Magellan Cloud Details in Tamil |மெகல்லன் மேகங்கள் தமிழ்

Magellanic Clouds

முன்னுரை

மெஜெல்லன் மேகங்கள். இவை வான்வெளியில் தெற்குப் பகுதியில் நமது கண்களுக்கு புலப்படக்கூடிய இரு சுருள் வடிவ அண்டங்கள்.

இதனை nubecule magellanic என்றும் அழைப்பதுண்டு.

இதனை வித்தியாசமான சிறிய (irregular dwarf galaxy) கேலக்ஸி என்றும் கூறுவர்

இந்த கேலக்ஸி ஆனது நமது கேலக்ஸி மற்றும் ஆன்றோமிடா கேலக்ஸி அடங்கிய (Local galactic group) லோக்கல் குரூப்பில் இருக்கும் ஒரு கேலக்ஸி ஆகும்.

இதனை பெரிய மேஜில்லன் மேகம் மற்றும் சிறிய மேகம் ( large and small megallan cloud) என இரு வகையாகப் பிரிப்பார்.

மேலும் இந்த கேலக்ஸியானது நமது பால்வீதி அண்டத்தினை சுற்றி வருவதாகவும் ஒரு பிரபலமான கூற்று நிலவுகிறது.

ஆரம்பம்

இந்த பகுதியினை முதன்முதலில் 889 1st மில்லினியம் ஆண்டுகளின் போது அரபு நாட்டைச் சார்ந்த இப்னு குதைபா என்ற வானவியலாளர் தன்னுடைய புத்தகமான அல் அன்பா என்ற புத்தகத்தின் குறிப்பிட்டிருந்தார் இதுதான் முதன் முதலில் இந்த குறிப்பிட்ட பகுதியை பற்றி முதன் முதல் இடம்பெற்ற மிகவும் பழங்கால புத்தக குறிப்பாகும்.

அதன் பிறகு இலங்கையைச் சார்ந்த ஒரு வானியல் புத்தகங்களில் இதே பகுதியினை விண்வெளியில் பார்த்ததாக குறிப்பிட்டிருந்தனர் அதன் பெயர் மகாமேரு புருவதையா என்று குறிப்பிடப்பட்டிருந்தது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் இதுதான் இரண்டாவது குறிப்பாகும்.

இதன்பிறகு ஐரோப்பாவில் 16ஆம் நூற்றாண்டுகளில் பீட்டர் மற்றோர் மற்றும் ஆண்ட்ரியா கொராலி, என்ற இத்தாலிய நாட்டு அறிஞர்களின் குறிப்பில் இது இடம் பெற்றிருந்தது.

இதன் பிறகு 1756 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நட்சத்திரங்கள் பற்றிய குறிப்பில் இந்த மெஜில்லன் மேகங்கள் பிரெஞ்ச் வானவியளாளர் களால் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து 1847ம் ஆண்டு வில்லியம் ஹெர்செல் என்பவர் நெபுலா மற்றும் கேலக்ஸி பற்றிய 400 பக்க ஆராய்ச்சி புத்தகம் ஒன்றை வெளியிட்டார் அதில் அவர் இந்த குறிப்பிட்ட மெக்கல்லன் மேகங்களை வகைப்படுத்தி இருந்தார்.

பண்புகள்

முன்பு குறிப்பிட்டது போலவே இந்த கேலக்ஸியில் நம்மால் வெறும் கண்களால் பார்க்க இயலும் அதுவும் தெற்கு அரைக்கோளத்தில் இருந்து

இதை பார்ப்பதற்கு பால்வெளி அண்டத்தின் ஒரு பகுதியை போன்று தெரியும்

இந்த இரண்டு கேலக்ஸி களுங்களுக்கும் இடையே உள்ள தொலைவு, அதாவது சிறிய மற்றும் பெரிய மெகல்லன் மேகங்கள் இடையே உள்ள தூரம் ஆனது 75,000 ஒளி ஆண்டுகள். என கணித்துள்ளனர்

LMC என்று அழைக்கப்படக்கூடிய பெரிய மெகல்லன் மேகங்கள் பூமியிலிருந்து சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் (160,000) ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன.

மற்றும்

SMC என்று அழைக்கப்படக்கூடிய சிறிய மேஜெல்லைன் மேகங்கள், பூமியிலிருந்து சுமார் 2 லட்சம் (2000,000) ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள தாகக் கணிக்கப் பட்டுள்ளது.

இந்த இரண்டு கேலக்ஸி மேகக் கூட்டங்களும் அதன் அளவில், ஒன்றை விட ஒன்று 2மடங்கு பெரியதாக இருக்கலாம். என கூறுகின்றனர், முறையே

LMC =14000 ஒளியாண்டுகள் diameter

SMC =7000 ஒளியாண்டுகள்

Diameter

Milky way=100000 ஒளியாண்டுகள்

அதாவது அந்த குறிப்பிட்ட கேலக்ஸியை கடந்து செல்ல 14 ஆயிரம் ஒளியாண்டுகள் சிறிய கேலக்சி கடந்து செல்ல 7 ஆயிரம் ஒளியாண்டுகள் ஆகும் இதனை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக பால்வெளி அண்டத்தின் தொலைவு (ஒளியாண்டுகலில்) கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு கேலக்ஸி கூட்டங்களின் எடையானது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை ஏனென்றால் இந்த இரண்டு கேலக்ஸி களிலும் மையப்பகுதியில் ஒரு சிறிய குறிப்பிட்ட அளவு மேகங்கள் மட்டுமே சூரியன் களாக அதாவது நட்சத்திரங்களாக உருமாறி இருக்கலாம், மற்றவை இன்னும் டார்க் மேட்டர் ஆகவே உள்ளன. எனவே இந்த கேலக்ஸியை எவ்வளவு எடை உள்ளது என்று கணிப்பது மிகவும் கடினமாக ஒன்றாக உள்ளது.

எனினும் இப்போது சில காலங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட ஒரு தோராயமான அளவீடுகளின் அடிப்படையில் நமது கேலக்ஸியில் பத்தில் ஒரு பகுதி எடையை இந்த இரண்டு கேலக்ஸி களும் கொண்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது.

அப்படி ஒருவேளை இது பத்தில் (1/10) ஒரு பகுதி எடையை கொண்டு இருக்குமேயானால் நமது லோக்கல் கேலக்ஸி குரூப்பில் இருக்கும் 50 கேலக்ஸி களில் அதிக எடை கொண்ட காலக்ஸிகளின் நான்காம் இடத்தை பிடிக்கும் அளவு எடையை இது கொண்டிருக்கும்.

அது மட்டும் இல்லாமல் ஒரு சில வானியலாளர்கள் இந்த SMC ஆனது அதன் பெரிய Magellan மேகக்கூட்டம் LMC யை வலம் வருவதாகவும் இருக்கலாம் என கூறி உள்ளனர்.

கடந்த 2003ம் ஆண்டு அளவிடப்பட்ட Hubble விண்வெளித் தொலைநோக்கியின் அளவீடுகளின் அடிப்படையில் இந்த சிறிய Magellan cloud ஆனது சுமார் குறைந்த பட்சம் 4பில்லியன் ஆண்டுகளில் தனது முதல் சுற்றினை முடிக்கும். எனவும் கணக்கீடுகள் கண்டறியப்பட்டு உள்ளது.

குறிப்பு

Mini Magellan clouds

D.S Mathewson

V.L Ford

மற்றும் N. Viswanathan என்ற மூன்று வானியலாளர்கள் இந்த மிகச் சிறிய Magellan cloud மேகக்கூட்டம் ஆனது SMC என்று அழைக்கப்படக்கூடிய சிறிய மேகக் கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்து இருக்கலாம் என கருதுகின்றனர். அதுவும்

நாம் பூமியில் இருந்து பார்த்தால் தெரியாத நிலையில் இது SMC உடைய பின் பகுதியில் அமைந்து இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

அப்படி அதுபோல ஒரு சிறிய Magellan கேலக்ஸி அமைந்து இருக்குமேயானால் அது சுமார் 30 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்திருக்கலாம் என கருதப்படுகிறது

Facts here

No comments