Jezero Crator NASA's 2020 Rover landing location confirm | நாசாவின் 2020 ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கும் இடம்
நாசா 2020 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப இருக்கும் மார்ஸ் 20 20 ரோவர் எங்கு இறங்க வேண்டும் என்று நாசாவின் சார்ந்த jet propulsion laboratory விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 15 சாத்தியமான தரையிறங்கும் இடங்களில் குறிப்பிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டது 8 தரை இறங்கும் இடங்கள், அந்த 8 தரையிறங்கும் இடங்களையும் 2015ஆம் ஆண்டு நடந்த பொது வாக்கெடுப்பில் பொதுமக்கள் தேர்ந்தெடுத்த குறிப்பிட்ட மூன்று இடங்களில் ஒன்றான ஜிசிரோ பள்ளத்தாக்கினை விஞ்ஞானிகள் தேர்வு செய்துள்ளனர்,
இந்தப் பள்ளத்தாக்கு கிட்டத்தட்ட 22 மைல் அகலம் கொண்ட ஒரு ஏரியாக இருந்திருக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது, அப்படி ஒருக்கால் இது பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏரியாக இருந்திருந்தால் (நமது பூமியில் ஏரிகளில் உயிரினங்கள் வாழும் அதெப்போல)செவ்வாய் கிரகத்தில் இந்த குறிப்பிட்ட இடத்தில் ஏரி இருந்திருக்கும் பட்சத்தில், உயிரினங்கள் வாழ்ந்து இருக்கும்பட்சத்தில் அதன் காலப்போக்கில் தண்ணீர் வற்றி அதில் உள்ள உயிரினங்கள் மடிந்து அந்த ஏரியின் கீழ்ப் பக்கத்தில அதாவது அடியில் அதன் படிமங்கள் மற்றும் அது உயிர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் அதிகம் கிடைக்கப் பெறலாம் என்று கருதுகின்ற விஞ்ஞானிகள் இதன் அடிப்படையாகவே இந்த மார்ஸ் 2020 ரோவர் ஐ jezero crater பகுதிக்கு அனுப்ப நாடுகின்றனர்.
Post a Comment