Mars 2020 Rover Has its Own Helicopter | செவ்வாயில் பறக்க இருக்கும் ஹெலிகாப்டர்
அடுத்த வருடம் ஜூலை மாதம் அட்லஸ் 5 ராக்கெட் வழியாக விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ள ஒரு சிறப்பான ரோவர்தான் “மார்ஸ் 2020” ரோவர்
இந்த ரோவர் “செவ்வாய்” கிரகத்தில் அதிக கனிம வளம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு பள்ளத்தாக்கில் தான் இறங்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த ரோவர் பழங்கால செவ்வாய்ல உயிரினங்கள் ஏதாவது வாழ்ந்து இருக்குமா என்றும், இப்போது நுன்ணுயிரிகள் வாழ தகுதியான சூழ்நிலை செவ்வாயில் நிலவுகிறதா என ஆராயும். அதை தவிர்த்து…
இந்த ரோவருடன் சேர்த்து ஒரு சிறிய வகை “ஹெலிகாப்டரை” அனுப்ப திட்டமிட்டு அதனின் வேலைகளும் 90% முடிந்த நிலையில் உள்ளது.
இந்த ஹெலிகாப்டரில் எந்த ஒரு அறிவியல் உபகரணங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த ஹெலிகாப்டர் சும்மா . அந்த நிலப்பகுதியில் உலவ முடியுமா, அல்லது பறக்க முடியுமா ?? என பார்ப்பதற்காக உருவாக்கப்படுகிறது . என Mars 2020 ரோவர் குழுவில் இருக்கும் அறிவியலாலர்கள் கூறுகிறார்கள்.
ஒரு வேளை ஹெலிகாப்டர் எந்தவித சிறமமும் இன்றி செவ்வாயின் தரைப்பகுதியில் பறந்தால். இதனை ஒரு திருப்புமுனையாக கொண்டு அடுத்த வரும் செவ்வாய் ஆராய்சி திட்டத்தில் செயல் படுத்து வோம் என அந்த் அறிவியலாலர்கள் கூறுகிறார்கள்
Post a Comment