செவ்வாய் கிரகத்தின் அரிய புகைப்படத்தை வெளியிட்டது நாசா குழு

செவ்வாயில் 15 வருடங்களாக ஆராய்ச்சி பணியை மேற்கொண்டு வந்த ஆப்பர்ச்சூனிட்டி ரோவர் மூலம் எடுக்கப்பட்ட இரண்டு லட்சம் புகைப்படங்களிலிருந்து ஒரு சிலவற்றை தேர்ந்தெடுத்து இந்த 360 டிகிரி கோணம் உள்ள புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

இந்த புகைப்படமானது சுமார் 354 புகைப்படங்களில் கலவை அதுமட்டுமில்லாது மூன்று வித்தியாசமான நிற கலவைகளை மூலம் உருவாக்கப்பட்ட ஒரு பனோரமா புகைப்படமாகும் Panorama .

இந்த அனைத்து புகைப்படங்களும் ரோவெரில் உள்ள முன்பக்க panorama புகைப்படக் கருவியின் மூலம் , மே மாதம் 13ம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி 2018 ஆம் ஆண்டு வரையிலான புகைப்படங்களின் தொகுப்பு தான் நீங்கள் மேலே பார்த்த அந்த புகைப்படம்.

புகைப்படத்தின் இடது பக்க கீழ் பகுதியில் இருக்கும் ஒரு சில புகைப்படங்களில் நீங்கள் கருப்பு வெள்ளையை காண முடியும் ஏனென்றால் இது ரோவர் செயலிழக்கும் நாளிலிருந்து ஒரு சில நாட்கள் முன்னதாக தான் எடுக்கப்பட்டது அதனால் இதில் நிற கலவைகள் ஏற்றப்படவில்லை.

No comments