Sun without sunspot in February |கரும் புள்ளிகள் இல்லாத சூரியன்
இதற்கு சோலார் மினிமம் என்று பெயர். இதேபோன்று சோலார் மேக்சிமம் என்றும் ஒரு குறிப்பிட்ட நிலை உள்ளது.
போன பிப்ரவரி மாதம் நம் சூரியனில் எந்தவித கரும்புள்ளிகள் இல்லாமல் இருந்ததை நம்மால் காண முடிந்தது.
இதுபோன்ற ஒரு நிகழ்வானது ஏற்கனவே 11 வருடங்களுக்கு முன்பு நடந்து இருந்ததை நம்மால் நினைவு படுத்த முடியும் அதே போல் இந்த முறையும் நிகழ்ந்துள்ளது.
நீங்கள் பார்க்கும் புகைப்படத்தில் இடது பக்க புகைப்படமானது 2012ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது அதில் அதிகபட்ச கரும்புள்ளிகளை சூரியன் கொண்டு இருப்பதை நம்மால் காண முடியும் , இதை தான் மேக்ஸிமம் என்று அழைக்கின்றனர்.
அதே போன்று வலது பக்கம் இருக்கும் புகைப்படமானது போன வருடம் ஆகஸ்ட் மாதம் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும் அதில் கிட்டத்தட்ட எந்தவித கரும்புள்ளிகளும் தென்படாமல் இருப்பதை நம்மால் காண இயலும், இதன் பெயர் தான் சோலார் மினிமம்.
அதேபோன்று,
அதாவது போன வருட ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்ததைப் போன்ற நிகழ்வானது போன மாதம் பிப்ரவரி மாதம் நிகழ்ந்துள்ளது
சூரியனின் இந்த தன்மையானது அதன் உக்கிர தன்மையை குறைவாக இருப்பதை காட்டுகிறது அதாவது நீங்கள் பார்க்கும் முதல் புகைப்படத்தில் சூரியனின் வெளிப்பகுதியில் அதிகமான சூரிய காற்று வீசுவது உங்களால் காண முடியும்.
ஆனால் இரண்டாவது படத்தில் உங்களால் அதை காண இயலாது சூரியன் ஏற்படும் இதுபோன்ற மாறுதல்களை பருவ நிலை மாறுதல்கள் என்றும் சிலர் கூறுகிறார்கள்.
எப்படி நம் பூமியில் காலநிலை மாறுதல்கள் இருக்கிறதோ அதே போன்று அனைத்து இடங்களிலும் இருக்கிறது என்றும் சூரியனும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்றும் ஒரு சிலர் கூறுகிறார்கள் ஆனால் இதுபோன்று ஏற்படும் காலங்களில் சூரியனானது மிகவும் வலிமை குறைந்ததாகவே காணப்படுவதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
Post a Comment