20 புதிய துனைகிரகம் கண்டு பிடிப்பு |சனி கிரகத்துக்கு 82 துணைகிரகம் இருக்கு |New moons discovered orbiting Saturn

20 புதிய நிலவுகள் சனிக்கு
நமது சூரிய குடும்பத்திலேயே அதிகமாக துனைகிரகங்களை கொண்ட கிரகம் எது என்று கேட்டால் என்ன சொல்லுவீர்கள்?
வியாழன் என்று தானே
ஆனால் இப்போது மாறிவிட்டது அது சனிகிரகம்தான்.
ஆமாங்க வியாழனின் 79 துனைகிரகங்களை தாண்டி 3 அதிகமாக இருக்கு
ஆக மொத்தத்துல இந்த சனிகிரகத்துக்கு 82 துனைகிரகங்களை கண்டறிந்து இருக்காங்க. இப்போ
ஏற்கனவே கிடப்பில் இருந்த 20 நிலவுகள்(Unconfirmed) . இது நிலவா இல்லையா என குழப்பத்தில் இருந்தார்கள். இப்போது அதையும் உறுதி செய்துவிட்டார்கள் (Confirmed Now)
ஆராய்ச்சி
கார்னேகி அறிவியல் நிறுவனத்தினை சார்ந்த ஸ்காட் செப்பர்டு என்பவரின் தலைமையிலான குழு தான் இந்த தகவலை கண்டறிந்து உலகிற்கு சொன்னார்கள்.
அவர்கள் “ஹவாய்”தீவில் உள்ள “சுபரு” என்ற தொலைநோக்கியின் உதவி கொண்டு இந்த தகவலை கண்டறிந்ததாக கூறினார்கள்
தண்மைகள்
கண்டறியப்பட்ட 20 புதிய நிலவுகளின் 17 நிலவுகள் சனிகிரகத்தினை எதிர் திசையில் சுற்றி வருகின்றன. மற்ற நிலவுகள் சாதாரனமாக (சனி கிரகம் சுற்றும் திசையிலேயே ) சுற்றி வருகிறது. படம் பார்க்க.
[Retrograde Moons of Saturn ]
புதிதாக கண்டறியப்பட்ட 20 நிலவுகளும் சுமாராக 5 கிலோ மீட்டர் விட்டம் உடையதாக இருக்கிறது என அறிவியலாலர்கள் தெரிவித்தனர்.
இதில் 2 நிலவுகள் மட்டும் சனிகிரகத்தினை சுற்றிவர 2 வருட காலம் எடுத்துக்கொள்கிறது என்றும் மற்ற 18 நிலவுகள் சனி கிரகத்தினை சுற்றிவர 3 வருடங்களுக்கு மேல் எடுத்துக்கொள்கிறது அறிஞ்சர்கள் தெரிவித்தனர்.
For Your Ref:
- https://typpo.github.io/spacekit/examples/saturn/index.html
- http://www.astronomy.com/news/2019/10/20-new-moons-discovered-orbiting-saturn
- https://www.space.com/saturn-20-newfound-moons-naming-contest.html
Post a Comment