Dogon Tribe and Sirius Star Mystery | பழங்குடியினரின் வியக்க வைக்கும் விண்வெளி அறிவு - தந்திசெய்தி
மேற்கு ஆப்பிரிக்காவின் மாலி நாட்டில் வாழும் டோகோன் பழங்குடியினர், சிரியஸ் பி நட்சத்திரத்தின மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தனர்.
அந்த நட்சத்திரம் தொடர்பான புரான கதைகளும் அந்த பழங்குடி மக்கள் மத்தியில் வழங்கி வருகிறது.
வானில் மிகவும் பிரகாசமான நட்சத்திரமான சிரியஸ் -ன் துணை நட்சத்திரம் தான் “சிரியஸ் பி”
ஆனால் இந்த சிரியஸ் பி நட்சத்திரமானது ஒரு வெள்ளை குள்ள நட்சத்திரம். அதுமட்டுமிலாது மிகவும் மங்களான நட்சத்திரம் இதனால் இது சாதாரனமாக மனித கண்களுக்கு தெரியாது.
அப்படி இருக்கையில் இந்த டொகோன் பழங்குடி மக்கள் எப்படி பல நூற்றாண்டுகளாக சிரியஸ் – பி நட்சத்திரத்தினை வழிபட்டு வந்திருக்கிறார்கள்.?? என்பது புதிராக இருக்கிறது.
தனது அச்சில் சுழன்று, சிரியஸ் நட்சத்திரத்தினையும் 50 வருடங்களுக்கு ஒரு முறை சுற்றிவரும் சிறிய நட்சத்திரம் தான் இந்த சிரியஸ்-பி
இந்த செய்திகளையும், அதாவது எவ்வளவு வருடங்களுக்கு ஒரு முறை “சிரியஸ் -பி” நட்சத்திரம் , சிரியஸ் நட்சத்திரத்தினை சுற்றிவருகிறது என்பதும் இந்த பழங்குடிமக்கள் அறிந்து வைத்து இருக்கின்றன.
உண்மையில் சொல்லப்போனால் 1862 ஆம் ஆண்டில் தான் நவீன வானியல் விஞ்சானிகளால் இந்த சிரியஸ் – பி நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது.
உண்மையில் ஆச்சரியமான் விஷயம் என்னவென்றால் “கண்களுக்கு கூட தெரியாத ஒரு நட்சத்திரத்தினை (சிரியஸ் -பி)பற்றியும் அதன் இயக்கங்கள் பற்றியும் எப்படி இந்த மக்கள் அறிந்திருந்தனர் என்பது தான்?”
இப்போது இது புதிர் தான்.? யாருக்காவது விடை தெரிந்தால் சொல்லுங்கள்
குறிப்பு: இந்த தகவல்களை நான் இன்றைய தினத்தந்தியின் இளைஞ்சர் மலரில் படித்தேன் (30-11-2019)
Ref : Wiki
Post a Comment