46P/Wirtanen closest apporoch | பூமிக்கு மிக அருகில் வரும் விண்கல்

நீங்கள் பார்க்கும் இந்த புகைப்படமானது டிசம்பர் 2ம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும் இது இந்த மாதம் முழுவதுமே மிகப்பெரிய அல்லது சற்று பெரிய தொலைநோக்கிகளுக்க்கு புலப்படும் என்று ஏற்கனவே நாசாவால் மற்றும் உலகளாவிய விண்வெளியாளர்களால் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

அப்படிப்பட்ட ஒரு நடுத்தரமான பெரிய தொலைநோக்கியால் இந்த மாதம் 2nd இரண்டாம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

மேலும் இந்த 46P/Wirtanen எனும் விண்கல்லானது கிட்டத்தட்ட 1.1 கிலோ மீட்டர் அகலம் கொண்டது என்றும் இது தோராயமாக அதன் மிகவும் அருகில் வரக்கூடிய காலத்தில் அதாவது பூமிக்கு மிக அருகில் வரக்கூடிய காலத்தில் அது 0.07 விண்வெளி அலகு AU அல்லது அது சந்திரனைப் போன்று 30 மடங்கு தொலைவில் இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
7.1 million miles (11.4 million kilometers, or 30 lunar distances)

இந்த விண்கல்லானது பூமியை மிக அருகில் கடக்கும் விண்கற்களில் 10ல் ஒன்று அதுவும் கடந்த 70 வருடங்களில்.

அதுமட்டுமின்றி வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது டிசம்பர் 16ஆம் நாள் இந்த விண்கல்லானது நம் மனித கண்களுக்கு புலப்படும் அளவு மிகவும் அருகில் வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

No comments