Parker Solar probe Complete its Second Close Approach to Sun | இரண்டாவது சுற்றை முடித்தது பார்க்கர் சூரியனுக்கான விண்கலம்
இந்த மாதம் (ஏப்ரல் 2019) கடந்த 4 ஆம் தேதி , நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் ஆனது இரண்டாவது தடவையாக சூரியனை மிகவும் குறுகிய தொலைவில் கடந்தது. அந்த நேரத்தின் இது சுமார் மணிக்கு 213,200 மைல் என்ற வேகத்தில் கடந்து சென்றுள்ளது.
இந்த நிகழ்வை விஞ்சானிகள் , Solar encounter Phase என்று அழைக்கின்றனர். கடந்த மார்ச் கடைசியில் ஆரம்பித்த இந்த நிகழ்வு 11 நாட்கள் கழித்து ஏப்ரல் முதல் வாரத்தில் முடிந்துள்ளது,.
Laurel ல் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் இயற்பியல் ஆராய்சி கூடத்தில் மூலம் இந்த விண்கலத்தினை டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் (DSN – Deep Space Network) மூலமாக இதனை தொடர்பு கொண்டு ஆராய்சி செய்து வந்துள்ளனர்
அதாவது இந்த நிகழ்வு (சூரியனை மிகவும் அருகில் கடக்கும்) அந்த தருனத்திற்கு 4 மனி நேரத்திற்கு முன்பும். அதன் நிகழ்வுக்கு 4 மனி நேரம் பிறகும் அந்த விண்கலத்தின் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. என கண்கானித்து உள்ளனர்.
Parker Probe இன் மிஷன் ஆபரேசன் மேனேஜர் நிக்காலௌஸ் பிங்கி கூறுகையில் இது போன்ற (Closest Approach) சூரியனின் மிகவும் அருகில் இருக்கும் சமயத்தில் விண்கலத்தினை தொடர்புகொள்ள முடிந்தது மிகவும் அரிதான மற்றும் நல்ல விஷயமாகும். அதே போல் நாங்கள் அதன் அறிவியல் தகவல்களையும்(Scientific Datas) எதிர்பார்த்து இருக்கிறோம் என்று கூறினார்
இந்த விண்கலத்தில் பதிவான அறிவியல் தகவல்கள் அனைத்தும் வரும் வாரங்களில் நமக்கு கிடைக்க பெரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்து இருந்தார்,
விண்கலமானது சூரியனிடமிருந்து 0.25 AU (23,250,000) தொலைவில் இருப்பதையே இவர்கள் மிகவும் குறுகிய தொலைவு என்று அழைக்கின்றனர்.
கடந்த வருடம் அக்டோபர் மாதமே இந்த விண்கலமானது. ஏற்கனவே சூரியனுக்கு அமெரிக்கா-ஜெர்மன் விஞ்சானிகளால் அனுப்பப்பட்ட ஹீலியோஸ் -2 விண்கலத்தின் மிகவும் குறுகிய தொலைவான 26.55 மில்லியன் மைல் என்ற தொலைவினை கடந்து சாதனை செய்துள்ளது.
அதுமட்டு மில்லாமல் இந்த பார்க்கர் விண்கலமானது 2024 ஆம் ஆண்டுகளில் மிகவும் குறுகிய தொலைவான 3.83 மில்லியன் மைல் என்ற சாதனையயும் செய்யும் என்று எதிர்பார்த்து இருக்கின்றனர்.
Post a Comment