ராக்கெட் ஏவுதல் தொழில் நுட்பத்தில் புதிய புரட்சி | SSLV - Small Satellite Launch Vehicle | ISRO's Commercial Plan - NSIL
Space X
நீங்கள் SpaceX என்ற கம்பெனி பெயரை கேள்விபட்டிருப்பீர்கள், எலன் மஸ்க் அதன் நிறுவனர். மிகப்பெரிய கோடீஸ்வரம், ஆனால் அவருடைய இந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் என்ன வேலை செய்கிறது என தெரியுமா.??
அவர்கள் அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசாவிற்கு சொந்தமான விண்வெளி தேவைகளில் பங்களிக்கிறாரகள். (commercial Resupply Mission) இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையினை நாசா , ஸ்பேஸ் எக்ஸ் நிருவனத்திற்கு கொடுக்கும், இவை ஒப்பந்தமாக கையெழுத்தாகும்.
உங்களுக்கு தெரியுமா? நாசா , ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம் செண்டினல் 6A (Sentinal 6A) என்ற செயற்கைகோளை விண்ணில் ஏவி தருவதற்காக 2017 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட்டுக் கொண்டது. ஆனால் இந்த செயற்கைகோள் 2020 ஆம் ஆண்டு தான் வின்ணில் அனுப்பப்போறார்கள்,
NSIL and ISRO
சரி விஷயத்திற்கு வருவோம். இப்போ மேலே உள்ள தலைப்பினை பாருங்கள், இதல் இந்தியா எப்படி புரட்சி செய்யும் என்று தானே உங்கள் கேள்வி?
2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இஸ்ரோவின் வணிக அமைப்பான NSIL ஆனது ஒரு சோதனை செய்ய இருக்கிறது. அது தான் SSLV – Small Satellite Launch vehicle சிறிய ரக ராக்கெட் ஏவுகலன். இதன் மூலம் நாம் குறைந்த செலவில் , சிறிய வகை ராக்கெட்டினை வின்ணில் ஏவ முடியும்.
Chandrayaan 2 Cost
உதாரனத்திற்கு உங்களுக்கு ஒன்று சொல்லுகிறேன். இந்தியா தற்போது “சந்திரயான் 2” விண்கலத்தினை விண்ணில் ஏவியது . இதன் மொத்த செலவு என்ன தெரியுமா??
செலவு விவரம் | ||
சந்திரயான் 2 (Orbiter, Lander, Rover) | 603 | Crores |
GSLV Mk III Launch cost | 375 | Crores |
Total cost | 978 | Crores |
இதில் நீங்கள் ராகெட் ஏவுதலுக்கு மட்டும் 375 கோடி ரூபாய் செலவாகி இருப்பதை காணலாம் , இது எதனால் என்றால்? நாம் GSLV வகை ராக்கெட்டினை ஏவியதால். இதே நாம் PSLV ராகெட் ஏவுவதாக இருந்தால் நமக்கு 150-200 கோடி வரை செலவாக்கும்,
ஆனாலும் இது போன்ற பெரிய ராக்கெட் விண்ணில் ஏவும் போது நம்மால் அடிக்கடி ஏவ முடியாது. ஒரு குறிப்பிட்ட நாளினை நாம் தேர்ந்தெடுத்து உலகுக்கு அறிவிப்போம்.
அந்த குறிப்பிட்ட நாளில் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ தயாராக இருக்கும் மற்ற நாட்டு வாடிக்கையாளர்கள் இஸ்ரோவின் அணுகி தங்கள் செயற்கைக்கோளை விண்ணில் ஏவி தருமாறு விண்ணப்பிப்பார்கள். இப்படித்தான் இதுவரை ராக்கெட் ஏவுதல் இருந்தன
SSLV -Small Sat Launch Vehicle
ஆனால் இந்தியாவின் வணிக அமைப்பான NSIL அமைப்பு ஒரு புதிய உத்தியை கையாள உள்ளது அதுதான் (SSLV)எஸ் எஸ் எல் வி என்ற சிறிய ரக ராக்கெட் ஏவுகலன்
Capacity | Limit of Reach |
500 KG | upto LEO (Low Earth Orbit) |
300 KG | upto Sun Sync Orbit |
30 Crores | Total Cost Will be Only |
இதன் மூலம் நம்மால் அதிக அளவு ராகெட் விண்ணில் ஏவ முடியும்.
அதிக ராக்கெட் ஏவுதல்….. அதிக வருமானம்……
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை நீங்கள் கீழே கமெண்டில் பதிவிடுங்கள் ,
Post a Comment