OSIRIS-REx Arriving On Its Destination | ஆஸ்டிராய்டு பென்னு வை நெருங்குகிறது ஓசிரிஸ் ரெக்ஸ்




OSIRIS-REx என்பது ஆஸ்டிராய்டு Sample Return ஐ மையமாக கொண்ட ஒரு மிஷன். இது 2016 செப்டம்பர் மாதம் வின்ணில் செலுத்தப்பட்டது. செலுத்தப்படும் போது இதன் இலக்காக இருந்த ஆஸ்டிராய்டு, “பென்னு” என்று சொல்லக்கூடிய மிகவும் பழைமையான ஆஸ்டிராய்டு. “Bennu Asteroid”, இப்போது வந்த தகவலின் அடிப்படையில் இன்னும் இரண்டு மாதங்களில். ஓசிரிஸ் ரெக்ஸ் ஆனது தனது இலக்கை அடைந்து விடும். 



மேலும் இந்த விண்கலமானது. அந்த குறிப்பிட்ட ஆஸ்டிராய்டை சில காலங்களுக்கு வட்டமடித்து அதனை மேப் செய்யும். (Map ) பிறகு அதில் ஒரு பாதுகாப்பான மற்றும் வசதியான இடத்தினை தேர்வு செய்து அதில் தரையிரங்கும்.  அதன் பிறகு அந்த கலனில் உள்ள அதிக அழுத்தம் கொண்ட ஹைற்றஜன் குழாயின் மூலம் ஆஸ்டிராய்டு பென்னு வின் மேற்பரப்பில் ஒரு துளையிடும்., அதன் மூலம் வெளிவரக்கூடிய தூசி , துகள்கள், மற்றும் அங்கு கிடைக்கக்கூடிய அனைத்தையும். உறிஞ்சி எடுத்துக்க்கொண்டு தனது விண்கலத்தில் உள்ள ஒரு பாதுகாப்பான பெட்டகத்தில் வைத்துவிடும். பிறகு இது பூமியை நோக்கிய பயனத்தினை ஆரம்பிக்கும். 





கணக்குகளின் அடிப்படையில் வருகின்றன் 2013 ஆம் ஆண்டு ,  செப்டம்பர் மாதம் 24 தேதி வாக்கில் தான் சேகரித்து வைத்த பாதுகாப்பு பெட்ட கத்தினை அந்த விண்கலம் பூமியின் மேற்பரப்பில் வீசிவிட்டு செல்லும். வீசப்பட்ட அந்த Sample மாதிரி நிறைந்த பாதுகாப்பு பெட்டகமானது அமெரிக்காவில் உள்ள “ஊடா””Utah Western America பாலைவனப்பகுதியில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



கிடைக்கும் மாதிரிகளை ஓசிரிஸ் ரெக்ஸ் ன் ஆராய்ச்சி குழுவானது கால்வாசி மட்டும் எடுத்து ஆராயும் மீதி முக்கால்வாசி மாதிரிகள் உலக முழுவதும் இருக்கும் ஆராய்சியாளர்களுக்காக கொடுக்கப்படும் என நாசா விஞ்சானிகள் அறிவித்துள்ளனர்.  அப்படிஎன்றால் இது எவ்வளவு எடையுள்ள மாதிரிகலை சேகரிக்கும் என்று கேட்கிறீர்களா? ஓசிரிஸ் ரெக்ஸ் ன் விஞ்சானிகள் கூறும் போது , குறைந்த பட்சம் 60 கிராம் முதல் 2 கிலோ வரை கிடைக்கும் என கூறுகிரார்கள். . அது சரி எதற்க்காக இந்த ஆஸ்டிராய்டு “பென்னு ” என்று கேட்டீர்களேயானா. இது ஒரு பெரிய கதை. உண்மையில் இந்த ஆஸ்டிராய்டு தான் , நமது பூமிக்கு அருகில் உள்ள ஆஸ்டிராய்டு. அது மட்டும் அல்ல. அளவிளும் ஓரு விங்கலம் தரையிரங்கும் அளவுக்கு பெரிய ஆஸ்டிராய்டு. , முக்கியமாக இது நமது பூமியை விட மிகவும் பழமையானது என கனிக்கப்பட்டுள்ளது.  (4.7 பில்லியன் ஆண்டுகள் ) அது மட்டும் இல்லைங்க. இதன் உள்ள பொருட்கள் மிகவும் அரிய வகை , Iron, Platinum போன்ற தனிகவகைகள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 



Origins, Spectral Interpretation, Resource Identification, Security, Regoli – – OSIRIS – REx

Meaning of OSIRIS-REx


VIDEO describing MISSION 


  1. https://www.nasa.gov/osiris-rex
  2. https://en.wikipedia.org/wiki/OSIRIS-REx

No comments