Light Year in Tamil | ஒளி ஆண்டு என்றால் என்ன?| Space News Tamil
ஒரு பொருள் நம் கண்களுக்குத் தெரிய வேண்டுமானால், கண்ணைத் திறந்து பார்த்தால் மட்டும் போதாது.
அதற்கு வெளிச்சமும் தேவை. அப்போதுதான் பார்க்கும் பொருள் நம் கண்களுக்குத் தெரியும் ஒளியை மையமாக வைத்துத்தான் நட்சத்திரங்களுக்கு இடையே உள்ள தூரத்தை கணக்கிடுகின்றனர். அதற்கான அலகுகளை தான். ஒளி நிமிடம்,ஒளி ஆண்டு என்று அழைக்கிறோம்
சூரியன் நெருப்பு கோளமாக இருப்பதால், அதில் இருந்து வெளிப்படும் ஒளி கோடிக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவிற்குப் பரவுகிறது. சூரியக் கதிர்கள் பூமிக்கு வரும்போது, நமக்கு வெளிச்சம் கிடைக்கிறது. ஒளி ஒரு வினாடியில் 3 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கிறது. இந்த தூரத்திற்கு ‘ஒளி வினாடி ‘ என்று பெயர். ஒரு நிமிடத்தில் ஒளி பாயும் தூரம், ‘ ஒளி நிமிடம்’ எனப்படும். அதன்படி, ஒளி நிமிடத்தின் தூரம் 3,00,000 x 60=1,80,00,000 கிலோ மீட்டர். இப்படி கணக்கிடும்போது, ஒரு ஆண்டில் ஒளி பாயும் தூரம் அதாவது ஒளி ஆண்டு என்பது 9,460,800,000,000 கிலோ மீட்டர் Aல்லது 9,4605284 x 10^13 மீட்டர் என்ற அளவைக் குறிக்கிறது
Post a Comment