ISRO TV is coming|வருகிறது இஸ்ரோ டிவி

ஆகஸ்டு 12 , இஸ்ரோ ஸ்தானத்தின் முன்னோடி மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை யாக கருதப்படும் விக்கிரம சாராபாய் வின் 99 ஆவது பிறந்த நாள் விழாவான நேற்று, இதனை இஸ்ரோ அறிவித்தது.

ஆகஸ்ட் 12 1919 ல் பிறந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் கட்டடமைப்பாளர். விக்ரம் சாராபாய் யின் நினைவாக , இஸ்ரோ நிறுவனமானது தான் செலுத்த உள்ள சந்திரயான் 2 விண்கலத்தில் உள்ள லெண்டரில் (lander) பெயரை “விக்ரம் ” என்றே சூட்டியுள்ளது.

மேலும். இந்திய இளைஞர் மற்றும் அறிவியல் சார்ந்த துறைகளில் மாணவ மாணவிகளுக்கு ஆர்வத்தினை அதிகமாக்க, இஸ்ரோ நிறுவனம் தனக்கென பிரத்தியேகமாக “இஸ்ரோ தொலைக்காட்சி “ யை அந்தந்த பிராந்திய மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் அதை பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என இஸ்ரோ தரப்பு கூறியுள்ளது.

Source: http://idrw.org/isro-set-to-launch-its-tv-channel/

No comments