சூரிய குடும்பத்திற்கு வரும் இரண்டாவது விருந்தாளி | comet 2I/Borisov Confirmed Intersteller Visiter by Hubble



Hubble Observes the Interstellar Visitor comet 2I/Borisov in October 12th

சூரிய குடும்பத்திற்கு சொந்தமில்லாத அதாவது நமது சூரியனை சுற்றிவராத விண்கற்களை அல்லது வால்மீண்களை நாம் விண்வெளியில் பார்க்கும் போது அதனை இண்டர்ஸ்டெல்லர் விசிடர்கள் என்கிறோம்.

அறிமுகம்

இந்த  comet 2I/Borisov என்ற வால்மீனை முதன் முதலில் Gennady borisov ஒரு சாதாரன தன்னார்வ வானியலாலர் கடந்த மாதம் (ஆகஸ்டு 30, 2019ல்) கண்டறிந்தார். இவர்களை Amateur Astronomer என்று அழைப்பர்.

இவரின் பெயராலேயே இந்த வால்மீன் பெயரிடப்பட்டுள்ளது. இதன் மற்றொரு பெயர் ” C/2019 Q4 ” என்பதாகும்.

எதை வைத்து சொல்றாங்க

அதனுடைய வேகத்தினை வைத்துதான் சொல்லுவாங்க. இந்த பொரிசாவ் ( comet 2I/Borisov,) என்ற பொருளை நாம் ஹப்புள் விண்வெளி தொலைநோக்கி கொண்டு ஆராய்ந்ததில் ,

இந்த வால்மீன் சுமார் மணிக்கு 1,10,000 மைல் என்ற வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இதன் வேகம்தான் இது வேறு இடத்திலிருந்து வந்திருக்கிறதென சொல்லுகிறது.

முதல் விருந்தாளி

2017 ஆம் ஆண்டுகளில் நீங்கள் ஒமுவாமுவா என்ற ஒரு ஆஸ்டிராய்டினை பற்றி கேள்விபட்டிருக்ப்பீங்கள்.

அது தான் நமது சூரிய குடும்பத்தில் முதன் முதலில் நுழைந்த வேறு சூரிய குடும்பத்திற்கு சொந்தமான ஒரு பொருள்.

இந்த ஒமுவாமுவா என்ற பொருள் ஒரு ஆஸ்டிராய்டா அல்லது காமெட் வகையை சார்ந்ததா என இன்னும் கூட விண்வெளியாளகளாளே ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. காரனம் இதனை நாம் சரியாக ஆராய வில்லை.

ஒமுவாமுவாவை நாம் ஏற்கனவே பார்த்து இருந்தோம் ஆனால் அது சாதாரன ஒரு சூரிய குடும்பத்தின காமெட்டாக இருக்கலாம் என நினைத்து அசால்ட்டாக இருந்து விட்டோம் .

அதன் பிறகு தான் தெரிந்தது அது வேறு பகுதியில் இருந்து வந்தது என்ற விஷயம்.

ஹப்புள் ஆராய்ச்சி

ஒமுவாமுவா விஷயத்தில் அசட்டையாக இருந்ததை போன்று இதிலும் இருக்க கூடாது என்பதற்காகதான்.

தன்னார்வ வானவியலார் ஆக்ஸ்டில் கண்டறிந்த ஒரு பொருளினை அடுத்த மாதமான அக்டோபரில் ஹப்புளிடம் ஒப்படைத்தனர்.

ஆம் இந்த மாதம் (அக்டோபர் )12 ஆம் தேதி ஹப்புள் தொலைநோக்கியின் மூலம் ஆராய்ந்ததில் இந்த பெரிசாவ் என்ற வால்மீனின் தன்மைகள் நமது சூரிய குடும்பத்தின் ஆரம்ப நிலையில் இருப்பதை போன்று இருப்பதாக அறிவியலாலர்கள் கூறுகிறார்கள்.

 hubble found the comet’s properties appear to be very similar to those of our own solar system’s building blocks

Hubble data

இதனை பற்றிய செய்திகளை நான் கண்டிப்பாக இந்த இனையதளத்தில் வெளியிடுவேன். நீங்கள் அதுவரை காத்திருங்கள்.

Ref: Nasa

No comments