K2-18B New Exoplanet found 110 Light Year away | புதிய பூமி போன்ற கிரகம் கண்டு பிடிக்கப்பட்டது

So Scientists now found new Super Earth called k2-18b is actually located at 110 Light years from earth and using the Kepler space telescopes data

கெப்லர் கிரகம்

கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி யின் மூலமாக 2015ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட பூமி போன்ற கிரகங்களில் ஒன்று தான் இந்த,

K2-18B என்ற கிரகம் இது நமது பூமியிலிருந்து சுமாராக 110 ஒளி ஆண்டுகள் தொலைவில் லியோ என்ற விண்மீன் திரளில் உள்ள K2-18 என்ற சிறிய வகை குள்ள நட்சத்திரத்தின் ஐ. சுற்றி வரும் கிரகம்.

Super Earth

இந்த கிரகம் ஒரு சூப்பர் எர்த் என்று அழைக்கப்படுவதும் உண்டு. அதாவது பூமியை போன்று இரண்டு மடங்கு அதிக அளவில் பெரிய கிரகங்களை இது போன்ற சூப்பர் எர்த் என்று அழைப்பது உண்டு.

ஆனால் இந்த K2-18b என்ற கிரகமானது நமது பூமியைக் காட்டிலும் எட்டு மடங்கு அதிக எடை உடையதாக உள்ளது.

Water vapour

இந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் நீராவி மூலக்கூறுகள் இருப்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

லண்டனை சேர்ந்த centre for space EXO Chemistry data lab. அறிவியல் குழுவில் உள்ள விஞ்ஞானிகள் 2016 மற்றும் 17. ஆம் ஆண்டுகளில் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட தரவுகளை ஆராய்ந்து வந்தனர்.

இதில் அந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் நீராவி மூலக்கூறுகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அந்த அறிவியலாளர்கள் nature astronomy journal எனும் ஆய்வு கட்டுரையில் வெளியிட்டு இருந்தனர்.

(Transit method) கிரகங்களை கண்டறியும் முறை

கிரகங்களை கண்டறிவதற்கு விண்வெளியாளர்கள் transit என்ற ஒரு முறையை பயன்படுத்துகிறார்கள்.அதாவது ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திநை நோக்கி ஒரு தொலைநோக்கி வைக்கப்படும்.

அந்த தொலைநோக்கியில் கிடைக்கப்பெறும் அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தின் ஒளியை ஒரு வரைபடத்தில் வரைவார்கள் அதாவது graph.

ஏதேனும் ஒரு குறிப்பிட்ட காலங்களில் அந்த நட்சத்திரத்தின் ஏதாவது ஒரு கிரகம் அல்லது வேறு ஏதாவது பொருள் கடந்து சென்று இருக்குமாயின்.

நமக்கு கிடைக்கப் பெரும் ஒளியின் அளவுகளில் ஒரு சிறிய இறக்கம் காணப்படும். இந்தவகையான இறக்கங்களை வரைபடங்களில் நம்மால் காண இயலும் அதாவது (small dip in graph)

Atmosphere finding

மேல் சொன்ன முறையின்படி கிரகம் இருப்பது கண்டறியப்படும். ஆனால் கிரகத்தில் என்னென்ன வாயு மூலக்கூறுகள் இருக்கின்றன அதன் வளிமண்டலத்தில் என்பது.

அந்த குறிப்பிட்ட கிரகத்தின் ஐ சூரியனுக்கு முன்னால் இருக்கும் பொழுது அந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் பட்டு சூரியனின் ஒளி பிரதிபலிக்கும். இதனை லைட் ஸ்பெக்ட்ரம் (light spectrum) கொண்டு நம்மால் அறிய முடியும்.

Missing elements

எனினும் இந்த கண்டுபிடிப்பில் நைட்ரஜன் மற்றும் மீத்தேன் அந்த வளிமண்டலத்தில் இருக்கலாம் என்றும் ஆனால் அதற்கான தரவுகள் எங்களுக்கு கிடைக்கவில்லை எனவும் அந்த அறிவியலாளர்கள் கூறினார்கள்.

Arrival of James Webb space telescope

அதுமட்டுமில்லாமல் வரக்கூடிய காலங்களில் இந்த கிரகத்தினை நாம் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி கொண்டு ஆராய்வதன் மூலம் நாம் அந்த கிரகத்தை பற்றிய பல அரிய உண்மைகளை தெரிந்து கொள்ள முடியும் என்றும் அந்த அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.

Ref NASA

Hubble Space 

No comments