New Horizon at Ultima Thule | Historic Kuiper Belt Object Flyby in the Space History | அல்டிமா துலே யை சந்திக்க போதும் நியூ ஹரைசோன் விண்கலம்

அல்டிமா துலே நியூ ஹரைசோன் சந்திக்கும் நிகழ்வு
new illustration from NASA

வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு

வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வுக்காக காத்திருக்கின்றனர் அனைத்து விண்வெளியாளர்களும், அது என்னவென்றால்.நியூ ஹரைசோன் விண்கலத்தின் இரண்டாம் இலக்கான அல்டிமா துளெ என்ற ஒரு கைப்ப்பர் பெல்ட்பகுதில் உள்ள ஒரு விண்வெளி பொருள். இது கைப்பர் பெல்ட் பகுதியில் இருக்கும் ஒரு புதிரானவிஷயம். இதனை ஒரு சிறிய கிரகம் என்று கூட பலர் கூறுகின்றனர். ஆனால் உண்மை என்னவெண்றால்  அது என்ன என்று யாருக்கும் சரியாக தெரியாது. இதுஒரு புதிர் நிறைந்த விண்வெளி பொருள்.

அல்டிமா துலே

இந்த அல்டிமாதுளே வானது புளூட்டோவிலிருந்து சுமார் 1 பில்லியன் மைல் தொலைவில் உள்ளது. பூமியில்இருந்து சுமார் 4.1 பில்லியன் மைல் தொலைவில் உள்ளது. நியூ ஹரைசோன்விண்கலத்தின் இரண்டாம் இலக்கான இதனை இன்னும் 2 தினங்களில் அனைத்து விஷயங்களையும் நாம்படிக்க இருக்கிறோம். இதுவரையில் கைப்பர் பெல்ட் பகுதியில் உள்ள எந்த பொருளையும் நாம்கடந்து சென்றது கிடையாது அதாவது (Flyby) இது தான் முதல் முறை.

நியூ ஹரைசோன் விண்கலம்

அது சரி நியூஹரைசோனின் முதல் இலக்கு என்ன தெரியுமா .? அது தான் புளூட்டோ. அதுதான் ஊருக்கே தெரியும்எங்கிறீர்களா? உண்மையில் இது புளோட்டோவினை 2015 ஆம் இது கடந்து சென்றது அதாவது(Flyby) இதற்கு ஒரு ஆண்டுக்கு முன்புதான் விண்வெளியாளர்கள் இந்த கைப்பர் பெல்ட் பொருளானஅல்டிமா துளேவை கண்டறிந்தனர். அந்த நேரத்தில் அருக்கில் இருந்த ஒரே விண்கலம் இந்த நியூஹரைசோன் தான்.  அதனால் உடனே புளுட்டோவை கடந்தஉடன்  அதன் இரண்டாம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது..

Old Illustration OF NH and Mu69 , kuiper Belt in tamil #NewHorizon in Tamil

Indepth விவரம் / செய்திகள்

இப்போது உள்ளநிலமையின் படி நியூ ஹரைசோனிலிருந்து பூமிக்கு ஒரு தகவல் வந்து சேர்வதற்கு கிட்டத்தட்ட6 மணி நேரம் மற்றும் 8 நிமிடங்கள் எடுக்கிறது. ஒரு தடவை தகவலை கொடுத்து பெற்றிட(Signal Round Trip) சுமார் அரை நாள் எடுக்கும் அதாவது 12 மணி நேரம் 15 நிமிடங்கள்.அதனால், விண்கலமானது அல்டிமா துளேவை கடக்கும் போது தனது அனைத்து அறிவியல் உபகரனங்களையும்பயன்படுத்த வேண்டும். அது வும் , எந்த வித பிரச்சனையும் இல்லாமல், 

இந்த அல்டிமாதுளே வை நியூ ஹரைசோன் விண்கலமானது சுமார்  வினாடிக்கு39,000 மைல் என்ற வேகத்தில் கடந்து செல்லும். அது மட்டும் இன்றி, கடந்து செல்லும் போதுவிண்கலத்திற்கும் அந்த அல்டிமா துளேவிற்கும் இடையே  வெறும் 2,200 மைல் தான் தூரம் இருக்கும் அதாவது3540 கிலோ மீட்டர், அந்த அளவு அருகில் இது கடக்கும் என்று நியூ ஹரைசோனின் பொறியாளர்கள்கூறுகிறார்கள்.( இது லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்திற்கும் வாஷிங்க்டன் DC நகருக்கும் இடையேஉள்ள தூரமாகும்.)

ஜனவர் 1 ஆம்தேதி விண்கலம் இதனை கடப்பதை அதன் தரவுகளை மட்டும் நேரடி ஒளிபரப்பு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது.குழுவின் முழு அட்டவனையயும் நீங்கள் கீழே காணலாம். ஜனவர் 2 ஆம் தேதி முதல் அந்த புதிர்நிறைந்த கைப்பர் பெல்ட் பொருள் என்ன வென்று தெரியவரும்.

Popular Posts

No comments