சிறிய வகை செயற்கைகோள் செய்ய பயிற்சி கொடுக்கும் இஸ்ரோ திட்டம் ஆரம்பிக்கப்பட்டது

credits: ISRO

செயற்கைகோள் செய்ய பயிற்சி:

இஸ்ரோ தனது விண்வெளி சார்ந்த அறிவியல் அறிவினை உலகம் முழுவதும் இருக்கும் பல ஆரவமுள்ள அமைப்பிற்கும் தனிப்பட்ட நபர்களுக்கும் கொடுத்து வருகிறது. என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஆம் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு (UNISPACE+50) அமைப்பின் 50 ஆவது ஆண்டு விழாவின் போது இஸ்ரோ ஒரு அறிவிப்பினை செய்து இருந்தது. அது என்னவென்றால், சிறியவகை செயற்கைகோள் செய்ய பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்பதுதான். இது மூன்று கட்டமாக நடைபெறும் என்று அறிவித்து இருந்தது.

இதன் பெயர் (UNNATI) அதாவது ( UNispace Nanosatellite Assembly &Training by ISRO )

முதல் பேட்ஜ்

அதற்கு ஏற்றார்போல். இந்த ஆண்டு அதாவது ஜனவரி 2019 15 ஆம் தேதி ஆரம்பித்து மார்ச் 15 2019 வரைக்கும் முதல் பேட்ஜ் நடந்து முடிந்து விட்டது. இதில் 17 வித்தியாசமான நாடுகளை சார்ந்த 26 நபர்கள் கலந்து கொண்டு, சிறிய வகை செயறகைகோள் எப்படி செய்வது அதனை எப்படி பராமரிப்பது போன்ற பல அறிய தகவல்களை கற்றுக்கொண்டார்கள்.

credit: ISRO website

இரண்டாம் பேட்ஜ்

இதன் அடுத்த கட்டமாக 2 ஆவது பேட்ஜ் போன மாதம் அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டுல்லது. இந்த இரண்டாவது பயிற்சி திட்டமானது டிசம்பர் 15 வரை நடக்கும். என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2 -தொகுதிகள்

நடக்கும் இந்த பயிற்சி வகுப்புகள் இரண்டு தொகுதிகளாக நடக்க இருக்கிறது.

  1. தியரி (theoretical coursework )
  2. செய்முறை (Hands on workshop)

தியரி:

இந்த முறையில் பங்கேற்பாளர்களுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் அடிப்படைகள், சிறிய வகை செயற்கைகோளின் அடிப்படை, மற்றும் செயற்கைகோளினை வடிவமைப்பது அதாவது டிசைன் செய்வது,ஒரு செயற்கைக்கோளின் பல்வேறு துணை அமைப்புகள், மற்றும் செயல்பாடு, உள்ளமைவு பரிணாமம் மற்றும் கடைசியாக செயற்கைகோளினை லாஞ்ச் செய்வதற்கு முன் என்னென்னவற்றை கவனிக்க வேண்டும். போன்றவை செல்லிக்கொடுக்கப்படும்.

செய்முறை:

செய்முறை பகுதியில் பங்கேற்பாளர்கள், இந்தியாவின் USRC இல் அதாவடு U S Rao Satellite Center இல் இருக்கும் சிறிய செயற்கைகோள் ஆய்வுமையத்தில், செய்முறை பயிற்சி எடுத்துகொள்வர்.

credit: ISRO, Livemint, Mars Mission Scientists

நாடுகள்:

இந்த முறை 16 நாடுகளை சார்ந்த 30 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டு பயன் பெற உள்ளனர். அவையாவன:பஹ்ரைன், பங்களாதேஷ், பெலாரஸ், பொலிவியா, புருனே தாருஸ்ஸலாம், கொலம்பியா, கென்யா, மொரீஷியஸ், நேபாளம், நைஜீரியா, பெரு, கொரியா குடியரசு, இலங்கை, தாய்லாந்து, துனிசியா மற்றும் வியட்நாம்

ஆதாரம்

https://www.isro.gov.in/update/15-oct-2019/unnati-batch-2-inaugurated

No comments