ISRO Prepared a Stadium Like Viewpoint for Public to watch a rocket launch | பொதுமக்கள் பார்வைக்காக புதிய முயற்சி

உங்களுக்கு விண்வெளி மற்றும் ராக்கெட் ஏவுதல் போன்றவற்றை பார்ப்பதில் மிகவும் அதிக ஆர்வம் உள்ளதா?

அப்படி என்றால் இன்று முதல் உங்களுக்கான ஒரு புதிய ஸ்டேடியம் தொடங்கப்பட்டுள்ளது.

எங்கு என்று கேட்கிறீர்களா?

இஸ்ரோவில் தான்.

பொதுவாக சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்படும் ராக்கெட்கள் அனைத்தையும் நாம் சென்னையை அடுத்துள்ள சூளூர்பேட்டை பகுதிக்கு சென்று அங்கிருந்து ஒரு சில கிலோ மீட்டர்கள் பயனம் செய்து பிறகு ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் நின்று நாம் அந்த ராக்கெட் ஏவுகணை பார்க்க முடியும்.

ஆனால் தற்போது இஸ்ரோ அறிவித்த அறிவிப்பின்படி, பொதுமக்களுக்காக பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் படியாக,

எவ்வளவு பேர் பார்க்க முடியும்? இஸ்ரோ பொதுமக்கள் ஸ்டெடியத்தில்

5,000 மக்கள் அமரும் வகையில் ஒரு ஸ்டேடியம் ஒன்றை தயாரித்துள்ளது இது முழுக்க முழுக்க ராக்கெட் ஏவுதலை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு என்றே பிரத்யேகமாக உள்ளது என்றும் இஸ்ரோவின் தலைவர் கே சிவன் அவர்கள் கூறியுள்ளார்.

இதன் தொடக்கமாக திங்கள்கிழமை நடைபெறும் DRDO EMISAT என்ற செயற்கைக்கோள் விண்ணில் ஏவும் நிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடு செய்துள்ளது. #PSLVC45

5000 பொது மக்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், பாதுகாப்பு கருதி 1000 ஆயிரம் பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

எப்படி பதிவு செய்து பார்ப்பது:

கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளுங்கள். இப்போது முடியாது ஏனென்றால். அதற்காக நேரம் முடிந்து விட்டது. அடுத்த ராக்கெட் ஏவுதல் போது பதிவு செய்து வைத்து கொள்ளுங்கள்.

https://www.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp

இதற்கான ட்விட்டர் பதிவை கீழே பார்க்கிறீர்கள்

No comments