Bernard 68 Tamil Details | விண்வெளியில் நட்சத்திரங்களை பார்க்க விடாத! விசித்திர நெபுலா!!
Bernard 68 |
ஆமாம், பூமியில் இருந்து வெறும் 500 #ஒளியாண்டுகள் தூரத்தில் இருப்பதுதான் “#பெர்னார்டு 68” எனும் நெபுலா. இது தெற்கு பகுதியில் ஆபியூகஸ் (#Ophiuchus) எனும் விண்மீன் திரள் தொகுப்பில் இது இருக்கிறது. அமெரிக்க வானியல் அறிஞ்சர் எட்வர்டு பெர்னார்டு என்பவரால், இது 1919 ஆம் ஆண்டுகளில் அவரின் அடர்ந்த நெபுலாக்கள் என்ற தொகுப்பில் சேர்க்கப்பட்டது. மேலும் இவரின் தொகுப்பானது 1927 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அப்போது அவரின் கனக்குப்படி 350 விண் பொருட்கள் இருப்பதாக குறிப்பிட்டார்.(ஏனெனில் அந்த நெபுலாவின் ஒளியை ஊடுருவி செல்லும் தண்மை காரனமாக.) இந்த எண்ணிக்கையானது முழுவதுமாக அரை ஒளியாண்டு தொலைவு இருக்கிற ஒரு நெபுலாவிற்கு மிகவும் குறைவு. அரை ஒளியாண்டு தொலைவு என்றால். அந்த நெபுலாவை கடந்து செல்வதற்கு ஒளியாக இருந்தாலும் அரை வருடம் தேவைப்படும்.
இது ஒரு நெபுலா என நாம் முன்னவே குறிப்பிட்டு இருந்தேன். இது இளம் சூரியன்கள் ஒருவாகும் ஒரு “ஸ்டெல்லர் நர்சரி” நெபுலாவாக இருக்கிறது. இந்த நெபுலாவானது இருண்ட மூலக்கூறு மேகங்களால் (Dark Molecular Cloud) ஆனது.இதலான் இது ஒளியை உள் இழுத்துக்கொள்கிறது. ஆகவே மனித கண்களுக்கு வெறும் கறுப்பு நிறமாக காட்சியளிக்கிறது. ஒரு கருந்துளையை போல. இந்த மூலக்கூறு மேகங்கள் அனைத்தும் மிகவும் அடர்ந்த தூசி மற்றும் மூலக்கூறு வாயுக்கலால் ஆனது.
இருப்பினும் இந்த நெபுலாவானது. சாதாரண கண்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இன்ஃப்ராரெட் கருவி கொண்ட கேமராவினால் பார்க்கும் போது இதனுள் உள்ள நட்சத்திரங்களை நாம் பார்க்கலாம்
நன்றி: https://space-stuffin.blogspot.in/2017/10/dark-molecular-cloud-barnard.html
Image Copyright: FORS Team, 8.2-meter VLT Antu,ESO
Post a Comment