September 26, 2019

சந்திரனில் வினோத பொருள் கண்டுபிடிப்பு| Changi Rover Yutu-2 finds Mysterious "gel-like" substance on the far side of the moon

சைனாவின் நிலவு ரோவர் பெயர் யூடு2 (Yutu-2). ஒரு வினோதமான கூல் போன்ற பொருளை சந்திரனின் நிலப்பகுதியில் கண்டறிந்து உள்ளது.

சாங்கி 4 என்ற விண்கலத்தின் மூலமாக சந்திரனின் இருள் பகுதி என்று அழைக்கப்படும். (Far side of the moon)நிலவின் பின் பகுதிக்கு அனுப்பப்பட்ட ரோவர் பெயர் தான் யூ டூ 2.

கடந்த ஆகஸ்டு மாதம் ரோவர் ஒரு வித்தியாசமான பொருளை புகைப்படம் எடுத்துள்ளது. இதனைப்பற்றி சைனாவின் செய்தி அமைப்பு Our Space கூறுகையில்.

胶状物” (jiao zhuang wu), which can be translated as “gel-like.” 

சொல்லி இருந்தனர். ரோவர் குழு இதனை உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறது.

மேலும் ரோவர் ஆராய்ச்சிக் குழு எப்படி அந்த வித்தியாசமான இரண்டு மீட்டர் அகலம் கொண்ட பள்ளத்தினை அணுகினார்கள் என்ற பிரத்யேக படங்களையும் வெளியிட்டனர்,

கீழ் உள்ள புகைப்படத்தில் அந்த பள்ளத்தின் அருகே ரோவர் தனது இரண்டு சக்கரங்கள் மட்டும் தெரியும்படி புகைப்படம் எடுத்து இருப்பதை நீங்கள் காணலாம்

ஏற்கனவே சைனாவின் சாங்கி 4 லேண்டரின் உள்பகுதியில் சிறிய வகை பயிறை முளைக்க செய்தனர் என்பது குறிப்பிடித்தக்கது. அதுவும் ஒரு நாளில் செத்து விட்டது.

First UAE astronaut is going to space | அரபு எமிரேட்டில் சார்ந்த முதல் விண்வெளி வீரர்

சர்வதேச விண்வெளி மையத்தில் ஆராய்ச்சி பணிக்காக எப்பொழுதும் நாசா ஒரு மூன்று பேர் கொண்ட குழுவை சர்வதேச விண்வெளி மையத்தில் அமர்த்தும்.

அந்த வகையில் , இந்த முறை முதல்முறையாக அரபு எமிரேட் ஐ சார்ந்த முதல் விண்வெளி வீரர் என்று கருதப்படும் ஹேஸ்ஸா அல் மன்சூரி Hazza Al Manzoori முதல் முறையாக சென்றுள்ளார்.

அரபு எமிரேட்டில் முதல் விண்வெளி வீரர் என்பதால் நாடே அவரைப் பாராட்டி வருகிறது. 8 நாட்கள் வரை இவர் சர்வதேச விண்வெளி மையத்தின் பணியாற்றுவார் என்று தகவல் தெரிவித்து இருந்தனர்.

இவர் தன்னோடு சேர்த்து விண்வெளிக்கு அரபு எமிரேட்டின் கொடியையும் எடுத்துச் சென்றுள்ளார் அந்தக் கொடி முழுக்க முழுக்க பட்டுத்துணியால் ஆக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதனுடன் சேர்த்து புனித குர்ஆனையும், தனது குடும்ப புகைப்படம் ஒன்றையும், அத்துடன் இறுதியாக மூன்று மரங்களின் விதைகளையும் எடுத்து சென்றுள்ளார்.

இந்த விதைகளை சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் தாவரங்கள் வளர்க்கும் பகுதியில் ஒப்படைக்கப்படும்.

நேற்று இரவு 7 மணி அளவில் இந்த சோயுஸ் விண்கலம் புறப்பட்டு சென்றது. அதாவது 25 ஆம் தேதி புதன் காலை 9.57 மணி ( EDT). நமக்கு இரவு 7 மணியளவில்.

September 23, 2019

K2-18B New Exoplanet found 110 Light Year away | புதிய பூமி போன்ற கிரகம் கண்டு பிடிக்கப்பட்டது

So Scientists now found new Super Earth called k2-18b is actually located at 110 Light years from earth and using the Kepler space telescopes data

கெப்லர் கிரகம்

கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி யின் மூலமாக 2015ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட பூமி போன்ற கிரகங்களில் ஒன்று தான் இந்த,

K2-18B என்ற கிரகம் இது நமது பூமியிலிருந்து சுமாராக 110 ஒளி ஆண்டுகள் தொலைவில் லியோ என்ற விண்மீன் திரளில் உள்ள K2-18 என்ற சிறிய வகை குள்ள நட்சத்திரத்தின் ஐ. சுற்றி வரும் கிரகம்.

Super Earth

இந்த கிரகம் ஒரு சூப்பர் எர்த் என்று அழைக்கப்படுவதும் உண்டு. அதாவது பூமியை போன்று இரண்டு மடங்கு அதிக அளவில் பெரிய கிரகங்களை இது போன்ற சூப்பர் எர்த் என்று அழைப்பது உண்டு.

ஆனால் இந்த K2-18b என்ற கிரகமானது நமது பூமியைக் காட்டிலும் எட்டு மடங்கு அதிக எடை உடையதாக உள்ளது.

Water vapour

இந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் நீராவி மூலக்கூறுகள் இருப்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

லண்டனை சேர்ந்த centre for space EXO Chemistry data lab. அறிவியல் குழுவில் உள்ள விஞ்ஞானிகள் 2016 மற்றும் 17. ஆம் ஆண்டுகளில் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட தரவுகளை ஆராய்ந்து வந்தனர்.

இதில் அந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் நீராவி மூலக்கூறுகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அந்த அறிவியலாளர்கள் nature astronomy journal எனும் ஆய்வு கட்டுரையில் வெளியிட்டு இருந்தனர்.

(Transit method) கிரகங்களை கண்டறியும் முறை

கிரகங்களை கண்டறிவதற்கு விண்வெளியாளர்கள் transit என்ற ஒரு முறையை பயன்படுத்துகிறார்கள்.அதாவது ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திநை நோக்கி ஒரு தொலைநோக்கி வைக்கப்படும்.

அந்த தொலைநோக்கியில் கிடைக்கப்பெறும் அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தின் ஒளியை ஒரு வரைபடத்தில் வரைவார்கள் அதாவது graph.

ஏதேனும் ஒரு குறிப்பிட்ட காலங்களில் அந்த நட்சத்திரத்தின் ஏதாவது ஒரு கிரகம் அல்லது வேறு ஏதாவது பொருள் கடந்து சென்று இருக்குமாயின்.

நமக்கு கிடைக்கப் பெரும் ஒளியின் அளவுகளில் ஒரு சிறிய இறக்கம் காணப்படும். இந்தவகையான இறக்கங்களை வரைபடங்களில் நம்மால் காண இயலும் அதாவது (small dip in graph)

Atmosphere finding

மேல் சொன்ன முறையின்படி கிரகம் இருப்பது கண்டறியப்படும். ஆனால் கிரகத்தில் என்னென்ன வாயு மூலக்கூறுகள் இருக்கின்றன அதன் வளிமண்டலத்தில் என்பது.

அந்த குறிப்பிட்ட கிரகத்தின் ஐ சூரியனுக்கு முன்னால் இருக்கும் பொழுது அந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் பட்டு சூரியனின் ஒளி பிரதிபலிக்கும். இதனை லைட் ஸ்பெக்ட்ரம் (light spectrum) கொண்டு நம்மால் அறிய முடியும்.

Missing elements

எனினும் இந்த கண்டுபிடிப்பில் நைட்ரஜன் மற்றும் மீத்தேன் அந்த வளிமண்டலத்தில் இருக்கலாம் என்றும் ஆனால் அதற்கான தரவுகள் எங்களுக்கு கிடைக்கவில்லை எனவும் அந்த அறிவியலாளர்கள் கூறினார்கள்.

Arrival of James Webb space telescope

அதுமட்டுமில்லாமல் வரக்கூடிய காலங்களில் இந்த கிரகத்தினை நாம் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி கொண்டு ஆராய்வதன் மூலம் நாம் அந்த கிரகத்தை பற்றிய பல அரிய உண்மைகளை தெரிந்து கொள்ள முடியும் என்றும் அந்த அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.

Ref NASA

Hubble Space 

வியாழன் கிரகமா சூரியானா? Is Jupiter a failed star??


வியாழன் கிரகம் ஒரு சூரியனாக வேண்டியதா? பலரும் வியாழன் கிரகத்தினை ஒரு சூரியன் ஆக வேண்டிய பொருள் ஆனால் தப்பித்தவறி கிரகமாக இருக்கிறது என்று கூறுவார்கள்.

இதற்கு அவர்கள் கூறும் காரணம் ஆனது நமது சூரியனில் 75% ஹைட்ரஜன் மற்றும் 25% ஹீலியம் உள்ளது.

இதேபோன்று வியாழன் கிரகத்திற்கும் 90% ஹைட்ரஜனும் 10% ஹீலியமும் இருக்கிறது இதனாலேயே வியாழன் ஒரு சூரியன் ஆக வேண்டிய பொருள். மாறாக கிரகமாக இருக்கிறது என்று கூறுவார்கள். முதலில் தோற்றுப்போன நட்சத்திரம் (failed star) என்றால் என்ன என்று பார்ப்போம்.

பிரவுன் டுவார்ஃப் (brown dwarf) என்பது ஒரு நட்சத்திரத்தின் வகை ஆனால் அது நட்சத்திரம் கிடையாது.

 


அளவில் இரண்டும் கிட்டத்தட்ட பார்ப்பதற்கு ஒன்றாகவே இருக்கும் ஆனால் வியாழன் கிரகத்தை விட brown dwarf நட்சத்திரமானது அதிகம் எடை உடையதாகவும் அதிக வெப்பம் உடையதாகவும் இருக்கும்.

நட்சத்திர உருவாக்கம்

நட்சத்திரங்கள் உருவாகும் மூலக்கூறு மேகங்கள் (molecular cloud) பகுதிகளில் ஏற்படும் மோதல்கள் காரணமாக பல ஆயிரம் வருடங்களாக, ஏண், குறிப்பிட்டு சொல்லப்போனால் பல லட்சம் ஆண்டுகளாக நட்சத்திரங்கள் உருவாகும் நிகழ்ச்சி அங்கு நடைபெறும்.

இதில் ஒரு சில நட்சத்திரங்கள் முழுமையாக அந்த மூலக்கூறு பகுதிகளில் உள்ள பொருட்களை உட்கொண்டு அதிக எடை உடைய நட்சத்திரமாக மாறுவதற்கு முன்னதாகவே அவ்விடத்தைவிட்டு வெளியே சென்றுவிடும் இதற்குத்தான் தோற்றுப்போன நட்சத்திரம் அல்லது failed star என்று பெயர்.

கிரக உருவாக்க மண்டலம் protoplanetary disc

எந்தெந்த பொருட்கள் எல்லாம் நட்சத்திரங்கள் உருவாகும் மூலக்கூறு மேகக் கூட்டத்தில் தனித்து இருக்கின்றனவோ, அவைகள் மட்டுமே அவ்விடத்தில் உள்ள அனைத்து மூலக்கூறுகளும் உட்கொண்டு ஒரு பெரிய நட்சத்திரமாக மாறும்.

மாறும் தருவாயில் மூலக்கூறு மேகங்களில் இருக்கும் ஒரு சில பகுதிகள் அந்த நட்சத்திரத்தை சுற்றிக்கொண்டே இருக்கும்.

அதாவது அந்த நட்சத்திரம் இன்னும் முழுமையாக உருவாகவில்லை மீதமிருக்கும் மூலக்கூறு மேகங்கலையும், உட்கொள்ளும் போது அங்கு இருக்கும் மூலக்கூறு மேகங்கள் ஒரு சில பொருட்களை உருவாக்கும் அவைகளே கிரகங்களாக வளரும்.

இந்த வழியில் முதன்மையாக தோன்றிய கிரகம் தான் நமது வியாழன் கிரகம் என்று அறிவியலாளர்களால் பெரிதும் நம்பப்படுகிறது.

அப்படி இருக்கும் பட்சத்தில் வியாழன் கிரகமும் மீதமிருக்கும் மூலக்கூறு மேகங்களை உட்கொண்டு ஒரு பெரிய நட்சத்திரமாக அல்லது சுமாரான நட்சத்திரமாக உருவாகி இருக்கக்கூடும் ஆனால் நமது சூரியன் அனைத்து மூலக்கூறு மேகங்களில் உள்ள பொருட்களையும் தன்னிடத்தே எடுத்துக்கொண்டு. மிகப்பெரும் அறுதிப் பெரும்பான்மையை காட்டுகிறது.

நீங்கள் எல்லாரும் அறிந்தது தான் நமது சூரியக்குடும்பத்தில் ஒட்டுமொத்த இடையில் 99.8 சதவீத எடையை நமது சூரியன் மட்டுமே கொண்டுள்ளது.

மீதமுள்ள 0.1 சதவிகித எடையை வியாழன் கிரகமும் மேலும் 0.1 சதவீத எடையை மற்ற கிரகங்களும் என்ற விகிதத்தில் சம படுத்தப்பட்டுள்ளது.

இதைப்பற்றிய Video

September 15, 2019

வியாழனில் அடங்கும் புயல் | RedSpot in Jupiter is Shrinking

Hubble Cast 123

வியாழன் கிரகத்தில் இருக்கும் மிகவும் சிறப்பான மற்றும் தனித்துவமிக்க ஒரு பகுதிதான் “Great Red Spot” வியாழனின் பெரிய சிவப்புப்புள்ளி, இதனை நாம் “எதிர் சூராவளி ” என்கிறோம்.

“Anticyclone” என்றால் ஒரு கிரகத்தின் வானிலை அமைப்பில் அதிக அளவு வளிமண்டல அழுத்தம் அதன் மையப்பகுதியில் இருந்தால் இதனை “Anticyclone” என்று அழைக்கிறோம். பொதுவாக இந்த வகை வானிலை. மிதமான வானிலையாகவே கருதப்படும். இது போன்ற ஒரு அமைப்புதான் வியாழனில் மிகப்பெரிய “சிவப்பு புள்ளி” அளவில் இருக்கிறது , அது மட்டும் இல்லாமல் இந்த சிவப்பு புள்ளியானது பூமியின் அளவுக்கு பெரிய அளவில் இருப்பதாகவும் அறிவியலாலர்கள் நமக்கு கூறுகிறார்கள்.

-அறிவியலாலர்கள் கூறுகிறார்கள்.

By Scientists, we actually dont know what was it.

தற்போது புதிதாக 2019 ல் எடுக்கப்பட்ட வியாழனில் புகைப்படத்தில் ஒரு விசித்திரமான நிகழ்வினை விண்வெளியாலர்கள் கண்டறிந்த்தார்கள்.

அதுதான், நமக்கு தெரிந்து 150 ஆண்டுகளுக்கு மேலாக வியாழனில் நிகழ்ந்த இந்த மிகப்பெரிய சூராவளி அதன் அளவில் தொடர்ந்து சுருங்கிவருகிறது.

இந்த சுருங்குதல் நிகழ்வானது வருடத்திற்கு 1000 கிமீ . அளவில் நடைபெறுவதாக நாசா விஞ்சானிகள் கூறுகிறார்கள்.

இதற்காக அவர்கள் ஒரு சிறப்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

சுருங்கும் வியாழனின் பெரிய சூராவளி

இந்த சூராவளி எதனால் சுருங்குகிறது என்ற உண்மை இன்னமும் நமது அறிவியலாலர்களுக்கு தெரியாக . மிகவும் புரியாத புதிராகவே உள்ளது. இன்று வரை.

Ref . Hubble Cast Video

Spinning test for Mars 2020 rover |சுத்தி சுத்தி சோதனைப் பண்றாங்க

செவ்வாய் கிரகத்துக்கு நாசாவால் 2020 இல் அனுப்பப்பட்ட இருக்கும் ரோவர் தான் இந்த மார்ஸ் 2020 ரோவர்.

அடுத்த வருடம் இந்த ரோவரை விண்ணில் ஏவ இருக்கிறார்கள் அதனால் இந்த ரோவர் 20/20 என்ற அளவில் எல்லா சோதனைகளிலும் வெற்றி பெறுகிறதா என சோதித்து வருகிறார்கள்.

இதன் முக்கிய சோதனையாக ரோவர் ரின் மொத்த எடையும் சமமான அளவில் பகிரப்படுகிறதா என கண்டறியும் centre of gravity சோதனை செய்யப்பட்டது.

இதில் நிமிடத்திற்கு ஒரு சுற்றுகள் என்ற வேகத்தில் சுழலக்கூடிய மேடையில் ரோவெரினை வைத்து முடிவுகள் கணக்கிடப்பட்டன.

இறுதியில் நாசாவின் JPL விஞ்ஞானிகள் ஒன்பது விதமான தனித்தனி எடை கொண்ட பொருட்களை அதில் சேர்த்தனர். ஆக மொத்தத்தில் ரோவர் ஆனது 22 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது.

இதில் தனியாக சேர்க்கப்பட்ட அந்த ஒன்பது எடைகள் டங்க்ஸ்டன் இழை கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த டங்க்ஸ்டன் இலைகள் மிகவும் உறுதியானது மற்றும் துரு பிடிக்காத உலோகம் என்பதை நாம் அறிந்ததுதான்.

மீண்டும் இந்த சுழலும் மேடை சோதனையானது அடுத்த வருடம் விண்கலம் விண்ணில் செலுத்துவதற்கு முன்பாக செய்து பார்க்கப்படும். இந்த விண்கலமானது அடுத்த வருடம் ஜூலை மாதம் விண்ணில் ஏவ திட்டமிட்டிருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

மேலும் இதுபோன்ற தகவல்களை தமிழில் அறிந்துகொள்ள தொடர்ந்து இணைந்து இருங்கள் விண்வெளி செய்திகள் தமிழ் உடன்.

Ref NASA

The shiny saturn's ring captured by Hubble ஒளிரும் சனிக்கிரகத்தின் வளையங்கள்



சனி கிரகத்திற்கும் பூமிக்கும் இடையே மிகவும் குறுகிய தூரம் இருக்கும் போது (சுமார் 845 மில்லியன் மைல்கள்) கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி 2019 ஆம் வருடம் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இந்த புகைப்படம்.

இந்தப் புகைப்படம் Hubble விண்வெளி தொலைநோக்கி எடுத்த சனிக்கிரகத்தின் இரண்டாவது புகைப்படம் ஆகும் அதுவும் இந்த ஆண்டிலேயே.

இது மாதிரியான புகைப்படங்களை வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ நாம் எடுத்து சேமித்து வைத்துக்கொண்டே வருவோம், இது எதற்காக என்றால் OPAL என்ற ஒரு திட்டத்திற்காக அதாவது outer planet atmospheric legacy என்பதின் சுருக்கம்தான் OPAL.

இது போன்ற புகைப்படங்கள் சனிக்கிரகத்தின் மட்டுமில்லை மற்ற நான்கு வாயு கிரகங்களையும் புகைப்படம் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து நாம் அந்த கிரகங்களில் வளிமண்டலத்தில் என்னென்ன மாறுதல்கள் ஏற்படுகின்றன என்பதை கண்காணிக்க முடியும்

Ref NASA

September 14, 2019

ராக்கெட் ஏவுதல் தொழில் நுட்பத்தில் புதிய புரட்சி | SSLV - Small Satellite Launch Vehicle | ISRO's Commercial Plan - NSIL

Space X

நீங்கள் SpaceX என்ற கம்பெனி பெயரை கேள்விபட்டிருப்பீர்கள், எலன் மஸ்க் அதன் நிறுவனர். மிகப்பெரிய கோடீஸ்வரம், ஆனால் அவருடைய இந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் என்ன வேலை செய்கிறது என தெரியுமா.??

அவர்கள் அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசாவிற்கு சொந்தமான விண்வெளி தேவைகளில் பங்களிக்கிறாரகள். (commercial Resupply Mission) இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையினை நாசா , ஸ்பேஸ் எக்ஸ் நிருவனத்திற்கு கொடுக்கும், இவை ஒப்பந்தமாக கையெழுத்தாகும்.

உங்களுக்கு தெரியுமா? நாசா , ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம் செண்டினல் 6A (Sentinal 6A) என்ற செயற்கைகோளை விண்ணில் ஏவி தருவதற்காக 2017 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட்டுக் கொண்டது. ஆனால் இந்த செயற்கைகோள் 2020 ஆம் ஆண்டு தான் வின்ணில் அனுப்பப்போறார்கள்,

NSIL and ISRO

சரி விஷயத்திற்கு வருவோம். இப்போ மேலே உள்ள தலைப்பினை பாருங்கள், இதல் இந்தியா எப்படி புரட்சி செய்யும் என்று தானே உங்கள் கேள்வி?

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இஸ்ரோவின் வணிக அமைப்பான NSIL ஆனது ஒரு சோதனை செய்ய இருக்கிறது. அது தான் SSLV – Small Satellite Launch vehicle சிறிய ரக ராக்கெட் ஏவுகலன். இதன் மூலம் நாம் குறைந்த செலவில் , சிறிய வகை ராக்கெட்டினை வின்ணில் ஏவ முடியும்.

Chandrayaan 2 Cost

உதாரனத்திற்கு உங்களுக்கு ஒன்று சொல்லுகிறேன். இந்தியா தற்போது “சந்திரயான் 2” விண்கலத்தினை விண்ணில் ஏவியது . இதன் மொத்த செலவு என்ன தெரியுமா??

செலவு விவரம்
சந்திரயான் 2 (Orbiter, Lander, Rover)603Crores
GSLV Mk III Launch cost375 Crores
Total cost978Crores

இதில் நீங்கள் ராகெட் ஏவுதலுக்கு மட்டும் 375 கோடி ரூபாய் செலவாகி இருப்பதை காணலாம் , இது எதனால் என்றால்? நாம் GSLV வகை ராக்கெட்டினை ஏவியதால். இதே நாம் PSLV ராகெட் ஏவுவதாக இருந்தால் நமக்கு 150-200 கோடி வரை செலவாக்கும்,

ஆனாலும் இது போன்ற பெரிய ராக்கெட் விண்ணில் ஏவும் போது நம்மால் அடிக்கடி ஏவ முடியாது. ஒரு குறிப்பிட்ட நாளினை நாம் தேர்ந்தெடுத்து உலகுக்கு அறிவிப்போம்.

அந்த குறிப்பிட்ட நாளில் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ தயாராக இருக்கும் மற்ற நாட்டு வாடிக்கையாளர்கள் இஸ்ரோவின் அணுகி தங்கள் செயற்கைக்கோளை விண்ணில் ஏவி தருமாறு   விண்ணப்பிப்பார்கள். இப்படித்தான் இதுவரை ராக்கெட் ஏவுதல் இருந்தன

SSLV -Small Sat Launch Vehicle

ஆனால் இந்தியாவின் வணிக அமைப்பான NSIL  அமைப்பு ஒரு புதிய உத்தியை கையாள உள்ளது அதுதான் (SSLV)எஸ் எஸ் எல் வி  என்ற சிறிய ரக ராக்கெட் ஏவுகலன்

CapacityLimit of Reach
500 KGupto LEO (Low Earth Orbit)
300 KG upto Sun Sync Orbit
30 Crores Total Cost Will be Only

இதன் மூலம் நம்மால் அதிக அளவு ராகெட் விண்ணில் ஏவ முடியும்.

அதிக ராக்கெட் ஏவுதல்….. அதிக வருமானம்……

உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை நீங்கள் கீழே கமெண்டில் பதிவிடுங்கள் ,

இஸ்ரோவின் புதிய கிளை நிறுவனம் | NSIL - New Space India Limited Details in Tamil

இந்தியாவின் விண்வெளி அமைப்பு “இஸ்ரோ” என அனைவருக்கும் தெரியும். இந்த இஸ்ரோவானது அயல் நாட்டு செயற்கைகோள்களை குறிப்பிட்ட தொகைக்கு வின்னில் ஏவி கொடுக்கும் ஒரு “Rocket Launch Providing Company” ராக்கெட் கம்பெனியாகதான் இருந்தது.

பிறகு நாம் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற மற்ற ஆராய்சி மற்றும் மேம்பாடு (R&D) சம்பந்தப்பட்ட துறைகளிலும் கால்பதிக்க ஆரம்பித்தோம். முதன் முதலில் “பாஸ்கரா” ஆரியபட்டா” போன்ற செயற்கைகோள்களின் தொடங்கி “Astrosat” IRNSS , சந்திரயான் 1 போன்ற பல திட்டங்களில் வேலைகளை தொடங்கி வெற்றிகரமாக செய்து முடித்தோம்.

மேலே சென்ன இந்த Astrosat ஒரு விண்வெளி தொலைநோக்கி ,மிகவும் சிறப்பான ஒரு தொலைநோக்கி. மற்றும் IRNSS என்பது GPS செயற்க்கைகோள்களுக்கு நிகரானது. சந்திரயான் 1 பற்றி நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை, உங்களுக்கே தெரிந்திருக்கும். இது போன்று இஸ்ரோவின் ஆராய்ச்சி பணிகள் உலக அளவில் பயன் அளிப்பதாக இருந்து வந்தது.

அதே போன்று நாம் மேலே சென்னது போல். மற்ற வெளி நாட்டு செயற்கைகோள்கலையும் நாம் விண்ணில் ஏவி, நாட்டிற்கும் , இஸ்ரோ தனது அமைப்பிற்கும் தேவையான வருமானத்தினை ஈட்டி கொண்டது.

இதன் அடுத்த கட்ட நடவடிகையாக. NSIL – New Space India Limited என்ற ஒரு இஸ்ரோவின் கிளை நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் 16 ஆம் நாம் துவங்கப்பட்டது.

இதன் முக்கிய நோக்கம் என்னவென்றால், இஸ்ரோவின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு சம்பந்தப்பட்ட செயல்களை முழுக்க முழுக்க வருமானம் ஈட்டும் முனைப்புடன் அனுகுவது
 

NSIL is to commercially exploit the research and development work of Indian Space Research Organisation (ISRO) 

இந்த அமைப்பு துவங்கப்பட்டதன் விளைவாக , இஸ்ரோ செய்து வந்த வணிக ரீதியான ராக்கெட் ஏவுதல் தொடர்பான அனைத்து முடிவுகளையும் இனி இந்த NSIL என்ற புதிய அமைப்பு தான் பார்த்துக்கொள்ளும் என்றும், இஸ்ரோ தனது அடுத்தகட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சம்பந்தப்பட்ட திட்டங்களில் முழு கவனமும் செலுத்தும் என்றும் மாற்றப்பட்டது.

இதனால் இஸ்ரோவுக்கு அடுத்த வரக்கூடிய ஆக்கப்பூர்வமான திட்டங்களில் முழுகவனம் செலுத்தி அதிக நல்ல செயற்கைகோள்களை உருவாக்க முடியும்



September 13, 2019

LRO Will Take Picture of Vikram's Landing site on September 17th |இஸ்ரோவுக்கு உதவும் நாசா!!!!???

Lunar reconnaissance Orbiter aka LRO என்று அழைக்கப்படக்கூடிய நாசாவின் விண்கலம் நிலவின் மேற்பகுதியில் சுற்றிவந்து கொண்டு இருக்கிறது. இந்த விண்கலம் வருகின்ற செப்டம்பர் 17 ஆம் தேதி விக்ரம் தரையிரங்கிய பகுதிக்கு மேலாக பறந்து செல்லும் என்றும், அப்போது விக்ரம் தரையிரங்கிய இடத்தினை புகைப்படம் எடுத்து அனுப்பும் படி திட்டமிடப்பட்டுள்ளது

இந்த விண்கலம் ஏற்கனவே அப்போல்லோ விண்கலம் தரையிரங்கிய இடம், அதாவது மனிதர்கள் நிலவில் கால்பதித்த இடம் மற்றும் மற்றும் பல்வேறு நிலவில் உள்ள இடங்களை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியிருகிறது.

அதில் ஒன்று தான். சைனாவின் “சாங்கி3, மற்றும் 4 ” ரோவர்கள் தரையிரங்கிய இடம் மற்றும்

இஸ்ரேலின் பெரிஷீட் என்ற லேண்டர் நிலவில் விழுந்து நொருங்கியது . அந்த இடத்தையும் இந்த LRO விண்கலம் சிறப்பாக படம் பிடித்து அனுப்பியிருந்தது உலக மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விண்கலம்!!!

அந்த வகையில் சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து இறங்கிய விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தினை இந்த விண்கலம் வருகிற செப்டம்பர் 17 ஆம் தேதி கடந்து செல்லும். அப்போது விக்ரம் இருக்கும் இடத்தினை புகைப்படம் எடுக்க கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் உங்கள் அனைவருக்கும் தெரியும் நமது சந்திரயான் 2 விண்கலத்தில் 0.32 மீட்டர் தெளிவு கொண்ட ஒரு கேமரா உள்ளது இது அந்த LRO விண்கலத்தினை காட்டிலும் மிகவும் சிறப்பான , தரமான கேமிரா என்று.

Ref First Post

Mars 2020 Rover Has its Own Helicopter | செவ்வாயில் பறக்க இருக்கும் ஹெலிகாப்டர்


அடுத்த வருடம் ஜூலை மாதம் அட்லஸ் 5 ராக்கெட் வழியாக விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ள ஒரு சிறப்பான ரோவர்தான் “மார்ஸ் 2020” ரோவர்

இந்த ரோவர் “செவ்வாய்” கிரகத்தில் அதிக கனிம வளம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு பள்ளத்தாக்கில் தான் இறங்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த ரோவர் பழங்கால செவ்வாய்ல உயிரினங்கள் ஏதாவது வாழ்ந்து இருக்குமா என்றும், இப்போது நுன்ணுயிரிகள் வாழ தகுதியான சூழ்நிலை செவ்வாயில் நிலவுகிறதா என ஆராயும். அதை தவிர்த்து…

இந்த ரோவருடன் சேர்த்து ஒரு சிறிய வகை “ஹெலிகாப்டரை” அனுப்ப திட்டமிட்டு அதனின் வேலைகளும் 90% முடிந்த நிலையில் உள்ளது.

இந்த ஹெலிகாப்டரில் எந்த ஒரு அறிவியல் உபகரணங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த ஹெலிகாப்டர் சும்மா . அந்த நிலப்பகுதியில் உலவ முடியுமா, அல்லது பறக்க முடியுமா ?? என பார்ப்பதற்காக உருவாக்கப்படுகிறது . என Mars 2020 ரோவர் குழுவில் இருக்கும் அறிவியலாலர்கள் கூறுகிறார்கள்.

ஒரு வேளை ஹெலிகாப்டர் எந்தவித சிறமமும் இன்றி செவ்வாயின் தரைப்பகுதியில் பறந்தால். இதனை ஒரு திருப்புமுனையாக கொண்டு அடுத்த வரும் செவ்வாய் ஆராய்சி திட்டத்தில் செயல் படுத்து வோம் என அந்த் அறிவியலாலர்கள் கூறுகிறார்கள்


Podcast

September 11, 2019

Vikam Lander Lost in 2.1 KM or 0.335 Meter Altitude??? விக்ரம் லேண்டர் தொலைந்தது 2.1கி.மீ or 0.332 மீட்டர் ??

Scientific thamizhans Where’s Vikram Video

Scientific Thamizhan என்ற யூடியூப் சேனலில் ஒரு வீடியோ போட்டிருந்தனர். அதில் உண்மையில் சந்திரயான் 2ன் லேண்டர் விக்ரம் தொலைந்தது எந்த இடத்தில் என்பது பற்றி ?

நானும் ISRO வின் நேரடி நிகழ்வினை பார்த்து கொண்டுதான் இருந்தேன், அப்போது விக்ரம் சுமார் நிலவின் மேலே 335 மீட்டர் இருக்கும் போது அதிலிருந்து எந்த வித தகவல்களும் வராமல் இருந்தது.

இந்த நிகழ்வினை இஸ்ரோ மட்டுமல்ல நெதர்லேண்டில் உள்ள https://twitter.com/cgbassa ரேடியோ தொலைநோக்கியின் மூலமும் கண்காணித்து வந்தனர் இதன் மூலம் எடுக்கப்பட்ட டாப்லர் வளைவுகளை வைத்து ஆராய்ந்து அதில் எடுக்கப்பட்ட தகவல்கலையும் , சேர்ந்து பார்க்கும் போது.

தலைகீழாக விக்ரம்

விக்ரம் லேண்டர் நிலவின் தரைப்பகுதியில் இருந்து சுமார் 2.920 கி.மீட்டர் தொலைவில் இருக்கும்போது , விக்ரம் கடிகார முள் பக்கமாக (வலது பக்கம் ) முழுமையாக சுற்றியதை நீங்கள் பார்க்கலாம், இது தான் அனைத்திற்கும் உண்டான முக்கிய காரனம். ..இது எதனால் வந்தது என தெரியவில்லை

Vikram Clockwise rotation at atitude of 2.9km above the surface of the moon

இந்த நிகழ்வின் காரணமாகத்தான் லேண்டர் மிகவும் சிரமப்பட்டு தன்னை சீர்படுத்த முயற்சித்து இருக்கலாம் அப்போது அதிக அளவு எரிபொருளையும் பயன் படுத்தி இருக்கலாம்.

உங்களுக்கே தெரியும் எந்த பக்கம் உந்துதல் Thrust அதிகமாக இருக்கிறதோ அதன் எதிர் பக்கம் தான் அது செல்லும். இந்த நிகழ்வின் மூலம் ஏற்பட்ட உந்துதலாம் தவறான பக்கத்திற்கு போயிருக்கலாம் .

அல்லது இந்த தவறு இப்படியும் நிகழ்ந்திருக்கலாம். அதாவது நிலவின் ஏதாவது ஒரு பள்ளத்தாக்கில் விக்ரமின் அல்டிமீட்டர் பட்டு தரைக்கும் லேண்டருக்கும் இருக்கும் தொலைவினை தவறாக பதிவிட்டு இருந்திருக்கலாம்.

திட்டமிட்ட தொலைவு

அதுமட்டும் இல்லாமல் விக்ரம் திட்டமிட்ட கிடைமட்ட தொலைவினை அடந்துவிட்டது , ஆனால் கொஞ்ச தூரத்திற்கு முன்னாலே. கீழுல்ல படத்தினை பாருங்கள்

இதில் விக்ரம் எங்கு வந்த பிறகு செங்குத்தாக கீழிறங்க வேண்டும் என்ற ஏற்கனவே திட்டமிட்ட ஒரு சிவப்பு நிற கோடு இருப்பதை பார்கிறீர்கள், ஆனால் மேலே நடந்து அந்த கடிகார முள் திசையில் விக்ரம் தவறுதலாக சுற்றியதன் விளைவாக விக்ரமால் கிடைமட்ட தொலைவினை அடைய முடியவில்லை,

On live நேரடி ஒளிபரப்பில்

அது மட்டும் இல்லாமல் நீங்கள் லைவ் நிகழ்சியை பார்த்தீர்கள் என்று சொன்னால் அதில் விக்ரம் திடீரென வேகமாக கீழிறங்கியதை பார்க்கலாம். watch the video down

lander vikram’s planned and actually trajectory

Astronomer Prabu

These Information are gathered by Astrophotographer, Amateur Astronomer, Prabu s Kutti You Can follow his Works and Photographs, also visit his website

இப்போது விக்ரம்

இப்போது விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தினை சந்திரயான்2 ஆர்பிட்டர் வழியாக நாம் thermal Imaging மூலம் கண்டறிந்து விட்டோம் அது மட்டுமில்லாமல் விக்ரம் தரைப்பகுதியில் சற்று சாய்ந்த நிலையில் , அது மட்டுமின்று உடையாமல் உள்ளது என கண்டறிந்து உள்ளோம்.

Vikram in Deep Space Network

இந்த் விக்ரம் லேண்டரினை தொடர்பு கொள்ள முடியுமா என பல வழிகளில் முயற்சித்து வருகிறோம். இதில் ஒரு முகமாக நாசாவின் Deep Space Network அமைப்பு மூலம் இதனை தொடர்புகொள்ள முடியுமா என ஆராய்ந்து வருகின்றனர்.

நாசாவின் ஆசை

நமது அடுத்த சூரியனுக்கான மிஷனில் Adithya L1 ல் நாசா இஸ்ரோவுடன் இனைந்து செயலாற்ற தயாராக உள்ளதாக டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளது நாசா

September 09, 2019

MAVEN Shriking its orbit for Mars 2020 | மார்ஸ் 2020 ரோவருக்கு உதவும் மேவன் விண்கலம்

Maven Space craft

4 வருடங்களாக சிவப்பு கிரகமென்று அழைக்கப்படும் செவ்வாய்யை சுற்றிவரும் விண்கலம் தான் “மேவன்” விண்கலம் Mars Atmosphere and Volatile Evolution = MAVEN

இந்த விண்கலமானது 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாயின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்டப்பட்டது கடந்த 4 வருடங்களாக செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம் பற்றி ஆராய்ந்து பல அறிய தகவலகள பூமிக்கு அனுப்பியுள்ளது.

வட்டப்பாதை (Orbit)

இந்த மேவன் விண்கலமானது செவ்வாய்கிரகத்தினை சுமார் 4.5 மணி நேரங்களுக்கு ஒரு முறை சுற்றிவருகிறது அதாவது ஒரு நாளைக்கு பூமியின் கணக்குப்படி 5.3தடவை அந்த விண்கலத்திலிருந்து தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

அது மட்டுமில்லாமல் இந்த விண்கலமானது செவ்வாய் கிரகத்தினை 6500×150 என்ற உயரத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது, புரியும் படி செல்லவேண்டும் என்றால் , கிரகத்திற்கும் விண்கலத்திற்கும் இருக்கும் உச்சபட்ச உயரம் 6500 கிலோ.மீட்டர் மற்றும் கிரகத்திற்கு விண்கலத்திற்கு இருக்கும் குறைந்த பட்ச உயரம் 150 கி.மீட்டர்கள். கீழுள்ள படம் உங்களுக்கு புரிய வைக்கும் a Image can talk 100 things

இந்த உச்சபட்ச மற்றும் குறைந்த பட்ச உயர தூரங்களை 4500×150 என்ற அளவிற்கு குறைப்பதற்கு நாசா விஞ்சானிகள் திட்டமிட்டுள்ளார்கள்

பயன் என்ன??

இப்படி செய்வதன் மூலம் நாசா விஞ்சானிகளுக்கு கூடுதல் தகவல்கள் கிடைக்கும் ஆம், மேவன் விண்கலத்தின் சுற்றுவட்ட தொலைவு குறைக்கப்படுவதால் , விண்கலம் கிரகத்தினை ஒரு முறை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரமும் குறையும், அதாவது 4.5 மணி நேரங்களுக்கு ஒரு முறை என்ற நிலமை மாறி 3.5 மணி நேரங்களுக்கு ஒரு முறை கிரகத்தினை முழுமையாக சுற்றிவரும் அளவுக்கு மாற்றி அமைக்கப்படும்.

இதனால் ஒரு நாளைக்கு(பூமியின் கணக்குப்படி) 6.8 தடவைகள் அது செவ்வாய்கிரகத்தினை சுற்றிவரும். இதன் மூலம் நம்மால் 6.8 தடவைகள் அந்த விண்கலத்திலிருந்து தகவல்களை பெற முடியும்.

இது பயன் தானே. ஆனால் இதெல்லாம் எதற்காக???

மார்ஸ் 2020 (Mars 2020)

நாசாவின் மார்ஸ் 2020 ரோவரானது செவ்வாயினை ஆராய அடுத்த வருடம் வின்ணில் ஏவ இருக்கிறது. இந்த ரோவர் செவ்வாயில் தரையிரங்கும் தருவாயில் எந்த வித பிரச்சனைகளும் வராமல் இருப்பதற்காக ….

இந்த மேவன் விண் கலமானது தனது சுற்றுவட்ட பாதையை சுருக்கிக்கொள்கிறது. இதன் மூலம் நமக்கும் மேவன் விண்கலத்திற்கும் அதிக நேரம் தகவல் தொடர்பு கிடைக்கும்.

அது மட்டுமில்லாமல், செவ்வாய் கிரகத்தில் தற்போது இயக்கத்தில் சில கருவிகள் உள்ளன (உ.ம்) மார்ஸ் கியூரியாசிட்டி ரோவர், இன்சைட் லேண்டர் போன்ற கருவிகள்

இவ்வகையான கருவிகளிடமிருந்து தகவல்களை மேவன் விண்கலம் பெற்றுக்கொள்ளும் மீண்டும் பூமியை நோக்கி விண்கலம் திரும்பும் போது அந்த தகவல்களை பூமிக்கு அனுப்பும்.

அப்படி இருக்கையில் , மார்ஸ் 2020 தரையிரங்கும் போது எந்த விதமான ஆபத்தான சம்பவங்கள் நிகழ்ந்து விடகூடாது என்பதற்காக இந்த சுற்றுவட்ட பாதை சுருக்கம் நிகழ்த்தப்படுகிறது.

மேலே சொன்ன 4500×150 என்ற சுற்றுவட்ட பாதையை மேவன் அடைவதற்கு பல மாதங்கள் பிடிக்கும் ஏன் வருடம் கூட எடுக்கும். ஏனென்றால் ??

(Airbreaking) காற்று தடை

செவ்வாகிரகத்தினை சுற்றி வந்து கொண்டிருக்கும் மேவன் விண்கலமானது , அதன் குறைந்த பட்ச தொலைவை அடையும் போது ஒரு விதமான காற்று தடையை உண்டாக்குமாறு விஞ்சானிகள் செய்கின்றனர்.

இதன் மூலம் டிராக் (Drag) என்ற ஒரு வித நிகழ்வு கிடைக்கிறது. இந்த Drag வேறு எதுவும் இல்லை. நீங்கள் வேகமாக செல்லும் காரின் ஜன்னலில் வெளியே உங்கள் கைகளை நீட்டுவதை கற்பனை செய்து கொள்ளுங்கள் அப்போது உங்கள் கைகளை காற்று அடிப்பதை உணருவீர்கள்,

இதே போன்ற ஒரு நிகழ்வைத்தான் நிகழ்த்தி, விண் கலத்தின் வேகம் குறைக்கப்பட்டு இந்த சுற்றுவட்ட பாதை சுருக்கும் நடைபெற உள்ளது இதனால் இந்த நிகழ்வு படிப்படியாகத்தான் நிகழும்.

இந்த வட்டபாதை சுருக்கு நிகழ்வு இந்த வருடம் பிப்ரவரி மாதமே ஆரம்பிக்கப்பட்டு விட்டது

Source – JPL NASA MAVEN

மேலும்படிக்க

September 07, 2019

Update: Chandrayaan 2's Lander Vikram LOST Communication with Ground control

“Vikram Lander descends was as planned and normal performance was observed upto an altitude of 2.1 kM. subsequently, the lander and Ground control was lost, Data is being analyzed”


 

K.Sivan Chairman of ISRO

Vikram Lander Touch Down On September 7th 1.40am |இன்று நள்ளிரவு 1.40 மணியளவில் விக்ரம் லேண்டர் சந்திரனில் தரையிரக்கப்படுகிறது

Lander Vikram Touch down Moon

Latest Information about Vikram Lander: Lander is Lost Communication with Ground Control , at the Altitude of 2.1KM above the Lunar Surface, the data is being analysed

https://spacenewstamil.com/isro/vikram-lander-lost-communication-with-ground-control-at-2km-altitude-of-moon-surface/

ஜூலை 22 ஆம் தேதி ஜி எஸ் எல் வி மார்க் 3 வகை ராக்கெட் மூலமாக வின்ணில் பாய்ந்தது இந்தியாவின் சந்திரயான் 2 விண்கலம். இந்த சந்திரயான் 2 விண்கலமானது செப்டம்பர் 7 ஆம் தேதி அதனுடன் கொண்டு சென்ற விக்ரம் என்று பெயரிடப்பட்ட லேண்டரினை நிலவின் தரைப்பகுதியில் நிலைநிறுத்தும்.

இதற்கான ஆயத்த பணிகள் இன்று நள்ளிரவு 1:10 மணியளவில் ஆரம்பிக்கப்படும் என்று இஸ்ரோ தரப்பில் கூறியுள்ளது. அதாவது 1.40 மணிக்கு தான் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிரங்கும் ஆனால் இதற்காக இஸ்ரோ விஞ்சானிகள் நள்ளிரவு 1.10 முதல் தயாராக ஆரம்பித்து விடுவார்கள். இதனை இஸ்ரோ இனைய தளத்தில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட உள்ளது .

நேரடி ஒளிபரப்பினை கானஅதனை கான Click Here

1.40 மணிக்கு

நள்ளிரவு 1.40 மணிக்கு சந்திரயான்2 விண்கலத்தில் இருந்து விக்ரம் என பெயரிடப்பட்ட லேண்டர் கீழிறங்க ஆரப்பிக்கும் நிலவின் தரைப்பகுதியை நோக்கி The Moon Lander Vikram will descending at 1.40am,

லேண்டர் முழுவதுமாக கீழிறங்க 15 நிமிடங்கள் பிடிக்கும் என இஸ்ரோ விஞ்சானிகள் கூறுகிறார்கள்

அப்போது விக்ரம் லேண்டரானது சுமார் 35கி.மீட்டர் உயரத்தில் இருந்து 6000 கி.மீ / மணி என்ற வேகத்தில் நிலவில் தரையிரங்கிக்கொண்டிருக்கும்.

Chandrayaan 2 Rover Vikram’s Liquid Engine 800N for Rough Breaking

லேண்டரின் வேகம்

விக்ரம் லேண்டரில் 4 திரவ எஞ்சின்கள் உள்ளன.

இவை நிலவின் தரைப்பகுதியில் அதீத வேகத்தில் தரையிரங்குவதை தவிர்ப்பதற்காக , இயக்கப்படும்.

35 கி.மீட்டர் உயரத்தில் இருந்து 7.4 கி.மீட்டர் என்ற உயரத்தினை அடையும். அப்போது மனிக்கு 526 கி.மீட்டர் என்ற கணிசமான அளவில் அதன் வேகம் குறைக்கப்படும்.

இப்படியே படிப்படியாக 5 கி.மீட்டர் உயரம், மற்றும் 400 மீட்டர் உயரம் என்ற நிலையினை லேண்டர் அடையும்.

நிலவுக்கும் லேண்டருக்கும் சுமார் 400 மீட்டர் உயரம் இருக்கும் நேரத்தில் , விக்ரம் லேண்டர் சுமார் 12 வினாடிகள் கிடைமட்டமாக பறக்க ஆரம்பிக்கும், இது எதற்காக என்றால்?

நிலவின் தரைப்பகுதியைனை புகைப்படங்கள் எடுத்து , எந்த இடத்தில் தரையிரங்களாம் என லேண்டரில் உள்ள கணினி அமைப்பு முடிவு எடுக்கும்.

Embed from Getty Images

மீண்டும் லேண்டருக்கும் , நிலவுக்கும் 30 மீட்டர் உயரம் இருக்கும் போது, தேர்வு செய்யப்பட்ட இரண்டு நிலவின் தென் துருவப்பகுதியில் Manzinus and Simpelius Crater என்ற நிலவின் பள்ளத்தாக்கில் தரையிரங்கும்,

தரையிரங்கும் முடிவு முழுக்க முழுக்க லேண்டரில் உள்ள கணினி அமைப்பு பார்த்துக்கொள்ளும்.

Manzinus and Simpeliusj vikram lander will touch down at any of these crator of moon

ஏற்கனவே இஸ்ரேலின் Beresheet விண்கலம் வேகத்தினை குறைக்க முடியாததால் நிலவில் மோதி அழிந்தது நினைவிருக்கலாம்