Triangulum Galaxy Details in Tamil | ட்ரையாங்குலம் அண்டவெளி

Triangular galaxy

ட்ரையாங்குலம் அண்டவெளியானது நமது பூமியிலிருந்து சுமார் 3 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு சிறிய சுருள் வடிவ அண்டம் ஆகும். சிறியது என்றவுடன் நீங்கள் ஏதும் கற்பனை செய்ய வேண்டாம் நானே சொல்கிறேன். நமது பால்வழி அண்டதினை 60% அளவினை கொண்டிருக்கும். அதாவது இந்த டிறையாங்குலம் அண்டவெளியை நீங்கள் கடந்து போக நினைத்தால் உங்களுக்கு சுமார் 60,000 ஒளியாண்டுகள் தேவைப்படும்.

மற்றும் வில்லியம் ஹர்ஷெல் என்ற வானவியலாலர். தனது வானவியல் பட்டியலில் மெஸ்ஸியர் கண்டறிந்த விண்வெளி பகுதிகளை இடம் பெற வைக்க கூடாது என்று திட்ட வட்டமாக இருந்தார் ஆனால் இந்த டிறையாங்குளும் அண்டவெளி யினை மட்டும் அவர் அதில் ஒரு விதிவிலக்காக பதிவிட்டுருந்தார் அதனை அவர் HV-17 என்று அவரின் அட்டவணையில் குறிப்பிட்டு இருந்தார்.

நெபுலா பட்டியலில் இந்த டிரையாங்குலம் அண்டவெளியில் உள்ள ஒரு பகுதியையும் (H-II) அவரின் அட்டவணையில் பதிவிட்டு இருந்தார். NGC 604 an H-II region in Triangulum Galaxy

சிறிய குழப்பம்:

இந்த அண்டவெளி ஐ ஆரம்ப நிலையில் இருக்கும் ஒரு விண்வெளியாளர் அதாவது உற்றுநோக்குபவர் பார்க்கும் போது இதனை பின் வீல் அண்டவெளியுடன் குழப்பி கொள்ள முடியும். ஆனால் pin wheel galaxy என்ற அண்ட வெளியானது வேறு மற்றும் டிரையாங்குல  அண்டவெளியானது வேறு. பின் வீல் அண்டத்தினை. M101 என்று தனியாக குறிப்பிடுவர்.

தன்மைகள்

இது நமது கேலக்ஸி யில் 60% அளவு உள்ள ஒரு பெரிய கேலக்ஸி ஆகும்.

இதில் சுமார் 40 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இது ஒரு சுருள் அண்டவெளி தான் ஆனால் எல்லா சுருள் அண்டவெளி களிலும் இருப்பதைப் போன்ற (பார்) என்று அழைக்கப்படக்கூடிய கம்பி இதில் மிகவும் லேசானதாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர். அதாவது அதன் மையத்தில் மிகவும் மெல்லிய கம்பி போன்ற அமைப்பு அல்லது கம்பி போன்ற அமைப்பு இல்லாமை.

கம்பி சுருள் அண்டவெளி என்றால். ஆங்கிலத்தில் இதனை barred spiral galaxy என்று அழைப்பர்.
(எ :கா)A barred spiral galaxy is a spiral galaxy with a central bar-shaped structure composed of stars. 

No comments