First Marsquake Detected by Insight Lander | செவ்வாயில் முதல் நிலநடுக்கம்உணரப்பட்டது
ஏப்ரல் 6, 2019 அன்று இன்சைட் லேண்டரின் உள்ள
Seis செய்ஸ்மோ மீட்டரில் பதிவான தரவுகளின் அடிப்படையில் செவ்வாய்கிரகத்தின் நிலப்பரப்பில் அடியில் லேசான அதிர்வளைகளை அந்த கருவி கண்டறிந்து உள்ளது.
டிசம்பர் 19, 2018 அன்று நாசாவின் இன்சைட் லேண்டர் செவ்வாய்கிரகத்தில் தரையிரங்கியது.
அந்த நாள் முதல் இந்த குறிப்பிட்ட நிகழ்விற்காகத்த்தான் அறிவியலாலர்கள் காத்து இருந்தனர் என்று கூறலாம்.
அந்த அளவுக்கு முக்கியமான நிகழ்வான, “செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் அடியில் ஒரு சில அதிர்வுகளை” Seis செய்ஸ்மோ மீட்டர் கருவி கண்டறிந்து இருக்கிறது.
ஃப்ரான்ஸ் நாட்டில் விண்வெளி அமைப்பான CNES யில் உள்ள சீஸ்மோமீட்டரின்
principal investigator ஆன Philippe Lognonné என்பவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் இது பற்றி கூறினார்
நாசா லேண்டரினை கவனித்து வந்தாலும் இந்த பிரான்ஸ் நாட்டில் உள்ள CNES அமைப்புதான் அந்த குறிப்பிட்ட சீஸ்மோமீட்டர் சார்ந்த நிகழ்வுகளை ஆராய்ந்து வருகிறது.
இதனை அவர்கள் ஒரு வித ஒலி (Audio) வாக வெளியிட்டிருந்தனர். பார்க்க
இந்த கானொலியில் நீங்கள் கேட்ட சப்தமானது சீஸ்மோமீட்டர் கருவியில் உள்ள நில அதிர்வு மானியின் மூலம் பதிவுசெய்யப்பட்ட ஒலிகளாகும். இதில் முதலில் நீங்கள் கேட்கும் ஒலியானது செவ்வாய்கிரகத்தில் உள்ள காற்றினால் உண்டானது என கூறுகிறார்கள். கடைசியில் கேட்ட ஒலியானது , லேண்டரின் உள்ள இயந்திர கை அசையும் போது அந்த கருவி பதிவிட்ட சப்த அளவு , இதற்கு இடையில் உள்ள அதிர்வுகளானது, புது விதமாக உள்ளது. அது மட்டுமில்லாமல் இது அதிர்வுகலை மையமாக வைத்து உருவாக்கப்படும் ஒலி பதிவுகள் என்பதால் ,
மேற்படி பார்த்த நடுவில் உள்ள சப்தமானது நிலத்தில் அடியில் ஏற்பட்ட அதிர்வுகள் தான் என பிராண்ஸ் நாட்டு விண்வெளி நிறுவனமான CNES உறுதி கொடுத்துள்ளது.
இவ்வகையான அதிர்வுகளை பூமியில் ஏற்படும் , நிலநடுக்கங்கலோடு ஒப்பிட முடியாது. ஏனெனில் பூமியில் அடிப்பகுதியில் பட நில தட்டுகளை கொண்டு உள்ளது அந்த அளவு நில தட்டுகள் செவ்வாய் கிரகத்தில் இல்லை, ஆகையால். உண்மையில் அந்த அதிர்வுகள் எல்லாம், செவ்வாயில் ஏற்பட்ட நில நடுக்கம் தானா என பல பேர் கேள்விககளையும் எழுப்பியுள்ளனர்.
இதற்காகவே இந்த விண்வெளி அமைப்பானது இதனை ஒரு உத்தேசமாக உறுதிபடுத்தியுள்ளது. “The tentatively confirmed signal”
பூமியை தாண்டி ஏதேனும் ஒரு கிரகத்தில் சீஸ்மோமீட்டரினை வைத்து அதன் நில மாறுபாடுகளை அளவிட வேண்டும் என்று இப்போது இல்லை 1970 ஆம் ஆண்டுகளிலேயே , நாசாவின் “வைக்கிங்” விண்கலமானது ஒரு சீஸ்மோமீட்டரினை கொண்டு சென்றது . ஆனால் அவை லேண்டர் தரையிரங்கிய பிறகுதான், தாமதமாக நிலப்பகுதியை வந்து அடைந்தன, அதுவும் லேண்டர் மீது “பொத்” என்று விழுந்து , வீணாய் போனது. எந்த ஒரு உருப்படியான தகவல்களையும் அந்த சீஸ்மோமீட்டர் கருவி சேகரிக்கவில்லை.
அப்போல்லோ மிஷன் பற்றி தெரியாமலிருக்க வாய்ப்பில்லை, அதிலும் சீஸ்மோமீடர் கருவி, விண்வெளியாளர்களால், தரையில் வைக்கப்பட்டது. அதிலிருந்து ஒரு சில தகவல்கலையும், அவர்கள் சேகரித்தனர்
இந்த இன்சைட் லேண்டரில் உள்ள சீஸ்மேமீட்டர் கருவியானது. செவ்வாய்கிரக நில அமைப்பை கண்டறிவதில் ஒரு புதிய வரலாற்றை படைக்கும் என்று JPL இல் உள்ள நில அறிவியலாலர் Bruce Banerdt என்பவர் கூறியுள்ளார்.
Ref – Space.com
Post a Comment