95 Minutes Over Jupiter | வியாழனின் மேற்பரப்பில் 95 நிமிடங்கள்!
வியாழனின் தென் மற்றும் வட துருவங்கள் பெரிஜாவ் |
நீங்கள் பார்க்கும் வண்ணமயமான வரிசையான புகைப்படங்கள் அனைத்தும் வியாழன் கிரகத்தின் படங்கள்தான்.இவை அனைத்தும் ஜூனோ விண்கலத்தின் ஜூனோகேம் (Junocam)எனும் பிரத்தியேகமான புகைப்பட கருவியின்மூலமாக எடுக்கப்பட்ட புகைபடங்கள். இந்த வரிசையான புகைப்படங்கள் அனைத்தும் வெறும் 95 நிமிடங்களில் எடுக்கப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான தகவலாகும். அதாவது கிட்டதட்ட ஒரு மணி நேரம் மற்றும் 35 நிமிடங்களுக்குள் எடுக்கப்பட்டவை ஆகும்.
Offer on Headsets |
ஒவ்வொரு 53 நாட்களுக்கு ஒருமுறை ஜூனோ விண்கலமானது வியாழன் கிரகத்தினை மிகவும் குறைவான தொலைவில் கடந்து செல்லும். கடந்து செல்வது மட்டுமல்லாது வட மற்றும் தென் துருவங்களை ஒரு முறை சுழலும் போது தெளிவான, மற்றும் நெருக்கமான படங்கள் எடுக்க முடியும்.இந்த நிகழ்வின் பெயரானது பெரிஜாவ் எனப்படுகிறது.
பெரிஜாவ் (Perijove) எனும் இந்த நிகழ்வானது செப்டம்பர் 1 ஆம் தேதி 2017 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. அதாவது போன மாதம் முதல் தேதியில் நிகழ்ந்த ஒரு நிகழ்வாகும்
நீங்கள் பார்க்கும் படத்தில் இடமிருந்து முதல் 8 படங்கள் வியாழனின் தென் துருவத்தினையும் . கடைசியில் (வலது புறத்தில் முதல்) உள்ள படம் வியாழனின் வட துருவத்தையும் பார்க்க முடியும்
ஜூனோவானது நாசா மற்றும் ஜ.பி.எல் இன் கூட்டு முயற்சியாகும். இது கடந்த வருடம் ஜூலை 5 ஆம் தேதியன்று வியாழனின் சுற்றுவட்ட பாதையில் பயனிக்க ஆரம்பித்தது. வியாழன் கிரகம் பற்றிய பல அறிய தகவல்களை இது தந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பலவிவரங்களை அறிய நீங்கள் ஸ்பேஸ் நீயூஸ் தமிழ் டாட் காம் எனும் இனையதளத்தினை பாருங்கள். நன்றி
Image Copyright: NASA, ESA, Caltech JPL
Post a Comment