பழமையான கிரகம் | Oldest Exoplanet We Ever Discovered | பூமி போன்ற கிரகம்

விண்வெளியாளர்கள் பல ஆண்டுகளாக . பூமிக்கு அடுத்த படியாக இருக்கும் கிரகத்தினை தேடி வருகின்றனர். அது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். சரி. இப்போ. ரொம்பவும் பழமையான கிரகம் என்ன என்று தானே கேட்கிறீர்கள்.அதன் பெயர். PSR 1620-26b இது கடந்த 2003 ஆண்டு கண்டறியப்பட்டது. இது கண்டறியப்பட்ட இடம் எது என்றால் இன்னும் ஆச்சரியமாக இருக்கும். அது தான் மெஸ்ஸியர் 4 (M4) Messier 4 . மெஸ்ஸியர் 4 என்பது ஒரு கிலஸ்டர். அதுவும் குளோபுலர் கிலஸ்டர்.

இந்த கிரகம் நமது வியாழன் கிரத்தினை போன்று 2 மடங்கு அதிக எடை உடையது என கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் இது ஒரு கேஸ் ஜயன்ட். Gas Giant., வாயு அரக்கன் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

இது சாதாரண மற்ற எக்ஸோ பிளானட் போன்று உருவாகி இருக்கலாம் என்றாலும் ஆராய்சியாளர்கள் இதனை சற்றி வித்தியாசமாக தான் பார்க்கிரார்கள். ஏனெனில் இது இருக்கும் பகுதியானது மெஸ்ஸியர் 4 எனும் ஒரு குளோபுலர் கிலஸ்டர், இந்த பகுதியில் உள்ள PSR 1620 – 26 எனும் ஒரு பல்சார் நட்சத்திரத்தினை சுற்றிவரும் கிரகம் தான் இந்த PSR 1620 – 26B

 

இந்த கிரகமானது அதன் சொந்த நட்சத்திரம் உருவான காலத்தில் . உருவாகி இருக்கலாம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பல்சார் நட்சத்திரம் . மெஸ்ஸியர் 4 எனும் பகுதியல் இருப்பதாக நான் குறிப்பிட்டு இருந்தேன் . இந்த மெஸ்சியர் 4 பகுதி 13 பில்லியன் ஆண்டுகள் பழமையான ஒரு பகுதி. அங்கு இருக்கும் இந்த கிரகம் கிட்டதட்ட 12.7 பில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என. கண்டறியப்பட்டுள்ளது. அப்படி என்றால். இது ஒட்டு மொத்த பிரபஞ்சம் உருவாக 1 பில்லியன் ஆண்டுகளில் உருவாகிய ஒரு கிரகம்.

 உங்களுக்கு புரியவில்லையா நமது பிரபஞ்சத்தின் வயது 13.8 பில்லியன் ஆண்டுகள். 

Download Our App

More Posts to Read on:-

No comments