ.ம்) மார்ஸ் கியூரியாசிட்டி ரோவர், இன்சைட் லேண்டர் போன்ற கருவிகள்

இவ்வகையான கருவிகளிடமிருந்து தகவல்களை மேவன் விண்கலம் பெற்றுக்கொள்ளும் மீண்டும் பூமியை நோக்கி விண்கலம் திரும்பும் போது அந்த தகவல்களை பூமிக்கு அனுப்பும்.

அப்படி இருக்கையில் , மார்ஸ் 2020 தரையிரங்கும் போது எந்த விதமான ஆபத்தான சம்பவங்கள் நிகழ்ந்து விடகூடாது என்பதற்காக இந்த சுற்றுவட்ட பாதை சுருக்கம் நிகழ்த்தப்படுகிறது.

மேலே சொன்ன 4500×150 என்ற சுற்றுவட்ட பாதையை மேவன் அடைவதற்கு பல மாதங்கள் பிடிக்கும் ஏன் வருடம் கூட எடுக்கும். ஏனென்றால் ??

(Airbreaking) காற்று தடை

செவ்வாகிரகத்தினை சுற்றி வந்து கொண்டிருக்கும் மேவன் விண்கலமானது , அதன் குறைந்த பட்ச தொலைவை அடையும் போது ஒரு விதமான காற்று தடையை உண்டாக்குமாறு விஞ்சானிகள் செய்கின்றனர்.

இதன் மூலம் டிராக் (Drag) என்ற ஒரு வித நிகழ்வு கிடைக்கிறது. இந்த Drag வேறு எதுவும் இல்லை. நீங்கள் வேகமாக செல்லும் காரின் ஜன்னலில் வெளியே உங்கள் கைகளை நீட்டுவதை கற்பனை செய்து கொள்ளுங்கள் அப்போது உங்கள் கைகளை காற்று அடிப்பதை உணருவீர்கள்,

இதே போன்ற ஒரு நிகழ்வைத்தான் நிகழ்த்தி, விண் கலத்தின் வேகம் குறைக்கப்பட்டு இந்த சுற்றுவட்ட பாதை சுருக்கும் நடைபெற உள்ளது இதனால் இந்த நிகழ்வு படிப்படியாகத்தான் நிகழும்.

இந்த வட்டபாதை சுருக்கு நிகழ்வு இந்த வருடம் பிப்ரவரி மாதமே ஆரம்பிக்கப்பட்டு விட்டது

Source – JPL NASA MAVEN

மேலும்படிக்க

No comments