Another planet might found near Proxima Centauri star |பிராக்சிமாசென்டாரி நட்சத்திரத்திற்கு அருகில் மற்றும் ஒரு கிரகம் இருக்க வாய்ப்புள்ளது
பூமியிலிருந்து 4.2 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரம் அதுவும் மிகவும் மங்கிய நட்சத்திரம்தான், புரோக்சிமா செண்டாரி, என்று அழைக்கப்படக்கூடிய ஒரு சிகப்பு குள்ள நட்சத்திரம், faint red dwarf.
ஏற்கனவே இந்த நட்சத்திரத்தின் அருகில் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி ஒரு கிரகம் சுற்றி வருவதை அறிவியலாளர்கள் கண்டறிந்தனர் அதுமட்டுமில்லாமல், அந்த கிரகமானது பூமியை போன்று 1.3 மடங்கு பெரியது என்றும் தரைப்பகுதி கடினமான பாறைகளால் ஆனது என்றும், அங்கு தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது என்றும் (அதாவது அந்த கிரகமானது அந்த நட்சத்திரத்தில் இருந்து தண்ணீர் இருக்கக்கூடிய பகுதியிலேயே அமைந்துள்ளது என்றும் habitable zone) தெளிவான ஆதாரங்கள் கண்டுபிடித்ததாக கூறினார்கள்.
மேலும் மேலும் இந்தக் கிரகத்தின் பெயர் proxima b என்று அழைக்கப்பட்டது. இதுதான் பூமிக்கு மிக அருகில் உள்ள exoplanet என்றும் கருதப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் proxima centari நட்சத்திரத்தை சுற்றி வரக்கூடிய மற்றொரு கிரகம் இருக்க வாய்ப்புள்ளது என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.
அதன் பெயர் பிராக்சிமா சி. (Proxima c) எனவும் வைத்துள்ளனர்.
Mario Damasso, of the University of Turin in Italy இவர் தெற்கு ஐரோப்பிய observatory யில் உள்ள ” லா சில்லா” தொலைநோக்கியின் உதவியுடன் இந்த பிராக்சிமா சென்டரி நட்சத்திரத்தினை ஆராய்ந்த ஆராய்ச்சி முடிவுகள் அடிப்படையில் . இந்த முடிவை எடுத்துள்ளனர்.
அந்தத் தரவுகள் ஆனது High Accuracy Radial velocity Planet Searcher என்ற ஒரு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்த தொலைநோக்கியின் தரவுகள் ஆகும்.
இதே போன்ற தொழில் நுட்பம் கொண்ட தொலைநோக்கியைக் கொண்டு ஆராய்ந்த ஆராய்ச்சி முடிவுகளைக் அடிப்படையாக கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் தான் பிராக்சிமா b.
Proxima centary நட்சத்திரத்தின் ஈர்ப்பு அலைகளை ஆராய்ச்சி செய்ததில் அதன் ஈர்ப்பு விசையில் ஒரு மிக சிறிய மாற்றங்கள் இருப்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது போன்ற ஈர்ப்பு அலைவரிசை மாற்றங்களை ஒரு கிரகத்தினால் ஏற்படும் மாற்றங்கள் போன்று இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
எனவே இது மற்றுமொரு கிரகமாக இருக்கலாம் என்று கருத்துக்கள் பரவியுள்ளன.
இந்த Proxima c கிரகமானது அந்த நட்சத்திரத்தில் இருந்து 1.5 வானியல் அலகுகள் தொலைவில் இருக்கலாம் என்றும், பூமியை போன்று ஆறு மடங்கு எடை அதிகமாக இருக்கலாம், என்றும் கருத்துக்கள் வெளியாகி உள்ளன.
இந்த மங்கிய நட்சத்திரத்தின் ஈர்ப்பும் மிகவும் குறைவாக உள்ளது அதே போன்று இந்த கிரகமும் 1.5 வானியல் அலகுகள் தொலைவில் உள்ளது. இந்த அளவு தொலைவில் இருப்பதால். இந்த கிரகமானது பூமியில் இருந்து கண்டுபிடிக்கப்படுவதற்கு சற்று கடினமானதாக இருப்பதாக. அந்த ஆராய்சியாளர்கள் கூறியுள்ளனர், அது மட்டுமில்லாமல் இந்த பிராக்சிமா C கிரகமானது , -300 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை மட்டும் பெற்றிருக்கும் என்றும் இந்த ஆராய்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த ஆராய்சியாளர்கள் வெளியிட்ட ஆராய்சி முடிவுகளை மற்ற அறிவியல் குழுவினரும் பரிசீலனை செய்து வருகின்றனர். அப்படி இது ஊர்ஜிதப்படுத்தப்படுமேயானால். இந்த கிரகத்தினை “காயா” தொலைநோக்கி கொண்டு ஆராச்சி செய்யப்படும் என்றும் கருத்துக்கள் வெளியாகியுள்ளது.
அப்படி இந்த கிரகத்தினை அதி நவீன விண்வெளி தொலைநோக்கிகள் கொண்டு ஆராயும் போது இன்னும் சில ஆண்டுகளின் நாம் பூமியை அடுத்த ஒரு பூமிபோன்ற எக்ஸோ கிரகத்தின் புகைப்படத்தை பார்க்க வாய்ப்புகள் கிடைக்கும்.(இதுவரை நாம் எக்ஸோ கிரகங்களின் புகைப்படத்தினை பார்த்தது கிடையாது).
வானியல் ஆராய்ச்சியில் ஏற்பட்ட முன்னேற்றம் காரனமாக, கடந்த 10 ஆம் நாள் அதாவது 2019 ஏப்ரல் 10 ஆம் நாள் தான் , நாம் முதன் முதலில் ஒரு கருந்துளையின் :”ஈவன்ட் ஹரைசோனை” படம் பிடித்துள்ளோம்.
அது M87 என்ற கேலக்ஸிக்கு சொந்த மானது.
நாம் நம்முடைய பால்வழி அண்டத்தின் மத்தியில் இருக்கும் ” கருந்துளையியன் ” புகைப்படம் எடுக்கும் போது இந்த ஆராச்சி மிகவும் உச்சத்தினை அடையும் அப்போது அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்க தொடங்குவர்..
Post a Comment