Pluto's Bladed Terrains | புளூட்டோவின் கூறிய நிலப்பரப்பு
நியூ ஹரைசோனிலிருந்து எடுக்கப்பட்ட புளூட்டோவின் படம் |
நியூ ஹரைசோன் எனும் விண்கலமானது, புளூட்டோவை ஆராச்சி செய்வதற்காக 2006 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் அதாவது ஜனவரி 19 தேதி 2006 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது. ஆனால் அந்த ஆண்டின் இறுதியிலேயே புளூட்டோவானது கிரகம் என்ற அந்தஸ்த்தை இழந்தது. இவை அனைத்தும் நாம் கேள்விப்பட்ட செய்திகள்தான். இதை பற்றி நாம் பிறகு விரிவாக பார்ப்போம்.
அதன் பிறகு நாசாவானது “நியூ ஹரைசோனின்” பணிகளை மாற்றியது. அதாவது இந்த விண்கலமானது புளூட்டோவையும், அதன் ஒரு துனைக்கிரகமான சாரன் எனும் சிறிய கிரகத்தினையும் மற்றும் “கைப்பர் பெல்ட்” என்று சொல்லக்கூடிய ஆஸ்டிராய்டு குப்பை பகுதிகளையும் ஆராய்சி செய்யும் என மாற்றப்பட்டது. அதே போல் இந்த விண்கலமானது ஜூன் 2015 ஆம் ஆண்டு வாக்கில் கைப்பர் பெல்ட் மற்றும் புளூட்டோவை அடைந்தது. அதன் பிறகு எடுத்த படத்தினைத்தான் நீங்கள் மேலே பார்த்தீர்கள். ஆம் இது ஜூலை மாதம் 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம். இந்த அளவு தெளிவாக உள்ள படத்தினை நாசா தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது. புளூட்டோவின் மிகவும் வித்தியாசமான இந்த நிலப்பரப்பானது கூரிய பகுதிகளை கொண்டுள்ளதாகவும். அங்கு மீத்தேனால் பனிக்கட்டிகள் நிரப்பப்பட்டுள்ளன என்றும் ஆராய்சியின் மூலம் கண்டறிந்துள்ளனர். மேலும் சில ஆய்வு முடிவுகள் கூறுவதாவன, புளூடோவின் வித்தியாசமான சுற்றுவட்ட பாதையினால். அந்த கிரகம் சில காலகட்டத்தில் வெப்பப்படுத்தப்படுகிறது. அந்த கால கட்டங்களில். புளோட்டோவில் இருக்கும் உறைந்த மீத்தேனானது திரவ நிலையை அடையாமலேயே வாயு நிலையை அடைகிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இந்த கூர்மையான நிலப்பரப்புகள் அனைத்தும் புளூட்டோவின் உறைந்த மீத்தேன் ஆகும்.
கூர்மையான நிலப்பரப்புகள் அனைத்தும் மிக பெரிய மலைகளையும். மலைச்சிகரங்களையும் குறிக்கும்
கொஞ்சம் யோசித்து பாருங்கள் பெரிய பெரிய மலைச்சிகரங்கள் அனைத்தும் உறைந்த மீத்தேன் என்றால். இண்டர்ஸ்டெல்லர் திரைப்படத்தில் வருவது போல
Post a Comment