Oort Cloud in Tamil | ஓர்ட் மேகங்கள் - விளக்கம்
ஆரம்பம்
ஓர்ட் மேகங்கள், இது பொதுவாக வால்நட்சத்திரங்களுக்கு மட்டுமே பொருந்தும். அது மட்டுமில்லாமல் , இந்த “ஓர்ட் மேகங்கள்” ஒரு கற்பனையாகவே இருந்து வருகிறது. அதாவது , இதை பற்றிய முழுமையான தகவல்கள் நமக்கு இன்னும் கிடைக்க வில்லை.
இது என்னவென்று சொல்கிறேன். அப்போது நீங்களே இதனை பற்றி தெரிந்து கொள்வீர்கள்.
நான் ஏற்கனவே சொன்னது போல இது வெறும் “வால் நட்சத்திரங்களுக்கு ” மட்டுமே பொருந்தும், மற்ற கிரகங்களுக்கோ அல்லது குள்ள கிரகங்களுக்கோ பொருந்தாது,
கோட்பாடு
சரி விஷயத்திற்கு வருவோம், சூரியனை நீண்ட நாள் சுற்றிவரும் வால் நட்சத்திரங்களை லாங்க் டெம் காமிட் என்பர் (Long Term Comet) இது போன்ற வால் நட்சத்திரங்கள் ஒரு சாதாரன மனிதனில் வாழ்நாளில் திரும்பவும் வராது. (ஏனென்றால் இது சூரியனை சுற்றிவரும் காலம் மிகவும் அதிகம் என்பது தான்) உதாரனமாக 100 வருடங்களுக்கு ஒருமுறை சூரியனை சுற்றிவரும் ஒரு வால் நட்சத்திரத்தினை முழுமையாக ஆராய்சி செய்வது மிகவும் கடினம், ஏனென்றால் இதனை ஆராய்சி செய்த ஆராய்சியாளர் இறந்து போயிருக்க கூடும்.
மேலும் இது போன்று லாங்க் டெர்ம் காமிட் கள் (Long Term Comet) கள் சூரியனை நெருங்கும் அந்த தருனத்தில் மட்டுமே நம்மால் தரவுகளை சேகரிக்க முடியும் , அதன் பிறகு அது எங்கு செல்கிறது என்பது யாருக்கும் தெரியாது.
ஜான் ஓர்ட்
இதனை பற்றிய ஆராய்சிகளை மேற்கொண்ட வானவியல் அறிஞர் தான் ஜான் ஓர்ட் என்பவர், இவரின் ஆராய்சியில் முடிவிலேயே, ஓர்ட் மேகங்கள் என்ற ஒரு கோட்பாடு வெளிவந்தது, இதில் சூரியனை சுற்றி கோளவடிவத்தில் ஒரு பகுதி இருக்கலாம் , என்றும். அது கைப்பர் பெல்ட் பகுதியில் இருந்து மிகவும் நீண்ட தொலைவில் இருக்கலாம் என்றும் கருத்துகளை பதிவிட்டார், இவரின் கோட்பாட்டின் காரனமாக தான் இந்த ஓர்ட் மேகங்கள் என்ற பகுதியை நாம் படிக்கிறோம்.
தற்போது ஆராய்சி
பிற்காலத்தின் நாசா தனது ‘வைஸ்” “WISE” விண்கலத்தின் இன்ஃப்ராரெட் அலைவரிசையில் நமது வானவெளியை ஆராய்சி செய்தனர். அப்போது இந்த தொலைதூர வால் நட்சத்திரங்களை (Long Term Comets) பற்றிய அதிக செய்திகள் வெளிவந்தன.
- தொலைநூர வால் நட்சத்திரங்கள் குறைந்தது 1கிமீட்டர் அகலம் கொண்டதாக இருகின்றன
- சாதாரன வால்நட்சத்திரங்களை காட்டிலும் 7 மடங்கு அதிக சுற்றுகாலத்தினை கொண்டிருந்தன
- இவை அனைத்தும் வியாழன் குடும்ப வால்மீன்களை காட்டிலும் 2 மடங்கு பெரியதாக உள்ளதாகவும் (அளவில்) கண்டறிந்து உள்ளனர்
உண்மைகள் (Facts)
- ஓர்ட் மேகப்பகுதி வெறும் கணிப்புதான். இதனை நாம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை
- இந்த ஓர்ட் மேகங்கள் சூரியனிடமிருந்து 1000AU – 1,00,000 AU வரை நீண்டு இருக்கலாம்
- இப்பகுதியில் இருக்கும் வால் நட்சத்திரங்கள் சுமார் 200 வருடங்கள் எடுத்துக்கொள்ளும் சூரியனை ஒரு முறை சுற்றிவர
- ஓர்ட் மேகப்பகுதியில் 1 டிரில்லியனுக்கும் அதிகமான வால் மீண்கள் அல்லது வால் நட்சத்திரங்கள் இருக்கலாம்,’
- இதுவரை ஓர்ட் பகுதியில் இருக்கும் பொருட்களுக்கும் , துனைகோள்கள் இருப்பதை நாம் கண்டறியவில்லை
- ஓர்ட் பகுதியில் இருக்கும் வானியல் பெருட்களை டிரான்ஸ் நெப்டியூனியன் பொருட்கள் என்றும் கூறுவர், இதே பெயர், கைப்பர் பெல்ட் பகுதிக்கும் பொருந்தும்,
முடிந்தவரை விவரங்களை கொடுத்திருக்கிறேன். வேண்டுமென்றால் கமெட் செய்யுங்கள்
Space News TAmil
Post a Comment