உலோகத்தால் ஆன ஆஸ்டிராய்டு "16-சைக்கி" | Metal Asteroid - 16 psyche tamildetails


16- Psyche is One of the most intriguing targets in the main asteroid belt, because 16 Psyche is a giant metal asteroid, 226 kilometer in diameter,
மனிதர்கள் கண்டுபிடித்ததிலேயே மிகவும் புதிரான ஒரு வானியல் பொருட்களில் ஒன்றுதான் “16ஸைக்கி” ஏனெனில் இதுவரை நாம் பாறையாள் உருவான குறுங்கோள்களை பார்த்து இருக்கிறோம். பனிகட்டியால் ஆன ஆஸ்டிராய்டுகளை பார்த்து இருக்கிறோம். ஆனால் முதல் முறையாக உலோகத்தால் ஆன ஒரு ஆஸ்டிராய்டினை பார்த்து இருக்கிறோம்.


16 psyche artistic concept

கண்டுபிடிப்பு

இந்த 16 சைக்கி என்ற குறுங்கோள்
கண்டறியப்பட்டதுMar. 17, 1852
கண்டு பிடித்தவர்Annibale de Gasparis (இத்தாலி)
அளவு 226 கி.மீ விட்டம்
மூலக்கூறுகள்பெரும்பாலும் இரும்பு-நிக்கல்
சூரியனை சுற்றிவர 5 ஆண்டுகள்
நாள் நீளம் (பகல்)4.196 hours
சூரியனிடமிருந்து தொலைவு235 மில்லியன்- 309 மில்லியன் மைல்

உலோகத்தால் ஆன ஆஸ்டிராய்டு

இந்த 16சைக்கி என்ற ஆஸ்டிராய்டானது முழுக்க முழுக்க இருப்பு மற்றும் நிக்கல் மற்றும் பிற உலோகங்களால் ஆனதென. அறிவியலாலர்கள் நம்புகிரார்கள்.
அது மட்டுமல்ல அந்த ஆஸ்டிராய்டில் இருக்கும் மொத்த இரும்பின் விலை தற்போது நிலவரப்படி 1×10^18 டாலர் இருக்கும் என கருதுகிறார்கள்


Psyche Spacecraft on 16 psyche Asteroid concept

2022ல் சைக்கி விண்கலம்

வருகின்ற 2022 ஆம் வருடம் ஆகஸ்டு மாதத்தில் சைக்கி விண்கலம் வின்ணில் ஏவப்படும். இதற்கான முடிவுகள் ஏற்கனவே 2017 ஜனவரியில் எடுக்கப்பட்டுவிட்டன. Site
2022 ஆகஸ்டில் வின்னில் ஏவப்படும் இந்த சைக்கி விண்கலம் 2026 ஜனவரியில் சைக்கி ஆஸ்டிராய்டினை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Psyche Orbit and Plan
21 மாதங்கள் அங்கு இருந்து . சைக்கி ஆஸ்டிராய்டினை ஆராய்ச்சி செய்து அதை பற்றிய தகவல்களை சேகரிக்கும். அதன் பிறகு 2027 அக்டோபரில் இந்த விண்கலம் செயலிழக்கும். என நாசா விஞ்சானிகள் திட்டமிட்டுள்ளனர்

உட்கரு (Inner core of Planet)

நமது பூமியின் உட்கருவானது இதே போன்று இரும்பு மற்றும் நிக்கல் என்ற இரு உலோக தனிமத்தால் ஆனது.
அதே போன்று இந்த சைக்கி ஆஸ்டிராய்டும் இரும்பு மற்றும் நிக்கல் கொண்டு ஆக்கப்பட்டிருப்பதால், இது ஏதேனும் ஒரு பூமி போன்ற கிரகத்தின் அழிவுக்கு பிறகு அதன் மீதமிருக்கும் மையப்பகுதியாக இருக்கலாம் என அறிவியலாலர்கள் நம்புகிறார்கள்.



அப்படி இல்லை என்றால் இது வேறு ஏதேனும் ஒரு கிரகம் உருவாக்க நிகழ்வில் இருந்து பிரிந்து வந்திருக்கலாம் என்றும் ஒரு விதமான கருத்து நிலவுகிறது.
என்னவாக இருந்தாலும் சரி, நமது சூரிய குடும்பத்திலேயே பல புதிரான பொருட்கள் உள்ளன அவற்றை நாம் புரிந்து கொள்வது தான் மிகவும் அறிய செயலாக உள்ளது.



அதாவது நமது அறிவுக்கு அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கிறது என நான் சொல்கிறேன்.
நீங்க என்ன சொல்றீங்கள். கமெண்டில் பதிவிடுங்கள்.
Ref : NASA , ASU

FAQ பொதுவான கேள்விகள்



சைக்கி என்றால் என்ன?

இரும்பு – நிக்கல் உலோகத்தால் ஆன ஒரு ஆஸ்டிராய்டு

எங்கு இருக்கு இந்த சைக்கி?

சூரியனிடமிருந்து சுமார் 235-309 மில்லியன் தொலைவில் , செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் உள்ள, விண்கல் பட்டையில் சுற்றிவருகிறது.

கிரகத்தின் மையப்பகுதியா?

நாம் இதுவரை நமது பூமியின் மையப்பகுதியை ஆராய்ச்சி செய்தது கிடையாது. ஆனால் இந்த சைக்கி ஆஸ்டிராய்டின் தன்மைகள் கிரகத்தின் மையம் போல் உள்ளது.

சைக்கி விண்கலத்தின் செலவு ?

$760 மில்லியன் அமெரிக்க டாலர்கள்,

சைக்கி விண்கலமா? ஆஸ்டிராய்டா?

“சைக்கி” என்று பெயரிடப்பட்ட ஆஸ்டிராய்டை ஆராய்சி செய்ய நாம் அனுப்பும் விண்கலத்தின் பெயர் “சைக்கி” 🙂

சைக்கி ஆஸ்டிராய்டு யாரால் எப்போது கண்டறியப்பட்டது?

1852  ஆம் ஆண்டு இத்தாலிய வானியலாலர் அனிபலே டி கஸ்பாரிஸ் என்பவரால் கண்டறியப்பட்டது (Annibale de Gasparis)

No comments