செவ்வாயில் உலகலாவிய அரோரா!


செவ்வாயில் உலகலாவிய அரோரா
செவ்வாயில் நீல புள்ளிகள் புறஊதா கதிர்வீச்சின் தாக்கத்தை காட்டும் படம்

சிவப்பு கிரகம் என பெயர் பெற்ற செவ்வாயில் நீலநிற புள்ளிகள். இதுவரை செவ்வாயில் இல்லாத அளவுக்கு ஒரு அதிகப்படியான சூரிய புயலானது கடந்த மாதம் செவ்வாயின் மேற்பரப்புகளில் ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட புறஊதா கதிர்வீச்சின் வெளிப்பாட்டினை தான் நீங்கள் மேலே உள்ள படத்தில் பார்த்தீர்கள். இந்த படத்தில் இடது புறத்தில் இருப்பதை விட வலது புறத்தில் நீங்கள் பார்க்கும் படத்தில். செவ்வாயின் இரவு நேரப்பகுதிகளில். அதிகப்படியான நீல நிற புள்ளிகளை கானலாம். இது அந்த கிரகத்தில் ஏற்பட்ட புறஊதா கதிர்வீச்சின் வெளிப்பாட்டினை காட்டுகிறது . இந்த இரண்டு புகைப்படங்களும், நாசாவின் மாவின் (Maven Space Craft) விண்வெளி ஓடம் மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டது. புவியைப்போன்று செவ்வாயில் காந்த புலங்கள் இல்லாத காரணத்தால், செவ்வாயில் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டுள்ளதாக அறிவியலாலர்கள் கருதுகின்றார்கள். மேலும் இது செவ்வாயின் இரவு பகுதியாக அதாவது சூரிய ஒளியில் இல்லாத இடங்களில் முழுவதுமாக பரவி இருப்பதால், இதனை உலகலாவிய அரோரா என கணிக்கப்பட்டுள்ளது.

மாவின் விண்கலத்தின் மூலமாக பதியப்பட்ட இந்த தரவுகள். இதற்கு முன் நாசாவின் கியூரியாசிடி ரோவர் மூலமாக பதியப்பட்ட தரவுகளைக் காட்டிலும் மிக அதிகம். மேலும் மாவின் விண்கலமானது, செவ்வாயின் வளிமண்டலம் பற்றிய ஆராய்சியில் ஈடுபட்டுள்ளது. அதாவது செவ்வாயில் உலகலாவிய காந்த மண்டலம் இழப்பின் காரணமாகத்தால் வளிமண்டலம் இல்லாமல் உள்ளதா என ஆராய்சி செய்து வருகிறது.Image Copyright: MAVEN, LASP, University of Colorado, NASA

No comments